தமிழ்நாடு நான்கு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் மாற்றம்
காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி, தஞ்சாவூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாற்றம்,
காஞ்சிபுரம் எஸ்பியாக ஜவஹர், பெரம்பலூர் எஸ்பியாக பிரபாகர், தஞ்சாவூர் எஸ்பியாக சுந்தரவதனம் மற்றும் தென்காசி எஸ்பியாக மயில்வாகனன் நியமனம் காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் மாறுதல் செய்து உத்தரவு.
மாற்றமானவர்களை ; தேர்தல் ஆணையம் மேற்கண்ட அதிகாரிகள் பணியில் சேர்ந்தது தொடர்பான அறிக்கையை நாளை மார்ச் மாதம் 28 ஆம் தேதி காலை 11.00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் காஞ்சிபுரம், தஞ்சாவூர், தென்காசி, பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களைப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 23- ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டும், தீவிர பரப்புரையையும் மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் தேர்தலை நேர்மையாக நடத்தும் வகையில் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர்கள் தொடர்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடாச் செய்வதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது, ஆனால் அவர்கள் அரசியல் தேர்தல் முறைகேடு பணத்தை பறிமுதல் செய்யாமல் மக்கள் வியாபாரிகள் பணத்தை பறித்து ஜம்பம் காட்டுகின்றனர், அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், தஞ்சாவூர், தென்காசி, பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் லதா திரிபாதி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜவஹர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர்.பிரபாகர், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுந்தரவதனம், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மயில்வாகனன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்; மேற்கண்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியில் சேர்ந்தது தொடர்பான அறிக்கையை நாளை மார்ச் மாதம் 28 ஆம் தேதி காலை 11.00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும் என்றும், இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுத்தக்கூடாது எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பாண்டிச்சேரி திமுக தேர்தல் பொறுப்பாளரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான மது உற்பத்தி ஆலைக்குச் சொந்தமான காரில் 50 லட்சம் ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிசயமாக பறிமுதல் செய்துள்ளனர். சபாஷ்.





கருத்துகள்