பாஜகவால் பழி வாங்கப்பட்டவர் பத்து ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் அதிமுக பொதுச் செயளாளர் பதவி வரும் எனக் காத்திருந்த
வி. கே.சசிகலா நடராஜன் புதிதாக கட்சிமைத் தொடங்கவில்லை! ஆனால் விலைக்கு வங்கி அதில் இணைந்துள்ளார் .மதுரையைச் சேர்ந்த சக்கரவர்த்தி. இந்தியத் தேர்தல் ஆணையத்தில் 2016 ஆம் ஆண்டு 'அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் கட்சியை பதிவு செய்தார்.
அதைத்தான் தனது கட்சிப் பெயராக விலைக்கு வாங்கி வி. கே.சசிகலா நடராஜன் அறிவித்தார். அதாவது அஇபுதமமுக கட்சியை வாங்கி இணைந்துள்ளார். அதுவே தேர்தல் ஆணையத்தின் பதிவு. கூறும் உண்மை. இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தேசியக் கட்சிகளாகவும், மாநிலக் கட்சிகளாகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர, வேறு சில கட்சிகள் தங்களை அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. அவை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி நிலவரப்படி 2,064 கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) 2019 ஆம் ஆண்டு முதல் தேர்தல் போட்டிகளில் பங்கேற்காத 345 க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் (RUPP) பதிவை ரத்து செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மமக, மஜிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கும். இக்கட்சிகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 29A-ன் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. https://www.eci.gov.in/list-of-political-parties வி. கே.சசிகலா நடராஜன் புதிதாக கட்சி தொடங்கவில்லை! இணைந்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த சக்கரவர்த்தி. தேர்தல் ஆணையத்தில் 2016 ஆம் ஆண்டு 'அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற கட்சியை பதிவு செய்தார்.
அதைத்தான் தனது கட்சிப் பெயராக விலைக்கு வாங்கி வி. கே.சசிகலா நடராஜன் அறிவித்தார். அதாவது அஇபுதமமுக கட்சியில் இணைந்துள்ளார். அதுவே தேர்தல் ஆணையத்தின் பதிவு இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) பதிவு நீக்கம் செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இடைக் காலத் தடை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த ஆறு ஆண்டுகளில் சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை ECI ரத்து செய்தது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகள் பதிவு நீக்க உத்தரவுகளை எதிர்த்து ரிட் மனுக்களை தாக்கல் செய்தன.
இடைக்காலத் தடை விதிப்பது என்பது அந்தக் கட்சிகள் வரவிருக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் என்று நீதிமன்றம் கூறியது.
மனுதாரர்கள், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29A, அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு மட்டுமே வழங்குகிறது என்றும், பதிவை ரத்து செய்ய அல்ல என்றும் வாதிட்டனர்.
1897 ஆம் ஆண்டு பொது உட்பிரிவுகள் சட்டத்தின் பிரிவு 21 ஐ கட்சிகளின் பதிவை ரத்து செய்ய பயன்படுத்த முடியாது என்றும், இந்தியத் தேசிய காங்கிரஸ் எதிர் சமூக நல அமைப்பு 2002 ஆம் ஆண்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவர்கள் சார்ந்திருப்பதாகவும் வாதிட்டனர்.2002 ஆம் ஆண்டு தீர்ப்பில், ஏமாற்றுதல், மோசடி அல்லது அரசியலமைப்பு மற்றும் சமதர்மம் மற்றும் மதச்சார்பின்மை போன்ற அதன் கொள்கைகளுக்கு விசுவாசம் இழத்தல் போன்ற தீவிர நிலைகளில் மட்டுமே பதிவை ரத்து செய்ய அனுமதிக்கப் படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324 என்பதின் கீழ் வெளியிடப்பட்ட 2014 ஆம் ஆண்டு வழி காட்டுதல்களை ECI சார்ந்துள்ளது என்பதோடு கட்சிகள் ஆறு ஆண்டு காலத்திற்குள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இது கோருகிறது. 1987-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில், செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையுடன் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்த நாவலர் இரா. நெடுஞ்செழியன், க. இராசாராம், செ. அரங்கநாயகம், பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் ஆகிய நால்வர் இணைந்து 'அதிமுக (நால்வர் அணி)' எனும் பிரிவை உருவாக்கினர். இந்த அணி, ஜானகி ராமசந்திரன் அணிக்கு ஆதரவாக செயல்பட்டது, மற்றும் வி. கே.சசிகலா நடராஜன் குடும்பத்தின் ஆதிக்கத்தை எதிர்த்தது, தென்னை மரச் சின்னம் ஒதுங்கி அது தோல்வி தான் கண்டது. தமிழ்நாடு கண்ட ஆட்சிகளிலேயே மிக மோசமானதாகக் கருதப்படும் ஆட்சி, தற்போது நடக்கும் ஊழல் நிர்வாகச் சீர்கேடு நிறைந்த திமுக ஆட்சியும் 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை நடந்த அதிகார துஷ்பிரயோகம், அளவு கடந்து ஊழல் மோசடி நிறைந்த செல்வி ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சியும். கடந்த முறை நடந்த எடப்பாடி கே.பழனிசாமி தலைபையிலான சுய நிர்வாகம் இல்லாத அடிமை ஆட்சியும்
வளர்ப்பு மகன் என சுதாகரன் திருமணம், மகாமகக் குளத்தில் நிகழ்ந்த மரணங்கள் மட்டுமின்றி, ஊழலும் அராஜகமும் கூட சகிக்க முடியாத அளவுக்கு இருந்த காலமது.
பிற்காலத்தில் செல்வி ஜெ.ஜெயலலிதாவிடம் காணப்பட்ட சிறப்புகள் கூட 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டில் வெளிப்பட்டதில்லை. அதான் பின் வந்த தேர்தலில் பலத்த தோல்வி கண்டார், 12 வருடம் கரைந்து போன பின் திமுக ஆடசிக்கு வந்த நிகழ்வு அந்த அளவுக்கு ஜெ.ஜெயலலிதாவும் பெயர் கெடக் காரணமாக இருந்த பெருமைக்குரியவர் உடன் பிறவா சகோதரி வி. கே.சசிகலா நடராஜன் .
எந்தப் பதவியும் வகிக்காமலேயே மன்னார்குடி அவரது குடும்பத்தில் பல கோடீஸ்வரர்கள் உருவானது தான் தமிழ்நாடு கண்ட பலன்.
ஊழலின் உச்சம் தொட்ட காரணத்தால் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு சோகமாக முடிந்ததோடு, இருவரும் குறறவாளி என வழக்குப் போட்ட டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, அனுமதி வழங்கிய ஆளுநர் டாக்டர் சென்னாரெட்டி, உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ நிவாசன், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த ஊழல் தடுப்பு துணைக் கண்காணிப்பாளர் நல்லமநாயுடு, தனி நீதிபதி மைக்கேல் டி.குன்கா தந்த தீர்ப்பு என சிறைத் தண்டனை அனுபவித்து அவரது மரணமும் இவரது சிறையும் முடிந்து வெளியே வந்து விட்டார். பத்து வருடம்
அதன் பிறகும், சசிகலா நடராஜனின் அரசியல் ஆசை முடிவுக்கு வரவில்லை. செல்வி ஜெ.ஜெயலலிதா மூலம் சம்பாதித்து பெற்றவற்றை முதலீடாகக் கொண்டு இப்போது புதிய கட்சியை விலைக்கு வாங்கி புதிய பயணம் தொடங்கியுள்ளார். அதாவது தன்னால் உறுவாகி பின் பாஜக அடிமை கொண்ட
எடப்பாடி கே.பழனிசாமியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே அவரது பிரதான நோக்கம் அதற்கு அவரது ஆதரவாளர்கள் அணைத்து நபர்களும் கர்நடகா வா.புகழேந்தி உள்ளிட்ட பலர் திமுகவில் சங்கமம் என்பது தெரிந்த விஷயம்.
அதிமுகவிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு, அவருக்கு ஆதரவில்லை. அவர் முக்குலத்தோரில் தஞ்சாவூர் கள்ளர் என்பதால், முக்குலத்தோர் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு அவரை ஆதரிப்பார்கள் என்பது தவறான கணக்கு. அவரும் அவர் சார்ந்த சமூகத்திற்கு பெரிதாக எதுவும் ஆட்சி அதிகாரம் இருந்த போது செய்யவில்லை, தமிழ்நாடு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அவருக்கு அரசியல் செல்வாக்கு பத்து ஆண்டுகள் கடந்த பின் இருப்பதாகவும் தெரியவில்லை. காரணம் உண்மை பேச வேண்டிய போது பேசாமல் காலம் கடந்து அரசியல் வருகை. இப்போதும் மக்களுக்காண திட்டம் அவரிடம் இல்லை, அடுத்த தலைமுறை வாக்காளர் வந்து விட்ட நிலைமை, அதிமுகவில் எடப்பாடி கே.பழனிசாமி மட்டுமே அவரது எதிரி மற்றும் துரோகி ஆனால் டி. டி. வி.தினகரன் அவரது அக்கா வனிதாமணியின் மகன் எதிரி போல இருவரும் பேசி வைத்து சித்தரிக்க அதிமுக கூட்டணி ஊடாடி உள்ள நிலை உண்மை இனி வெளி வரலாம்.
தமிழ்நாட்டு மககளுககு கடுகளவும் பயன் தர முடியாத கட்சிகள் இங்கு ஏராளமாக உள்ளன. அவற்றில் ஒன்றாகத்தான் சசிகலாவினால் விலைக்கு வாங்கிய கட்சியும் இருக்கும்.
அவரை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு அவரது கட்சிக்கு தொகுதி ஒதுக்கும் அளவுக்கு எந்தக் கட்சியும் விவரம் அற்றதாக இருக்காது என்றே பார்க்கத் தோன்றுகிறது.
அதிமுக, முன்பிருந்த நிலைக்கு கொண்டு வரப்படுவது நல்லதுதான். ஆனால் அதை பாஜக அனுமதிக்காது, அதை மீட்க சசிகலாவுக்கு நடராஜன் இல்லாத இந்த நிலையில் இருக்கிறதா என்பது சிந்தனைக்குரிய கேள்வி.
ஒரு வேளை, 2026 தேர்தலில், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக மிக மோசமான தோல்வியை சந்தித்தால், அப்போது அங்கிருந்து பலர் இவர் பக்கம் தாவும் வாய்ப்பும் இருக்கிறது. சசிகலாவும் அதைத்தான் அமமுக வின் டி. டி. வி.தினகரன் மூலம் எதிர்பார்க்கிறார்.
ஆனால், அது கடந்து சசிகலா நடராஜனின் கட்சி எந்த அளவுக்கு மக்களால் தேர்தல் களத்தில் ஏற்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது.
அதற்கு வாய்ப்பு மிகக் குறைவு என்றே பலர் நினைக்க. கூட்டணி பாஜக உள்ள இடத்தில் அவர் சேர வாய்ப்பு இல்லை. ஆனால் இதுவரை ஏன் தன்மீதான குற்றச்சாட்டுகளை அவதூறுகளை மறுக்க வில்லை எனவோ பாஜக குறித்து உண்மை நிலை கூறாத வரை அவர் அரசியல் ரீதியாக வெல்வது கடினம் ..
" "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ....... " என கண்ணப்பர் போல் என்னிடம் அன்பு இல்லை என்று கண்டபின்னும் என்னை ஏற்றுக் கொள்வாயோ" என்கிறார் மணிவாசகர் பெருமான் . பக்தியானாலும், அரசியல் ஆனாலும் இதுவே பொது நீதி.
























கருத்துகள்