பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் கட்சியும், காலஞ்செனற முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் உயிர் தோழி வி. கே சசிகலா நடராஜன் தலைமையிலான புதிய கட்சியான அஇபுதமமுக கட்சியும் கூட்டணி, அரசியல் மாற்றத்தின் பெயரில்
முன்வைக்கப்பட்டாலும், அதன் மையத்தில் தெளிவாக தெரியும் ஒன்றைப் பார்வை என்பது இது திட்டமிட்ட ஜாதி வாக்குப் பிரிப்பு அரசியல் முயற்சியாகவே பார்க்கலாம். குறிப்பாக வன்னியர்கள் மற்றும் முக்குலத்தோரில் சிலர் வாக்கு வங்கியின் திசையை உடைத்து, அந்த ஒருமைப்பாட்டைச் சிதைக்கின்ற நகர்வாகவே இந்தக் கூட்டணி வெளிப்படுகிறது. பாமக நிறுவனர்
மருத்துவர் ச.ராமதாஸ் 1989 முதல் நீண்ட காலமாக களத்திலிருந்து நேரடியாகவே அரசியல் செய்து வந்த தலைவர், முன்னால் முதல்வர்கள் காலஞ்சென்ற டாக்டர். எம்ஜிஆர், செல்வி ஜெ.ஜெயலலிதா, டாக்டர் மு.கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்களை எதிர்த்தும், ஆதரித்தும் செயல்பட்டவர். அதே நேரத்தில், வி. கே.சசிகலா நடராஜன் செல்வி ஜெ.ஜெயலலிதாவைப் பின்புலப் பொம்மையாக வைத்து நேரடி அரசியல் களத்தில் தன்னை நிரூபிக்காமல் கிச்சன் கேபினட் இன்கேமரா அரசியல் செய்த அரசியல் ஆளுமை; தமிழகத்து நடிகையானாலும் கர்நாடக அந்தணர் குல செல்வி ஜெ.ஜெயலலிதாவை பின்னணியில் இருந்து இயக்கியவர் என்ற மன்னார்குடி ஆதரவுக் குடும்பம், ஆனால் சாமானியன் அறியாத நிழல் அரசியல் அது என்ற அடையாளமே அதிகம். இப்படிப்பட்ட இரு வேறு பாதைகளில் இருந்தவர்கள் இன்று ஒரே தளத்தில் நிற்பது, அரசியல் மாற்றத்தை விட பல புதியவர்களுக்கு நையாண்டி உணர்வைத் தான் உருவாக்குகிறது. காரணம் அது அவர்கள் அறியாமை. கடந்த பத்து வருடம் முன்புள்ள காலத்தில் இவர்கள் எத்தனை பலம் மிக்க அதிகாரமிக்கவர்கள்?
ஆனால் பாஜகவின் பின் புல ஆடிட்டர் ஒருவர் தலையீடு காரணமாக பின்னடைவு அரசியல் காரணமாக இவர்கள் வாழ்க்கையைத் தக்க வைப்பதை விட வாழப் போராடுவது சற்றே இலகு. இந்த நிலையில் திண்டிவனம். பாண்டிச்சேரி சாலையில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடந்த சந்திப்பில் “இப்போதே பலருக்கும் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்” எனற செய்தியுடன்
வி. கே.சசிகலா நடராஜன் கட்சியுடன் கூட்டணியை அறிவித்த பிறகு மருத்துவர் ச.ராமதாஸ் கருத்துத் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாசுடன் வி.கே.சசிகலா நடராஜன் நேற்று சந்திப்பு, காரணம் இருவருக்கும் பொது எதிரி பாஜக.
மருத்துவர் ச.ராமதாஸ் தரப்பு பாமகவை தந்தை மகனை திமுக ஆதரவாளரான அரசு தொடக்கபபள்ளி ஆசிரியர் பணியில் இருந்து பாமகவில் பேராசிரியர் தீரன் பின் வந்து தற்போது பலநூறு கோடிகள் குவித்து பாமகவில் சமீபத்திய குழப்பம் நடக்கக் காரணமான ஜி. கே.மணியை வைத்துப் பிரித்ததுடன், கூட்டணி அமைத்த கோபம் காரணமாக மருத்துவர் ச. ராமதாஸ் தற்போது வடமாவட்டங்களில் 40 தொகுதிகளிலும் போட்டி எனவும், முதல்வராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாள் முதல் பாஜகவால் பாதிக்கப்பட்டவள் வி. கே.சசிகலா நடராஜன் தரப்பு தென்மாவட்டங்களில் 30 தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டம் எனத் தகவலென்பது அரசியல் முட்டுச் சந்தில் போயஸ் தோட்டத்தின் வி. கே. சசிகலா நடராஜனும், திக்குத் தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் தோட்டத்து மருத்துவர் ச. ராமதாஸும் தடுமாறும் நிலைமை. 2026 தேர்தல் கணக்கு!
ஒரு காலத்தில் ஜெ.ஜெயலலிதாவின் நிழலாக வலம் வந்த வி. கே.சசிகலா நடராஜன் தற்போது கிட்டத்தட்ட அரசியல் வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணி அமைய மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தவர் தற்போது கூட்டணிக்காக தைலாபுரத்தின் கதவுகளை தட்டி இருக்கிறார். அஇபுதமமுகவில் இணைந்திருக்கும் அவர் தற்போது முக்குலத்தோர் அதிகம் வாழும் ஆவடி தொகுதியில் போட்டியிடத் திட்டமிருக்க
அவரது அரசியல் எதிர்காலம் வெற்றி இல்லை எனில் டெபாசிட் கிடைக்கிறதோ? இல்லையோ? என்ற நிலைமை, அதேபோல் தனித்துத் தான் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சி செபஸ்தியான் சைமன் எனும் சீமானும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார்கள் . ஆளும் கட்சியான திமுக கூட்டணியை பலப்படுத்தி தொகுதி பங்கிட்டு மேற்கொண்டு வருகிறது. பல விமர்சனங்கள் இருந்தாலும் கட்சியை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக நம்பும் தே ஜ கூ வில் உள்ள எடப்பாடி கே.பழனிச்சாமி கூட முதல்வர் வேட்பாளர் இல்லாத பெருமிதம் தெரிவித்து வருகிறார். ஆனால் அதிமுகவின் இராஜமாதாவாக தன்னை அறிவித்துக் கொண்ட வி. கே.சசிகலா நடராஜன் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தைலாபுரத்துக் கதவுகளைத் தட்டியதால் சபாஷ் தற்போது ஜி. கே.மணியும் இரா.அருளும் வேறு இடம் போக வோண்டிய நிலைமை.
அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட சசிகலா நடராஜன் அதன் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இதற்கிடையே கட்சியினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என சசிகலா நடராஜன் அறிவித்த நிலையில் வெறும் 50 மனுக்களே வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் 50 மனுக்கள் தான் வந்திருப்பது வி. கே.சசிகலா நடராஜனை அதிருப்தி அடைய செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அதில் பாதி சசிகலா போட்டியிட வேண்டும் என வந்திருப்பது தான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. இதில் பாதி நபர்கள் ஏழைகள் சிலர் சசிகலா தரப்பு எபபடியும் தரும் பணத்தை நம்பி வந்த சிலர் இந்த நிலையில் ஆவடித் தொகுதியில் சசிகலா போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கேட்டு வருகின்றனர். ஆவடி தொகுதிக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை என சொல்லும் அரசியல் பார்வையாளர்கள் அங்கு உள்ள 30 சதவீதம் முக்குலத்தோர் வாக்கு வங்கியை கவனிக்க வில்லை , சசிகலா நடராஜன் நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதல்ல அதிமுக தோல்வி அடைய வேண்டும் என்பது தான் திட்டம்
அதிமுக, அமுமுக, பாமக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் சசிகலா நடராஜன் மற்றும் மருத்துவர் ச.ராமதாஸ் தரப்பு ஆதரவு நிர்வாகிகளை நிற்க வைத்து அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். இது மறைமுகமாக திமுகவுக்கு உதவும் செயலாகவே பார்க்கப்பட்டாலும், ஒரு காலத்தில் தன்னைப் பார்த்து கும்பிடு போட்டவர்கள் என்று கண்டு கொள்ளாமல் செல்வதால் ஆத்திரத்திலிருக்கும் அவர் பாஜகவின் பேச்சைக் கேட்டு தன்னை ஓரம் கட்டி விட்டார்களே என கொந்தளிப்பில் இருப்பதோடு அவர்களை தோற்கடிக்க வேண்டும் என முடிவெடுத்து இருப்பதாகச் சொல்கின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்த
ல் ஏற்கனவே இரு துருவ அரசியல் ஈடுபட்டவர்கள் ஒன்று சேர்ந்து விட்டனர். தேமுதிக, ஓ. பன்னீர் செல்வம் திமுகவுடன் ஐக்கியமாகிவிட்ட நிலையில் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கும் சசிகலா நடராஜனும் மருத்துவர் ச.ராமதாஸும் ஒன்றாகச் சேர்ந்து போட்டியிடும் முடிவுக்கு வந்திருக்கின்றனர். அது 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துமா அல்லது புஸ்வானமா என்பது தான் பலரது தற்போதைய கேள்விலி. கே.சசிகலா நடராஜன் மற்றும் மருத்துவர் ச.ராமதாஸ் ஆகிய இருவருமே தங்கள் சார்ந்த ஜாதி பலத்தை நம்பிக்கை வைத்தே தேர்தலில் இணைந்து களம் காண்கிறார்கள். ஆனால் மருத்துவர் ச.ராமதாஸைப் பொறுத்தவரை 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு MBC யில் வன்னியர் (கவுண்டர், படையாச்சி, நாயக்கர் ) களுக்குத் தேவை என்பது தான் அவருடைய பிரதான நோக்கமும், அது சார்ந்த போராட்டமும்.
ஆனால் முக்குலத்தோருக்கு அதாவது (கள்ளர், மறவர் DNC/MBC , or BC, ) அகமுடையார் BC அந்த 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என்பது எதிரானதாக அமையும் எனவே அதைக் கொடுக்கக் கூடாது என்பது முக்குலத்தோரின் சிலர் நிலைப்பாடு. கடந்த தேர்தலில் இந்த எதிரும் புதிருமான நிலைப்பாடுகளே வெற்றி வாய்ப்புகளை பாதித்தது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் தேர்தல் களத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலம் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை ஜெயலலிதாவின் உயிர் தோழி வி. கே.சசிகலா நடராஜனும் (அவரால் ஆடசியில் பலனடைந்த சிலரும், பலனடையாத பலரும்) முக்குலத்தோரும் ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது மருத்துவர் ச.ராமதாஸ் அந்த 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டுக் கொள்கையை கைவிடப் போகிறாரா?
வி. கே.சசிகலா நடராஜனுக்கு தனது அக்கா வனிதாமணியின் மகன் டி.டி.வி. தினகரன் மீது இருக்கும் சமீபகாலக் கோபத்தையும், மருத்துவர் ச.ராமதாஸுக்கு தனது மருமகள் மருத்துவர் சௌமியா அன்புமணி மீதிருக்கும் குடும்பக் கோபத்தையும் வெளிக்காட்டுவதற்காக மட்டுமே இருவரும் தேர்தலில் தற்போது களம் காண்கிறார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்.
இதில் ஜி.கே.மணி தைலாபுரம் விருந்தில் கண்ட முகம் காட்டும் கணணாடி என்பது போலவே அமைந்துள்ளது. இதைக் கவனித்த அவரது எதிர் தரப்பு "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வ தென்பதேது ? அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும் அரும்பிட முடியாது! அமைதியழிந்தது.,!, புயலும் எழுந்தது.....!!,ஆணவம் இன்றோடொழிந்தது!!!. எனப் பாடும் நிலை தான். மருத்துவர் அய்யா வுடன் இருக்கிறோம், தைலாபுரத்தை காக்கிறோம் என

































கருத்துகள்