தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், யாதவர் சமூகத்து பன்னிரண்டாம் வகுப்பு படித்த மைனர் குழந்தையான பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து,
பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை என்ற நிலையில். அந்த பஞ்சமாபாதகக் குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களும் வியாபரிகளும் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்த்த சாயல்குடியில் வசித்து வந்த தர்ம முனீஸ்வரன் என்ற குற்றவாளியைக் கைது செய்திருப்பதாக, அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன.கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, இதே சாயல்குடியில் வசிக்கும் தர்ம முனீஸ்வரன் என்ற நபர் குற்றவாளி எனக் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் படுகொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, கடந்த திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும் போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழ்நாடு காவல்துறை இருந்திருக்கிறது.
மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.
பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் தேர்தல் காலத்தில் பதில் கூறவேண்டும் என்பதை பல அரசியல் கட்சித் தலைவர்களும், வினா எழுப்பியுள்ளனர், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் வேடநத்தம் கிராமத்து 17 வயது மைனர் மாணவி, கடந்த 11-ஆம் தேதி அப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தாலும், தற்போது வரை குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டியும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிறுமியின் உடலை வாங்குவதற்கு மறுத்து அவரது குடும்பத்தினர் நேற்று 9 வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளியைப் பிடிக்க மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. சந்தேகத்திற்குரிய மற்றும் குற்றப்பின்னணி கொண்ட சுமார் 15-க்கும் மேற்பட்ட நபர்களைப் பிடித்து காவல்துறையினர் இரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதனிடையே வழக்கை சிபிஐ-விசாரணைக்கு மாற்ற வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. விசாரணையின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் சிலரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு சிறுமி கொலை வழக்கில் இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வசித்த தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான். முனீஸ்வரன் கைதானது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியை அடையாளம் காண்பதில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர்களில் தர்ம மூனிஸ்வரனின் கையில் நகக் கீறல்கள் இருந்துள்ளது. உயிரிழந்த மாணவியின் நகங்களுக்குள் சதைத் துணுக்குகள் சிக்கியிருந்தன. அந்த சதையுடன் டிஎன்ஏ பரிசோதனை செய்ததில் தர்ம முனீஸ்வரனின் மாதிரிகள் ஒத்துப்போனது. இதனைத் தொடர்ந்து, முனீஸ்வரனை முறையாக தூத்துக்குடியில் வைத்து காவல்துறை கைது செய்துள்ளனர். விசாரணை நடக்கிறது, அப்பாவி +2 பள்ளி மாணவியை, மனசாட்சியே இல்லாமல் படுகொலை செய்த, சைகோவான இவன் மாவீரன் (எ) தர்ம முனீஸ்வரன் என அழைக்கப்படுபவன்.
தொடர்ந்து கற்பழித்து கொலை செய்யும் சைக்கோவான இந்த கடும் பாதகக் குற்றவாளிக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும். இதுவே மக்கள் உணர்வு."கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே" என்பது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வேத வாக்கு. இதற்கு விரைவில் நீதி தீர்வு வரும்.






கருத்துகள்