மக்களை நேசிக்காத கிழட்டுக் ஹீரோவின் மலட்டுச் சிந்தனைகள் உண்மைகளை உரக்கப் பேசிய ஆதவ் அர்ஜுனா
24 மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகளாக
அதிமுகவின் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய எதார்த்தமான பேச்சுக்குப் பிறகு தான் நடிகர் சங்கம் கொதிக்கிறது, இதற்கு முன்பு யார் யார் யாரெல்லாம் எப்படி ஆபாசமாகத் திட்டிப் பேசினார்கள் என்ற காணொளிக்காட்சிக்கள் சமூக வலைத்தளங்களில் முழுவதும் புயலாக, பூகம்பமாக, சுனாமியாக வந்து வளரி, பூமராங் போல வந்து தாக்கி இருக்கிறது.
சிவாஜிராவ் ஹெய்க்வாட் எனும் ரஜினி காந்த் பிறப்பால் மராத்தியாகவம் வளர்ப்பால் கன்னடியராகவும், வளர்ச்சியால் தமிழ்நாடு சார்பாக வாழும் ரஜினிகாந்தன் எனும் ஒரு காலத்தில் உச்ச நடிகன், தற்போது 80 வயதை நெருங்கும் நிலையில் 20 வயதில் கதாநாயகி உடன் நடிக்கும் அவர் எழுதிய கடித அறிக்கைக்கு பிறகு தான் அவரை இதற்கு முன்பு யார் யாரெல்லாம் எப்படித் தாக்குதல் செய்து பேசி இருக்கிறார்கள் என்ற காணொளிக்கட்சிகளுக்குப் பஞ்சமில்லாமல் வருகின்றன.
அடுத்து பாவமன்னிப்பு கேட்பவர்கள் பட்டியல் நீளும் போல, தவெக பிரமுகர் ஆதவ் அர்ஜுனா.. அதிமுக பிரமுகர்கள் சிவி சண்முகம். திண்டுக்கல் சீனிவாசன், என
ஜாதி விவகாரத்தில் சிக்கி சின்ன பின்னமான பன்முகக் கலைஞன் கே.பாக்யராஜுக்குப் பிறகு அதே ஜாதி விவகாரத்தில் சிக்கிய கலப்பு ஜாதி இயக்குனர், நடிகர் ஆர்.பார்த்திபனும் சமீபத்தில் பாவ மன்னிப்புக் கேட்டவர்களாவர்.திரிஷா கிருஷ்ணன், மற்றும் நயன்தாரா குறித்துப் பேசியதை விட நடிகர் ரஜினிகாந்தைக் குறித்து விமர்சனம் ; திமுக எதிர்த்தால் நியாயம் அதிமுக மற்றும் பாஜகவின் குரல் ஏன் எழுகிறது, அந்த அறிக்கைக்குப் பின்புலம் அரசியல்!
தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வந்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் வரிசையாக தவெக பிரமுகர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராகவும், அரசியல் வேண்டாம் ன பயந்து ஒதுங்கிய நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாகவம் கருத்துக்களை முன் வைத்தனர்.
ஆனால் ரஜினிகாந்த் வெளியிட்ட கடித அறிக்கைக்கு பின்னால் பல்வேறு அரசியல் நகர்வுகள் சத்தமில்லாமல் நடந்துள்ளது. ஆதவ் அர்ஜூனா கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் பற்றிய உண்மையை பொது வெளியில் மரியாதை உடன் தான் விமர்சித்தார், அதுவே பலரது அரசியல் விளையாட்டுக்கு மையப்புள்ளியானது.அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என கூறிவிட்டு சன் பிக்சர்ஸில் அண்ணாத்தேயில் தொடர்ந்து நடித்து வந்த காரணத்தால் தான வரவில்லை என பலர் விமரசனங்கள் வந்ததே, அந்தக் காலகட்டத்தில் நிறைய விமர்சனங்கள் திமுக வின் அழுத்ததால் தான் அரசியலுக்கு வரவில்லை என வந்தது தானே, அப்போது கண்டிக்காத ரஜினிகாந்த் இப்போது ஏன் கண்டிக்கிறார்? அதே போல் உதயநிதி தயாரிப்பிலும் நடிக்கதான் செய்கிறார்.
ஆதவ் அர்ஜுனா பேசியதை சாதாரணமாகவே கடந்து போயிருக்கலாம்!
''இந்த மாதிரி பேச்சுக்கெல்லாம் அவர் பதில் சொல்லணுமா என்ன?'' என மக்களும் கடந்து போயிருப்பார்கள்.
அப்படித் தான் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு ஆதவ் அர்ஜுனா பேசியதை ஏறத்தாழ எல்லோரும் மறந்தே போய்விட்டனர், பலருக்கு அது தெரியாது.
எடப்பாடி கே.பழனிச்சாமி, அமைச்சர் ரகுபதி, நைனார் நாகேந்திரன், அண்ணாமலை, எல்.முருகன், அர்ஜுனமூர்த்தி, எஸ்.பி.வேலுமணி, அன்புமணி, ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி, தொல்.திருமாவளவன், தனஞ்ஜெயன், இயக்குனர் அமீர், நக்கீரன் கோபால். ரங்கராஜ் பாண்டே வரை நன்றி தெரிவித்து தன் இமேஜை காப்பாற்ற வேண்டிய பரிதாப நிலைக்கு ரஜினி போனதெப்படி? எனத் தெரியவில்லை.
உண்மையில் இந்த விவகாரத்தில் ரஜினி காந்துக்காக பரிந்து பேசிய அனைவருக்கும் ரஜினி ரசிகர்களின் வாக்கு வங்கி மீதான ஆதாய அரசியல் நோக்கம் இருக்கிறது.
இவங்கெல்லாம் வந்து பேசி காப்பாற்ற வேண்டிய நிலையில் தான் தன் இமேஜ் இருப்பதாக ரஜினிகாந்த் நம்பும் அளவுக்கு பலவீனமாகவே போய்விட்டார்…!
அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கி நடத்துவது என்பதற்கு பலதரப்பு எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் அஞ்சா நெஞ்சம் தேவை என்பது எழுதப்படாத விதியாகும்.
அதுவும் ரஜினிகாந்தை முன்னே நிறுத்தி பின்னே இருந்து பாஜக இயக்கும் என்ற திட்டத்தில் தான் பாஜக அவருக்கு அரசியலுக்கு வர நெருக்குதல் தந்தது.
இந்த எளிய உண்மை தமிழ்நாட்டில் எல்லோருக்குமே தெரிந்த ஒன்று தான்.
தனக்கு நிர்வாகம் தெரியாது. மக்களையோ, தொண்டர்களையோ வழி நடத்தும் தலைமைப் பண்பு தன்னிடம் சுத்தமாக இல்லை. பொதுத் தொண்டிற்காக அர்ப்பணித்துக் கொள்ளும் இயல்பும் கிடையாது.
இதனால், பாஜக பின்னே இருந்து இயக்குவது வெளியே எப்படியும் தெரிந்து தனக்கு மிகப் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும். தமிழ்நாடு மக்கள் விரும்பாத ஒரு இயக்கத்திற்கு உதவி நாம் ஏன் அவப்பெயர் எடுக்க வேண்டும் என்று தான் ரஜினி அரசியலில் இருந்து விலகினார்.
அரசியலுக்கு வருவதாக சுமார் 30 ஆண்டுகளாக ரஜினிகாந்த் சொல்லிக் கொண்டே இருந்ததற்கு இரண்டு காரணங்கள்;
அந்தச் சாக்கில் திரைப்படத்தில் சில வசனங்களையும் வைத்து படத்தை ஓட வைப்பது, இரண்டாவது, 'தான் எப்போதுமே ஒருபேசுபடு பொருளாக இருக்க வேண்டும்' என்ற ஒரு அற்ப வியாபார ஆசை!
ரஜினிகாந்தின் இந்த நோக்கங்களைப் புரிந்து கொள்வதற்குள் பல்லாயிரம் ரஜினிகாந்த் ரசிகர்கள் தங்கள் செல்வத்தையும், எதிர்காலத்தையும், வாழ்கையையும் தொலைத்து அழிந்தார்கள் என்பது கடந்த காலத்தில் ஒரு கருப்பு வரலாறு.
தற்போதுமே கூட ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் ரஜினிகாந்தையும்,. ரஜினிகாந்துக்கு ஆதரவாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களையும் ஆதரவாளர்களையும் ஒரு வாரம் கழித்து அதிரடியாக ரியாக்ஷன் செய்ய வைத்ததன் பின்னணியில் டெல்லி பாஜக இருக்கிறது.
சிபிஐ மூலமாக விஜய்க்கு தந்த அழுத்தங்கள் பேசு பொருளாவதில் இருந்து தவிர்க்கவே இதை தூசிதட்டி எடுத்து பேச வைத்துள்ளனர்.
மொத்ததில் தன்னை மிகவும் நேசித்த தமிழ் மக்களிடம் தன்னை உள்ளபடியே உண்மையாக வெளிப்படுத்திக் கொள்ளாத சுயநலவாதியே ரஜினிகாந்த் .
தவெக சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்திருந்தது. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா போன்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் பற்றி ஆதவ் அர்ஜூனா பேசிய விவகாரம் பெரிதாகி ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், அதுகுறித்தும் ஆதவ் அர்ஜூனா இந்நிகழ்வில் பேசியிருந்தார்.ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'தலைவர் சிபிஐ விசாரணைக்கு சென்று விட்டு வரும் போது தேர்தல் தேதியை அறிவித்து விட்டார்கள். அண்ணனின் காரில் பின்னால் தான் உட்காந்திருந்தேன். வெளியில் 2000 பேர் இருந்தார்கள்.
திடீரென ராயப்பன் கேரக்டரை போல மேல க்ளாஸ ஓபன் பண்ணுங்க என்றார். 'என்ன அர்ஜூன் இங்க இருந்தே ஆரம்பிச்சுரலாமா?' எனக் கேட்டார். தலைவர் அங்கிருந்தே பிரசாரத்தை தொடங்கிவிட்டார். ஒரு மாதமாக திமுக செட் செய்த நரேட்டிவை தலைவர் உடைத்துவிட்டார்.
தவெக சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்திருந்தது. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா போன்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். நடிகர் ரஜினியை பற்றி ஆதவ் அர்ஜூனா பேசிய விவகாரம் பெரிதாகி ரஜினியே அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், அதுகுறித்தும் ஆதவ் அர்ஜூனா இந்நிகழ்வில் பேசியிருந்தார்.
நம்முடைய தலைவரே ரஜினி ரசிகர் என கூறுபவர். கடந்த ஒரு வாரமாக நானும் தலைவரும் கடும் மனவலியில் இருக்கிறோம். தூத்துக்குடி மாணவியின் கொலையை மறைக்கத்தான் ஒரு வாரமாக வேறுவிதமான பிரசாரத்தை முன்னெடுத்தார்கள். அந்த வீட்டுக்கு முதல்வர் ஏன் செல்லவில்லை? என்கிற ஆதங்கத்தில்தான் முட்டாள் முதல்வர் எனப் பேசியிருந்தேன். ரஜினிகாந்த் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. ரஜினிகாந்த் மீது எங்களுக்கு அன்பு மட்டுமே இருக்கிறது. இந்த நோன்பு மாதத்தில் சொல்கிறேன், தவெக தனித்துதான் போட்டியிடுகிறது. 90 சீட்டுகள், 50-50 என எவ்வளவோ டீல் பேசினார்கள். ஆனால், தலைவர் மக்களுக்காக தனித்து நிற்க வருகிறார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாகச் சொன்னபோது நான் திமுகவில் தேர்தல் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது எடுத்த சர்வேயில் ரஜினிக்கு 18% வாக்கு இருந்தது. அதனால்தான் திமுக அவர் மீது போலி பிரசாரங்களை முன்னெடுத்தது. அதைத்தான் அன்று சொல்ல வந்தேன். அது ரஜினி சாரின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.' என்றார்.
த.வெ.க சர்பில் நடந்த போராட்டத்தில் கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசும் போதும் நடிகர் “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நினைத்தார். ஆனால் திமுகவினர் அழுத்தம் வந்ததால் பயந்து பின்வாங்கினார். ஆனால் தலைவர் விஜய் அப்படி இல்லை" என்றார். இதற்கு ஆரம்பத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மற்றொருபுறம் தி.மு.க-வைச் சேர்ந்த தமிழ்நாடு அமைச்சர்களும் இதே விவகாரத்தில் ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர். அது அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கான மறுப்பு எனப் பார்க்கும் நிலையில் அனால் அதிமுக உள்ளிட்ட எதிர்முகாமில் இருந்து ஏன் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாகக் குரல் வருகிறது எனப் பார்த்தால்
தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க இணையும் என்று கடந்த ஒருவாரமாக சில நகர்வுகள் துவங்கி செய்திகள் வந்தது. ஆனால்,நேற்று காலை “வதந்திகளை நம்பவேண்டாம். பா.ஜ.க, உள்ளிட்ட யாருடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நாங்கள் நடத்தவில்லை” என்று அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார் த.வெ.க இணை பொதுச்செயலாளர் சி.டிஆர் நிர்மல் குமார். ரகசியப் பேச்சு ரகசியமாகவே இருக்கு
ஆனால் ஆதவ் அர்ஜூனா அதைப் பொது வெளியில் போட்டுடைத்து துணை முதல்வர் 90 தொகுதி எனப் பேரம் பேசியதை ஒப்புக்கொண்டார் இதனால் த.வெ.க தனித்து நிற்கும் முடிவுக்கு வந்ததாக அடுத்து செய்திகள் வெளியானது. காரணம் முன்கூட்டியே வரும் பாண்டிச்சேரி தேர்தல் பாஜக வைத்த பரிட்சை அதை எழுதும் முதல்வர் என் ஆர் காங்கிரஸ் ரங்கசாமியும் விஜய் கட்சி தவெகவும் இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் வரிசையாக ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிரான நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவுக் கருத்துக்களை முன்வைத்தனர்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன், “தமிழ்நாடு அரசியலின் வரலாறு தெரியாமல் பேசுகிறார் ஆதவ் அர்ஜூனா. அவர் மீது விஜய் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி கே.பழனிசாமியும் அதே போல் கண்டனத்தை பதிவு செய்தார். ஒரே நாளில் அடுத்தடுத்து ஆதவ் அர்ஜூனா மீது கண்டனங்களை பதிவு செய்ததற்கு பின்னால் டெல்லி மேலிடம் இருப்பதாகவே தகவல் வருகிறது. நடிகர்
ரஜினிகாந்த் தரப்புக்கு நெருக்கமானவர்கள் கூறும் போது, “ விஜய் குறித்து எந்தவித எதிர்மறையான கருத்தையும் நடிகர் ரஜினிகாந்த் பேசியது கிடையாது. ஆனால் ஆதவ் அர்ஜூனா பொது வெளியில் உண்மை பேசியது ரஜினிகாந்துக்கு வருத்ததை ஏற்படுத்தியதாம். திமுகவுக்குப் பயந்து பின்வாங்கிப் போனார் என்று சொல்வதை நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லையாம். ஆனால் அவர் திமுக ஆதரவு நிலை குறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் முன் பேசியதே சாட்சி
இந்த விவகாரத்தை அப்போது தனக்கு நெருக்கமான பா.ஜ.க டெல்லி தன் ஆதரவுப் பிரமுகர்களிடம் சொல்லி வருத்தப்பட்டாராம். நடிகர் ரஜினிகாந்த். விஜய்யுடன் கூட்டணி வரும் என்கிற நம்பிக்கையில் இந்த விவகாரத்தை கொஞ்சம் ஆறப்போட்டது டெல்லி.
இப்போது நடிகர் விஜய்க்கு எதிராக தேர்தல் களத்தில் நிற்கப் போவதால், திமுக பக்கம் உள்ள ரஜினிகாந்தை அவரது ரசிகர்களை தேஜகூ தங்கள் பக்கம் கொண்டுவர பா.ஜ.க திட்டமிட்டது. நேற்று டெல்லியிலிருந்து தகவல் வந்த பின் தான், ரஜினிக்கு ஆதரவாக ஒரே நாளில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் வரிசையாக அறிக்கை விட்டு ஆதவ் அர்ஜூனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். ஆனால் ஆதவ் பயந்து பணிந்து போய் பின்வாங்கி மன்னிப்புக் கேட்காமல் நிமிர்ந்து நின்று நியாயப்படுத்தி வருத்தம் தெரிவித்ததோடு, ரஜினி ரசிகர்களையும் தங்களுக்கு ஆதரவாக ஒன்று சேர்க்கும் அரசியலைக் கையில் எடுத்துள்ளார்கள். நடிகர்
ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையிலும் “காலம் காத்திருந்து பதில் சொல்லும்“ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பாக பேசிய பேச்சுக்கு இப்போது கண்டனங்கள் டியூப்லைட் போல எரிய ஆரம்பித்தது.
ஆதவ் அர்ஜூனாவிற்கான நெருக்கடி இனிதான் துவங்கும் என்பதை குறிப்பிடும் வகையில் தான், ரஜினி காலத்தை குறிப்பிட்டு சொல்லியுள்ளார். ஆனால் 1996 ல் துவங்கி காலம் 2026 வரை எந்த இடத்தில் இப்போது வந்து கொண்டிருக்கிறது என பலரும் நையாண்டி செய்து கேட்கின்றனர். இந்த மொத்த ஆக்ஷனக்கும் பின்னால் பா.ஜ.க வின் அரசியல் திட்டமே உள்ளது.தேர்தல் அரசியல் களத்தில் திமுகவை விட்டு ரஜினியை பிரித்து வைத்து ஒரு ஆட்டத்தை ஆட பா.ஜ.க முடிவெடுத்தால் அது வீன் தான். காரணம் அவர் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என அவரே கூறிவிட்டு வெளியேறியது தான் உண்மை. நடிகர்
ரஜினிகாந்த் பிறப்பால் மராட்டியர் விஜய் தமிழர் இது ஒன்னு தான் இப்போதய நிலை, இதில் பொதுநீதி யாதெனில் :- பொது வாழ்க்கைக்கு வராதவரை நடிப்புக் கூத்தாடிகளை நடிகனாகவே பார்க்க வேண்டும்,தலைவனாக ஏற்க வேண்டியதில்லை. நடிகர் எம்ஜிஆர், ஜெயலலிதா, டி. ராஜேந்தர், ராதாரவி, விஜயகாந்த், விஜய், போன்றவர்கள் பயமில்லாத மக்கள் ஜனநாயக வாதிகள் இதற்கு விதிவிலக்கு.


















கருத்துகள்