முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தவெக மேடையில் நடனமாடி பணியிடை நீக்கமான தலைமை ஆசிரியை

நடிகர் விஜய் நடித்த சிவகாசி 


திரைபபடப் பாடலுக்கு கட்சி மேடையில் நடனமாடிய கிருஷ்ணவேனி (வயது 58) தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் 


"கோடம்பாக்கம் ஏரியா ஓட்டுக்கேட்டு வாரியா...." என்ற பாடலுக்கு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மகளிர் தின விழா மேடையில் நடனம் ஆடிய அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  கோடம்பாக்கம் ஏரியா ஓட்டுக்கேட்டு வரியா என்ற விஜய் பட பாடலுக்கு ஒரத்தநாட்டில் நடந்த த.வெ.க. மகளிர் தின விழா மேடையில் நடனம் ஆடிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இவர் சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகவும், வெள்ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் பொறுப்பு தலைமை ஆசிரியையாகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடதக்கது.ஒரத்தநாடு பகுதி  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டதில் ஆசிரியை கிருஷ்ணவேணி கலந்து கொண்டார். அப்போது மேடையில் சினிமா பாடல்கள் ஒலிக்கப்பட்ட நிலையில், உற்சாகமடைந்தவர் மேடையில் ஏறி  பாடலுக்குத் தகுந்தாற்போல் நடனமாடினார். ஆசிரியை மேடையில் நடனமாடிய போது அங்கு எதிரிலிருந்தவர்களால்  செல்போன் மூலம் வீடியோ காட்சியாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலாகி மாவட்டக் கல்வித்துறை அலுவலர்களின் கவனத்திற்குச் சென்றது. அரசுப்பள்ளி பணியிலிருக்கும் ஒருவர், அரசியல் கட்சி நடத்தும் பொது மேடையில் ஏறி நடனமாடியது அரசு ஊழியர்களுக்கான ஒழுங்கு நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது எனப் புகார்கள் எழுந்த நிலையில் அது குறித்து விசாரணை நடத்த பட்டுக்கோட்டை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகனுக்கு உயர் அலுவலர்கள் உத்தரவிட்டனர். நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஆசிரியை கிருஷ்ணவேணி தவெக விழாவில் பங்கேற்றதும், மேடையில் நடனமாடியதும் உறுதி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளை மீறியது மற்றும் பணித்தன்மைக்கு பங்கம் விளைவித்தது ஆகிய காரணங்களுக்காக ஆசிரியை கிருஷ்ணவேணியைப் பணியிடை நீக்கம் (Suspend) செய்து மாவட்ட கல்வி அலுவலர் மதியழகன் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஒரு அரசியல் கட்சி விழாவில் பங்கேற்ற தலைமை ஆசிரியை  சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் விஜய் கட்சி அடித்தள மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதைக் காட்டுவதாக அக்கட்சியினர். ஆட்சி மாற்றம் நடந்தால் அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் ரத்தாகலாம்,அரசு பணி செய்வோர் பொது ஊழியர்கள், கட்சி சார்ந்த விழா, மற்றும் கூட்டங்கள் உள்ளிட்ட பிற நிகழ்வு களில் பங்கேற்கக் கூடாது. அதை மீறினால் அரசு ஊழியர் நடத்தை விதி (Conduct Rules) படி குற்றமாகும். இந்தகுற்றத்தில் ஈடு படுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்ப டும். அதிகபட்சமாக பணியிடை நீக்கம் பின் தவறு உறுதியானால் பணி நீக்கம் வரை செய்யலாம். அந்த வகையில் தற்போது தலைமையாசிரியை கிருஷ்வேணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்திய அரசியலமைப்பில் Article 19(1)(a) of the Constitution of India படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னை வெளிப்படுத்தும் உரிமை உண்டு . நடனமென்பது கலை; அது சுதந்திரத்தின் வெளிப்பாடு.ஆனால், இந்த உரிமை முழுமையானதல்ல. Article 19(2) of the Constitution of India படி, இந்த சுதந்திரத்திற்கு நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். குறிப்பாக ஒருவர் அரசு ஊழியரானால், அவரது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் பொதுப் பொறுப்பு (Public Responsibility) ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் செயல்பட வேண்டிய சூழல் உருவாகிறது. அதனால், சுதந்திரம் இருக்கிறதென்றாலும், அது முழுமையாக கட்டுப்பாடுகளின்றி பயன்படுத்தப்பட முடியாது. அரசு ஊழியர்களின் நடத்தை விதிகள் குறித்து தெளிவான வழிமுறைகள் Tamil Nadu Government Servants' Conduct Rules மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் அரசு ஊழியர்கள் அரசியல் சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதையும், பொதுமக்கள் முன் அவர்களின் நடத்தை மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றன.இந்திய நீதிமன்றங்கள் தெளிவான ஒரு அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன. O.K.A. Nair /vs/ Union of India வழக்கில், அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை முழுமையாகக் கோர முடியாதன்கிறது உச்ச நீதிமன்றம். அதேபோல் Kameshwar Prasad /vs/ State of Bihar வழக்கில், அரசு ஊழியர்களுக்கும் உரிமைகள் உள்ளன, ஆனால் அவை கட்டுப்பாடுகளுக்குட்பட்டவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...