பாண்டிச்சேரி முன்னாள் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னாள் பாஜக வேட்பாளர்களாக அறிவிப்பு
பாஜக போட்டியிடும் தொகுதிகளில் 9-ல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் படி, ஒரு முன்னாள் அமைச்சர் தவிர அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
பாஜக மத்திய தேர்தல் குழு கட்சியின் தேசியத்தலைவர் நிதின் விபின் தலைமையில் கூடிய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் மத்திய தேர்தல் குழு அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றதில் பாண்டிச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான 9 தொகுதிகளின் வேட்பாளர்களை தலைமைப்பொறுப்பாளரும் பாஜக தேசிய பொதுச்செயலருமான அருண்சிங் வெளியிட்டார்.
அதன்படி : மண்ணாடிப்பேட்டை அமைச்சர் நமச்சிவாயம், ஊசுடு- எம்எல்ஏ தீப்பாஞ்சான், காலாப்பேட்- எம்எல்ஏ கல்யாணசுந்தரம், இராஜ்பவன்- மாநிலத்தலைவர் ராமலிங்கம், முதலியார்பேட்டை அமைச்சர் ஜான்குமார், மணவெளி- சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், திருநள்ளார்- எம்எல்ஏ ராஜசேகரன், நிரவி டிஆர்பட்டிணம்- மீனாட்சி சுந்தரம், மாஹே- தினேசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிடுவதாக பாஜக அறிவித்து தற்போது 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் ஊசுடுவில் வென்ற பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான சாய் சரவணக் குமாருக்கு தொகுதி தரப்படவில்லை.
அதேபோல் என்.ஆர்.காங்கிரஸில் அமைச்சராக உள்ள லட்சுமி நாராயணன் போட்டியிட்டு வென்ற இராஜ்பவன் தொகுதி பாஜகவுக்கு தரப்பட்டுள்ளதால் அவருக்கு வாய்ப்பு தரப்படாது. அதேபோல் மங்கலம் தொகுதியில் அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு தொகுதி தராமல் முதல்வர் உள்ள நிலை.பாண்டிச்சேரியில் பாஜக - காங்கிரஸ் (NR) கூட்டணி முடிவு. முதலில் பிடிவாதத்துடன் தவெகவுடன் கூட்டணி வைக்கலாமா என முதல்வர் என் ரங்கசாமி.
என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக, லஜக தலா 2 தொகுதிகளிலும் போட்டி
14-14 க்கு சம்மதிக்காத காங்கிரஸ் 99 சதவீதம் தனித்துப் போட்டியிடப் போகிறார்கள். தமிழ்நாடு போல் ஒரு அதிசயம் நாளை நடக்கவில்லை என்றால் திமுகவும் தனியாகப் போட்டியிடும். தவெகவும் தனித்துப் போட்டி. நான்கு முனை போட்டியாகையால் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை சில நூறு வாக்குகளே நிர்ணயிக்கும். வெற்றி யாருக்கு என்பது 26 ஆம் தேதி மாலை தான் தெரியும்









கருத்துகள்