பல உயிர்களை விபத்தால் பலி வாங்கிய G CORNER பகுதியில் உயர்மட்ட சுழற்பாலம் எனும் Elevated Rotary அமையப்போகிறது
திருச்சிராப்பள்ளி மக்களின் 16 ஆண்டு கால கோரிக்கைக்கு தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மூலம் விடை கிடைத்தது! தங்கள் நிலத்தில் உயர்மட்ட சுழற் பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைத்துக் கொள்ள இரயில்வே நிர்வாகம் முழு ஒப்புதல் அளித்து, தடையில்லாச் சான்றிதழை வழங்கியது , சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து மக்களின் பயணமும் சீராகவும் பாதுகாப்பாகவும் அமையப்போகிறது! என் மக்கள் பணியில் இந்த உயர்மட்ட G-கார்னர் சுழற்பாலம் ஓர் சாதனையாகவே
நாடாளுமன்ற உறுப்பினராக திருச்சிராப்பள்ளி தொகுதி மக்களுக்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முயற்சிக்கு கிடைத்த பலனாகும் திருச்சிராப்பள்ளிக்கும் சென்னைக்குமான தேசிய நெடுஞ்சாலையில், திருச்சிராப்பள்ளி மாநகரில் பொன்மலைப் பகுதியில் அமைந்துள்ள G-கார்னர் சந்திப்பில் உயர்மட்ட சுழற் பாலம் எனும் Elevated Rotary அமைக்கும் திட்டப் பணிக்கு, 13.03.2026 தேதியிட்ட இரயில்வேத் துறையின் தடையில்லாச் சான்று (NOC) தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு (NHAI) இரயில்வே நிர்வாகம் (Railway Board) வழங்கியுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகரில் தேசிய நெடுஞ்சாலை–38 ல் அமைந்துள்ள G-கார்னர் சந்திப்பு கடந்த 16 ஆண்டுகளாக கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது. இந்த போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து முயற்சிகள் நடந்த நிலையில்
11.01.2025 அன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தில் இந்த பிரச்சினையை முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக எடுத்துரைத்தேன்.
26.01.2025 அன்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் G-கார்னர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு
22.02.2025 அன்று நில அளவீடு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்து 27.02.2025 அன்று NHAI மற்றும் இரயில்வே அலுவர்களுடன் இணைந்து திட்டத்திற்குத் தேவையான நில அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த திட்டம் விரைவில் நிறைவேற வேண்டும் என்பதற்காக 06.02.2025, 19.08.2025 மற்றும் 19.12.2025 ஆகிய தேதிகளில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து திட்டத்தின் அவசரத் தேவையை எடுத்துரைத்து விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி.
23.04.2025 அன்று மேம்பாலம் அமைப்பதற்காக தேவையான இரயில்வே நிலத்தை மாற்றித் தருமாறு தெற்கு இரயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை வைத்து.
14.07.2025 அன்று திருச்சிராப்பள்ளி கோட்ட இரயில்வே அலுவலகத்தில் DRM, NHAI அதிகாரிகள் மற்றும் திட்ட ஆலோசகர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது இந்த போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வாக உயர்மட்ட சுழற் பாலம் அமைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதன் பின்னர் 25.08.2025, அன்று புதிதாக பதவியேற்ற தற்போதைய திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்ட மேலாளர் பலக் ராம் நேகியை சந்தித்து, ப26.08.2025 அன்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் மீண்டும் ஒருமுறை சந்தித்து விளக்கி, 26.09.2025 மற்றும் 05.12.2025 ஆகிய தேதிகளில் ரயில்வே நில ஒதுக்கீடு மற்றும் NOC வழங்குவது தொடர்பாக தொடர்ந்து கடிதங்களும் அளித்து நடவடிக்கை எடுத்த. பின் 10.12.2025 அன்று டெல்லியில் மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து இந்த திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
தொடர்ச்சியாக 29.01.2026 அன்று திருச்சிராப்பள்ளி இரயில்
வே DRM அலுவலகத்தில் NHAI அதிகாரிகள் மற்றும் திட்ட ஆலோசகரை வரவழைத்து ஆலோசனையம் நடைபெற்றது.
30.01.2026 அன்று தேசிய நெடுஞ்சாலைத்துறையின் திருச்சிராபபள்ளி திட்ட இயக்குநர் மற்றும் திட்ட ஆலோசகரை மதுரை மண்டல தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அலுவலரின் அனுமதியுடன் அழைத்து சென்னை தெற்கு இரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் பொது மேலாளருடன் ஆலோசனை மேற்கொண்ட
பின்னர் 04.02.2026 மற்றும் 13.02.2026 ஆகிய தேதிகளில் மத்திய இரயில்வே அமைச்சரை மீண்டும் சந்தித்து திட்டத்திற்கு விரைவான அனுமதி வழங்கக் கேட்டுக்கொண்ட அடிப்படையில் . 06.02.2026 அன்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர். ஹர்ஷ் மல்ஹோத்ராவுக்கு திட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்த நிலையில்
நாடாளுமன்ற உறுப்பினர் 22.02.2026 மற்றும் 07.03.2026 ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி DRM மைத் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்ட.
இந்தத் தொடர் முயற்சிகளின் விளைவாக தற்போது திருச்சிராப்பள்ளி மாநகரில் G-கார்னர் சந்திப்பில் உயர்மட்ட சுழற் பாலம் அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு இரயில்வே நிர்வாகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC – No Objection Certificate) வழங்கியுள்ளது என்பது மிக முக்கிய முன்னேற்றமாகும்.
இது மத்திய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இரயில்வே வாரியம், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, திருச்சிராப்பள்ளி கோட்ட இரயில்வே மேலாளர் (DRM), தெற்கு இரயில்வே பொதுமேலாளர் (GM) மற்றும் NHAI திருச்சி திட்ட இயக்குநர் மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் துரை வைகோ உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பு மூலம்
இந்த உயர்மட்ட சுழற்பாலம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தவுடன், திருச்சி மாநகரின் நீண்டகால போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பதோடு, இத்தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் அப்பகுதி மக்களின் உயிர்ப் பாதுகாப்பும் உறுதியாகும்.
மேலும், சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குச் திருச்சி வழியாகப் பயணிக்கும் அனைத்து மக்களின் பயணமும் பாதுகாப்பாகவும் சீராகவும் அமையும் என்பதால், இப்பாலம் திருச்சிக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்கே மிக முக்கியமான பாலமாகத் திகழும் எனலாம்


























கருத்துகள்