முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சடடச்சிக்கலான சோதனைக் களத்தில் பழனிசாமி தேஜகூ முதல்வர் வேட்பாளர் யார்? கூட்டணிக் குழப்பம் தீர்வை நோக்கி

தமிழ்நாடு அரசியல் களத்தில் பாஜகவிடம் பிடி கொடுக்காமல் கறார் காட்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை, சட்ட ரீதியான சிக்கல்கள் மூலம் பணிய வைக்க டெல்லி மேலிடம் திட்டமிடுகிறதா என்கிற கேள்வி இப்போது எழுந்துள்ளது. அது பற்றிய ஒரு  எக்ஸ்க்ளூசிவ் தகவல்  விரிவாகப் பார்ப்போம்.

என்டிஏ கூட்டணிக்குள் தவெக விஜய் வருவதற்காக பாஜக தேசிய தலைமை பல ரகசிய உத்தரவாதங்களைக் கொடுத்திருந்தது.. ஆனால், "பாஜக தருகிற அந்த உத்தரவாதங்களுக்கு அதிமுக தலைமைக்கு உடன்பாடு வரவில்லை முதலில் அவர்களிடமிருந்து ஒப்புதலைப் பெறுங்கள்" என்று பாஜகவுக்குத் தகவல் தந்து விஜய்யும் ஒரு செக் வைத்தார். ஆனால் இங்கு உள்ள கூட்டணி சின்டிகேட் அரசியல் காரணங்களை மீறி அது நடக்கவில்லை.


பிரதமர் வர்றாரு. செல்வம் என் கூட வந்து மேடையில் நிக்கனும்னு மேலூர் தொகுதி MLA-வை கூடவே கூட்டி சென்றிருக்கிறார் எடப்பாடி கே. பழனிசாமி 
அவர் தான் மேலூர் MLA - பெரியபுள்ளான் (எ) செல்வம், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். 
ஆனல் தற்போது அமமுக கேட்கும் தொகுதி மேலூர் அதில் காலமான முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சாமி மகனை நிறுத்த  டி. டி. வி.தினகரன் திட்டம் முறியடிக்க முயற்சி இது 

இதனையடுத்து, பாஜகவின் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசனையின் பேரில் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ்கோயல், எடப்பாடி கே.பழனிசாமியுடன் விவாதித்தார். கான்ஃப்ரன்ஸ் காலில் நடந்த  விவாதத்தின் போது, பாஜகவின் துணைத் தலைவரான ஜே.பி. எனும் ஜெயப்பிரகாஷும் இணைந்திருந்தார். பியூஸ்கோயலுக்கும் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் இணைப்புப் பாலமாக அடிக்கடி இருந்து வருபவர் ஜெயப்பிரகாஷ்.

அழுத்தக்காரர் எடப்பாடி கே.பழனிசாமி கான்ஃப்ரன்ஸ் காலில் நடந்த அந்த விவாதத்தின் போது, பாஜக தரப்பிலிருந்து விஜய்க்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதங்களை சுட்டிக்காட்டிப் பேசிய பியூஸ் கோயல், "திமுகவை வீழ்த்த விஜய்யைக் கூட்டணிக்குள் கொண்டு வருவது தான் ஒரே வழி. திமுகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிப்பது அதிமுக-பாஜக இரு கட்சிகளுக்கும் அவசரத் தேவை.

ஆனால் விஜய்க்கு அப்படியில்லை, அவர் தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் இழப்பதற்கு அவரிடம் வேறு எதுவும் இல்லை.. வெற்றி தோல்வி சகஜம் என ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டு அவர் மீண்டும் சினிமாவுக்குப் போய்விடலாம். ஆனால் அதிமுக-பாஜகவுக்கு அப்படியில்லையே! அதிமுக ஆட்சிக்கு வராது போனால் உங்கள் நிலை என்னவாகும் என யோசியுங்கள். உங்களுக்கு எதிராக உங்கள் கட்சியின் சீனியர்களே கலகம் செய்வார்கள். அது உங்களின் தலைமைக்கே ஆபத்தை உருவாக்கலாம்.

திமுகவுக்கு செக் மட்டுமல்லாமல், அடுத்த 5 ஆண்டுகாலம் அதிமுகவைக் காப்பாற்ற நீங்கள் போராட வேண்டியதிருக்கும்.. அதற்குள் உங்களை நம்பியுள்ள அதிமுக தலைவர்கள், நிர்வாகிகள் என பலரும் திமுகவுக்கும், விஜய் கட்சிக்கும் தாவிவிடுவார்கள்.. இது போன்ற இழப்புகளை நீங்கள் சந்திக்க வேண்டியதிருக்கும்..

அதனால், திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டிய தேவை நமக்குத்தான் இருக்கிறது. அதனால், என்.டி.ஏ. கூட்டணிக்கு விஜய்யைச் சேர்ப்பதில் பல நன்மைகள் இருக்கிறது.. விஜய்க்கு ஓகே சொல்லுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று எதார்த்த அரசியலையும் எதிர்கால அரசியலையும் பேசியிருக்கிறார்.

பாஜக வைத்த நிபந்தனைக்கு எடப்பாடி கே.பழனிசாமி, "விஜய்யை கூட்டணியில் சேர்க்க நான் எதிர்க்கவில்லை.. ஆனால் கூட்டணிக்காக அவர் சொல்லும் நிபந்தனைகளை என்னால் ஏற்க இயலாத சூழல். இப்பவும் நான் சொல்வது, திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கு இணையாக அதிமுக போட்டியிடும்.

ஒன்றிரண்டு வேண்டுமானால் கூடுதல் குறைவாக இருக்குமே தவிர, மிகவும் குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட அதிமுக சீனியர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

அதே சமயம் நமது கூட்டணிக்கு அவர் வருவதாக இருந்தால் 25 தொகுதிகளைத் தர முடியும்.. இது கௌரவமான சீட் தான். மேலும் வலியுறுத்தப்பட்டால் அதிகப்பட்சம் 30 தொகுதிகளை அதிமுக ஒதுக்கும். இதைத் தாண்டி வேறு எந்த நிபந்தனைகளையும் என்னால் ஏற்க இயலாது. அதிமுக சீனியர்களும் 30-க்கு அதிகமாக சீட் தர ஒப்புக்கொள்ளமாட்டார்கள்" என்று கூட்டணித் தலைவராக நினைத்துத் தெரிவித்திருக்கிறார். 






ஒருகட்டத்தில் சீட் எண்ணிக்கையைக் கடந்து இரண்டரை ஆண்டு சி.எம், துணை முதல்வர், கேபினட் என்கிற கோரிக்கைகள் தொடர்பான பேச்சு வந்தபோது, "இவைகளுக்கு ஓகே சொல்ல முடியாது. கூட்டணி ஆட்சி என்கிற விவாதமே தேவையற்றது. அதில் எங்களுக்கு விருப்பமில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆலோசிக்க வேண்டியதை இப்போது பரிசீலிக்கக் கூட என்னால் முடியாது; ஓகே சொல்லவும் இயலாது. இதுதான் எங்களின் நிலைப்பாடு" என தெளிவுபடுத்தியுள்ளார் எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுகவின் இந்த பதில்களில் அதிர்ச்சி ஆன பியூஸ்கோயல், உடனடியாக எடப்பாடி கே.பழனிசாமியின் கூட்டணி நிலைப்பாட்டை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குத் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, நடிகர் விஜய்யை மையப்படுத்தி அடுத்தகட்ட நகர்வுகளைத் தொடரலாமா அல்லது அதிமுகவிடமிருந்து பாஜகவிற்கான சீட் எண்ணிக்கை குறித்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாமா என உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது..

இந்தச் சூழலில் தான், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக, சொத்துக்களை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு திடீரென்று உயிர் பெற்றுள்ளது.. இந்த வழக்கு குறித்து நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நிலுவையில் உள்ள இந்த வழக்கு ஏப்ரல் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில்  உயிர் பெற்றுள்ள இந்தச் சொத்து மறைப்பு வழக்கு, எடப்பாடி கே.பழனிசாமிக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பெரும் நெருக்கடியைக் கொடுக்கக்கூடியது.

அடுத்து தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தகவல்களை மறைத்தது நிரூபிக்கப்பட்டால், அது அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கே ஆபத்தாக முடிவதோடு, எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் தடையை ஏற்படுத்தலாம்.  இந்தச் சூழலைத் தான் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள பாஜக மேலிடம் திட்டமிடுவதாகத் தெரிகிறது.





எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து பிடிவாதம் காட்டினால், இந்த வழக்கின் வேகத்தை அதிகரித்து அவரைச் சட்டச் சிக்கலில் முடக்குவது அல்லது கட்சியின் மற்ற சீனியர்களைத் தங்கள் பக்கம் இழுத்து அதிமுகவை பலவீனப்படுத்துவது என பாஜக காய் நகர்த்தவும் முயலலாம்.

டெல்லியின் இந்த "செக்" எடப்பாடி கே. பழனிசாமியை பணிய வைக்குமா அல்லது அவர் சட்டப் போராட்டத்தின் மூலம் மீண்டு வருவாரா என்பதுதான் தற்போதைய தமிழ்நாடு அரசியலின் மில்லியன் மதிப்பு வினா.அதற்கு விடை நாளை மறுநாள் நகரும் அரசியல் தெரியும் பார்ப்போம்.!இநத நிலையில் தேர்தல் பணி உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ராஜாங்கம் எத்தகையது என்பதற்கு இந்த தேர்தல் காலத்தில் பறக்கும் படையின் பெயரில் நடத்தும் திருவிளையாடல்களே சாட்சியாகும். அறிவிப்பு வந்து 

மூன்றே நாட்கள் தான்! ஆகிரது 



தமிழ்நாடு தழுவி தற்போது வரை ரூபாய் .42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்துள்ள்ளார்களாம்! தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் ஆனந்த பெருமிதத்துடன் இதைத் தெரிவித்துள்ளார். அடடே..என்னே கடமை உணர்வு! 

அரசியல்வாதிக்கு அஞ்சா  பறக்கும் படை வீரர்கள்..! ஆஹா என்று விபரம் அறியாத பலய் பாராட்டத்தான் செய்வார்கள்.

ஆனால், யதார்த்ததில் தேர்தல் பறக்கும் படையினர் இப்படி பறிமுதல் செய்வது, பெரும்பாலும் அப்பாவி மக்களிடமிருந்து தான் என்ற உண்மை தான் சுடுகிறது.  நேற்றைய வரை ஊவல் செய்து சம்பாதித்து சொத்துக்களை குவிதத அலுவலர்கள் பலர் தானே பறக்கும் படையோ பறக்காத படையிலோ இருப்பவர்கள். 

தமிழ்நாடு முழுக்க தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகளாம்! 

9 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என்ற விகிதத்தில்,  2,160 பறக்கும் படைகள், 2,160 நிலைக் கண்காணிப்புக் குழுக்களாக உள்ளனர்

அரசியல்வாதிகள் இதனால் எல்லாம் கொஞ்சமும் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களின் கொண்டாட்டத்தில் எதுவும் குறையப் போவதுமில்லை. ஆனால், சாதாரண மக்கள், சிறு வியாபாரிகள், சம்சாரிகள் பாடு தான் இன்னும் கொஞ்ச நாளைக்கு திண்டாட்டமோ, திண்டாட்டம்!

ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு பத்திரிகையாளனாக நாம் பார்த்த, என் கவனத்திற்கு வந்த பல விவகாரங்கள் என்னுள்  என்னென்ன பதற்றங்களை, ஆற்றாமைகளை, கொந்தளிப்புகளை எல்லாம் ஏற்படுத்தியுள்ளன, என நினைத்துப் பார்க்கும் நிலை.

மகளின் கல்யாணத்திற்காக 25 ஆண்டுகளாக சிறுகச் சிறுக சேகரித்து நகை வாங்கித் திரும்பிய அந்த எளிய தந்தை பறக்கும் படையினரிடம் நகையைப் பறி கொடுத்து, அலையாய் அலைந்து, கண்ணீர் விட்டு கடைசி வரை திரும்பப் பெற முடியவில்லை..

அவர் நகை வாங்கிச் சென்றது நேரடியாக நகை செய்யும் பொற்கொல்லரான ஆச்சாரியிடம்!  பெரிய நகைக் கடையிடமிருந்து வாங்கி இருந்தால் ரசீது காட்ட முடியும்!  கிராமத்து மக்கள் சிறிய நகைப் பட்டறை வைத்திருக்கும் ஆச்சாரிகளிடம் பாரம்பரியமாக நகை செய்து வாங்கிச் செல்வார்கள்- மிக நியாயமான விலைக்கு…! எந்த ரசீதும் தரமாட்டார்கள்! 

சந்தைக்குச் சென்று ஆடு, மாடு விற்று வாங்கித் திரும்பிய நிலையில் பறக்கும் படையினரிடம் பிடிபட்ட படிப்பறிவில்லாத ஏழை கிராமத்து விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாமரப் பெண்கள் இருவர் எவ்வளவு அழுது புரண்டும் பணத்தைத் திரும்பப் பெற முடியாமல், மண்ணை வாரி இறைத்துச் சாபமிட்டு சென்ற காட்சியை யாருமே மறக்க முடியுமா?

’’அண்ணே வயலில் விளைந்த காய்கறிகளை  மொத்த மார்கெட்டில் விற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். பணத்தை மடியில கட்டி வச்சுறுந்தேன். மொத்த பணத்தையும் பகல் கொள்ளைக்காரன் போல பறிச்சுட்டாங்க.., கேட்டா பறக்கும் படையிங்கிறாங்க.. என் வேர்வையெல்லாம் வீணாச்சு, பயிர்க்கடனை எப்படி கட்டுவேன்னு தெரியலைண்ணே..’’ என்று அழுத விவசாயியின் குரல் நினைவில் வருகிறது.

மகனின் படிப்புக்காக பரிட்சைக்குப் பணம் கட்டினால் தான் நாளை பரிடசை எழுத அனுமதிப்பார்கள் என்ற நிலையில் கந்து வட்டிக்காரரிடம் கடன் வாங்கித் திரும்பிய நிலையில், பறக்கும் படையிடம் பிடிபட்டு கந்தலாகிக் போன அந்த ஏழைத்தாயின் கதறலை என்னவென்ளு சொல்வது..?

மேற்படி நாம் கூறும் எல்லாம்,  பல்லாயிரக்கணக்கான எளிய மனிதர்கள்  சிறு, குறு வியாபாரிகள், சிறு தொழில் செய்வோர், குடும்பஸ்தர்கள் தற்போது அனுபவித்து வருகின்ற துனபம் துயரங்களின் ஒரு சில துளிகள் மட்டுமே.

அலுவலர்கள், மற்றும் அதிகாரிகளின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும் இந்தக் குறுகிய காலகட்டத்தில் இப்படி எத்தனையெத்தனையோ குரூரங்களை நடத்தி விடுகிறார்கள்!

பிடிபட்ட பணத்தின் மதிப்பையும், பிடிபட்ட நகைகளின் மதிப்பையும் ஊடகங்களிடம் வெளிப்படுத்தி பெருமைப்படுத்திக் கொள்வதில் இவர்களுக்கு தான் எவ்வளவு பெருமிதம்!

இதே காலகட்டத்தில் தான் பிரபல கட்சிகளின் அரசியல்வாதிகள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் திட்டமிட்டு தர வேண்டிய பணத்தையும், பொருட்களையும் கச்சிதமாக கைசேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களிடம் மட்டும் இந்த பறக்கும் படை பம்மிக் கொள்ளுமா? இல்லை, பாராமல் செல்லுமா? தெரியவில்லை. பல நேரங்களில் மக்களே  குற்றங்களை பறக்கும் படையினர் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் கூட, எதுவும் நடக்காத சூழல்களையும் தானேபார்க்கிறோம்…!

’ஜனநாயகம் மலர வேண்டும்’ என்பதற்காகத் தான் தேர்தல் நடத்துகிறார்கள்! ஆனால், தேர்தல் காலகட்டம் என்பது ஏற்கனவே ஊழலிலா மிதக்கும் அலுவலர்கள் ’அதிகாரிகளின் சர்வாதிகாரம்’ கொடி கட்டிப் பறக்கும் காலகட்டமாகும்!

பெரிய, பெரிய அரசியல்வாதிகள் எல்லாம் பணிவோடு எளிய மக்களிடம் கும்பிடு போட்டு மக்களை ஆணையிடச் சொல்லி, மன்றாடுகின்ற இந்த காலகட்டத்தில் தான், எளிய மக்கள் இந்த அலுவலர்கழான மக்கள் பணியாளர்களான அதிகாரிகளிடம் சின்னாபின்னப்பட்டு சீரழிகிறார்கள்!

மக்களே கவனம் கொள்ளுங்கள். உழைத்துச் சேகரித்த பணத்தையோ, நகைகளையோ, பொருட்களையோ கொண்டு செல்லும் போது பறக்கும் படைக்கு பலியாகிவிடாதீர்கள்! ஐயா, அதிகாரி மற்றும் சர்வாதிகாரியான பிரிட்டிஷ் ஆட்சிகாலது துரைமார்களே! 

மனசாட்சிப்படி மக்கள் ஆட்சி  ஜனநாயக முறையில் நேர்மையாகச் செயல்படுங்கள்!பாமர மக்களிடம் கொஞ்சம் பரிவு காட்டுங்கள்! 

எளியோரிடம் கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்! சிறு,குறு வியாபாரிகளின் சிரமங்களை கருத்தில் கொள்ளுங்கள்!

நியாயம் என மனதிற்குப் பட்டால், விட்டு விடுங்கள் அதுவே இதுவரை நீங்கள் செய்த ஊழல் பாவங்களைப் போக்கும் புண்ணியமாகும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...