முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு வழங்கிய தண்டனையை ரத்து செய்ய முடியாது ஆனால் இடைக்காலம் நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்,
முன்னாள் சிறப்பு டிஜிபி ரா
ஜேஷ் தாஸுக்கு வழங்கிய தண்டனையை ரத்து செய்ய முடியாது ஆனால் இடைக்காலம் நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்,
கடந்த அதிமுகவின் ஆட்சியில் காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். இவர் பியூலா வெங்கடேசன் ஐஏஎஸ் முன்னாள் கணவர் கடந்த 2021ஆம் ஆண்டுபாதுகாப்புப் பணியிலிருந்த பெண் காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாரில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து வழக்கை விசாரித்த விழுப் புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ராஜேஷ் தாசுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
அதைதையடுத்து உத்தரவுக்கு எதிராக ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு வழக்கை விசா ரித்த சென்னை உயர்நீதி மன்றம், 3 ஆண்டு சிறை தண்டனையையும் நிறுத்தி வைக்க முடியாதென்றும் திட்டவட்டமாக தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்திருந்த நிலையில் மேற் கண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தர வுக்கு எதிராக ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில்," இந்த விவகாரத் தில்உயர்நீதிமன்றம் வழங் இய உத்தரவுக்கு தடை விதித்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அதே போன்று மூன்றாண்டு சிறைத் தண்டனை என்பதையும் ரத்து செய்ய வேண் டுமென்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதி, இந்தவழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக எந்தவித உத்தரவும் பிறப் பிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார். மேலும், நிலவையில் உள்ள மறு ஆய்வு மனுவை விரைந்து விசாரிப்பது குறித்து உயர் நீதிமன்றத் தில் முறையிடலாமென்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். மேலும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி மேலும் தண்வைத்து தண்டனைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க முறையிட தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் அனுமதியளித்தனர்.



கருத்துகள்