வீட்டில் நிகழும் எதார்த்த இயற்கை மரணங்களுக்கு இறப்புச் சான்றிதழ் பதிவுக்கு இனி மருத்துவச் சான்றிதழ் கட்டாயமல்ல
வீட்டில் இயற்கையாக நிகழும் மரணங்களைப் பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெறுவதில் பொதுமக்களுக்கு இருந்த நடைமுறைச் சிக்கல்களைத்த் தீர்க்கும் வகையில், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வயது முதிர்வு, மாரடைப்பு அல்லது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் மரணம் சம்பவிக்கும் போது, அதற்கு இறப்புச் சான்றிதழ்கள் பதிவு 21 நாட்களுக்குள் பதிவு செய்ய உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி பிறப்பு, இறப்புப் பதிவு அமைப்புகள், மருத்துவச் சான்றிதழை (MCCT - பார்ம்.A) கட்டாயமாகக் கேட்டு வந்தன. இதனால் முறையான பதிவு மருத்துவர்
பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம் 1969 ன் படி பதிவுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் ஆனால்
சிகிச்சை பெறாமல் வீட்டில் இயற்கையாக உயிரிழப்பவர்களின் உறவினர்கள் சான்றிதழ் பெற முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். சிலர் நீதிமன்றம் வரை சென்றனர்.
இது குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் பிறப்பு-இறப்பு தலைமைப் பதிவாளர் அனைத்து மாவட்ட ஆடசித்தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
1969-ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் (2023-ஆம் ஆண்டு திருத்தப்பட்டபடி) பிரிவு 10(3)-ன்கீழ், மருத்துவ மனை அல்லாத இடங்களில்
பிரிவு 10(3) பிரிவு 21 (வீட்டில்) மரணம் நிகழும் போது, அந்த நபர் உயிரிழப்பதற்கு முன்னதாக மருத்துவர் எவரிடமும் சிகிச்சை பெறவில்லை எனில், இறப்புச் சான்றிதழ் பெற மருத்துவச் சான்று (எம்சிசிடி படிவம் ஏ ) சமர்ப்பிப்பது கட்டாய மல்ல, ஒருவேளை இறப்புப் பதிலில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மட்டுமே, சட்டப்பிரிவு 21ன் படி பதிவாளர் விசாரணை நடத்தி மரணத்தைப் பதிவு செய்ய அதிகாரம் உண்டு. இந்த உத்தரவின் படி அத்தகைய இயற்கை மரணமடைந்தவர்களின் சான்றிதழைப் பெற இனி பெற இனி பொதுமக்கள் இதுவரை நிகழ்ந்த தேவையற்ற அலைச்சல்களைச் சந்திக்க வேண்டியிருக்காது. சட்டப்படி உரிய தகவல்களை அளிப்பதன் மூலம் அதை ஏற்றுக் கொள்ள வழிவகை செய் யப்பட்டுள்ளது.60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இயற்கை மரணம் அடைந்தால், மருத்துவச் சான்றிதழ் இன்றி இறப்பு பதிய, வாரிசுதாரர்களின் உறுதிமொழிக் கடிதத்துடன் (Affidavit) 21 நாட்களுக்குள் ஊராட்சி , நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளில் பதிவு செய்யலாம். 2023-ன் படி, 21 நாட்களைத் தாண்டினால் வருவாய் கோட்டாட்சியர் (RDO) அல்லது வட்டாட்சியர் பரிந்துரையுடன் தாமதப் பதிவும் சாத்தியம். 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், எவ்வித மருத்துவச் சிகிச்சையும் பெறாமல், வீட்டில் இயற்கை மரணம் அடைந்தால், இறப்பு காரணச் சான்றிதழ் (Form 4/4A) கட்டாயமில்லை.
இறப்பு நடந்த இடத்தின் (வீடு) ஊராட்சி மற்றும் நகராட்சி அல்லது மாநகராட்சி பதிவாளரிடம், மரணத்தை உறுதி செய்யும் படிவத்தை (Affidavit) சமர்ப்பித்து பதிவு செய்யலாம்.



















கருத்துகள்