NDA கூட்டணியில் தொகுதிப்பங்கீடு
அஇஅதிமுக-170, ல் (பகுஜன்சமாஜ் ஆம்ஸ்ட்ராங் 1), பாஜக- 27, பா.ம.க-18, அமமுக-11, தமாக(மு)-2, இன்னும் முடிவாகாத நிலை, IJK -2, புதிய நிதிக்கட்சி-2, A.C.திருமாறன்-1, P.ஜான்பாண்டியன்-1, ஆகிய இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்கள்,மருத்துவர் அன்புமணி பாமகவுக்கு 18 தொகுதிகளும், டி.டிவி தினகரன் அமமுகவுக்கு 11 தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்வதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த
அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, புரட்சி பாரதம், தமமுக, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, பகுஜன்ஜமாஜ் (ஆம்ஸடராங் )ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இன்றைய தினம் தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் எனக் கூறப்பட்டதன்படி பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று மார்ச் 23 ஆம் தேதி சென்னை வந்துள்ளார்.
அவர் இந்த கூட்டணி அமைந்தவுடன் முதல்முறையாக எம்ஜிஆர் மாளிகைக்குச் சென்று எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்த போது அவர்களுக்கு ஏற்கனவே டெல்லியில் பேசி முடிவு செய்து 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதிலும் காங்கிரஸ் கட்சியை விட ஒரு தொகுதி குறைவு.
234 தொகுதிகளில் 56 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 178 தொகுதிகளில் 8 முதல் 10 தொகுதிகள் புதிய நீதி கட்சி, தமாகா, தமமுக, புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, பகுஜன் ஜமாஜ் (ஆம்ஸ்டராங்) ஆகியவைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். எனவே அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிடும்
2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 4 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது. அது போல் பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஏற்கெனவே 1 மாநிலங்களவை சீட் கொடுக்கப்பட்டு விட்டதால் பாமகவுக்கு இந்த முறை குறைந்த தொகுதிகளே ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதாவது பாஜகவுக்கு 7 கூடுதல், பாமகவுக்கு 5 குறைவு இப்படி இடங்கள் ஒதுக்கீடு நடந்தது.ஆம்ஸ்ட்ராங், கடந்த 2000ஆம் ஆண்டு புரட்சி பாரதம் கட்சியில் இணைந்தார், பின் 2006-ல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் அமைப்பைத் தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு 99ஆவது வட்டத்தின் மாமன்ற உறுப்பினரானார்.
2007ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2007 ஆம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை 17 ஆண்டுகள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். அவரது மனைவி பொற்கொடி அதிமுகவின் கூட்டணியில் தற்போது இணைகிறார்.பாஜகவின் கரு. நாகராஜன் மீதான புகார் மற்றும் சரத்குமார் தனியே பழைய கட்சியை துவங்கியது எதார்த்தம் இல்லை. அரசியல் திட்டம்சரத்குமாரை பாஜக பெரிதாக நினைக்காது உண்மையில்
ஓர் உட்கட்சி ஜனநாயகம் பாஜகவில் இருக்கிறது! அது 70 சதவீதம் ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் கொண்டது
மாற்றுக் கட்சியில் இருந்து வந்து போகிறவர்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதில்லை!
போனவுடனேயே மாவட்டச் செயலாளர் மாநிலச் பதவிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் என்ற எந்த அதிகார பதவிகளும் அவ்வளவு சீக்கிரமாகவோ சுலபமாகவோ வழங்கப்படுவதில்லை!
உதாரணமாக கடந்த தேர்தலில் விஜயகாந்த் மகனை எதிர்க்க அவருக்கு நீண்ட காலம் உடன் நடித்த ரே ஜாதி ராதிகா தேர்வானது தனிக்கதை, அதேபோல கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பேத்தி விஜயதாரணி நடிகை குஷ்பு, சரத்குமார், மற்றும் திமுகவிலிருந்து சென்ற வி.குழந்தைவேலு முன்னாள் திமுக எம்பி. கு.க.செல்வம்: முன்னாள் ஆயிரம் விளக்கு எம்எல்ஏ ராமலிங்கம்: முன்னாள் திமுக எம்பி க. வடிவேல்: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ.செ.வெங்கடாசலம் சேலம் வி.பி.துரைசாமி முன்னாள் திமுக துணைப் பொதுச்செயலாளர் இன்னும் பலருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை!
இந்த வகையில் பாராட்டப்பட வேண்டிய கட்சி என்றால் அது பாஜக தான்!
அதனால் வெளியேறினால் நஷ்டம் சரத்கமார் கடசிக்குத் தான் பாஜகவிற்கு பாதிப்பு இல்லை.பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் மீது சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணித் தலைவர் பாலியல் தொல்லை என பிரதமருக்குச் சென்ற புகார்.
தமிழ்நாடு பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் இவர் சென்னையில் வசித்து வந்த போதும் இவர் சிவகங்கை மாவடடம் சிறாவயல் தான் சொந்த ஊர். இவர் மீது பாஜக சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணித் தலைவரான ந.தங்கசோபனா பாலியல் தொல்லை புகாரளித்துள்ளார்
2018- ஆம் ஆணடில் கட்சியில் இணைந்த தங்கசோபனாவிடம், மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்ற முறையில் கரு.நாகராஜன் அறிமுகமாகி அவரது தொலைபேசி எண்ணைப் பெற்றுள்ளார்
இந்த நிலையில் கரு.நாகராஜன் நள்ளிரவு நேரங்களில் போன் செய்து, தனக்கு அவர் மீது ஈர்ப்பு இருப்பதாகக் கூறித் தனியாகச் சந்திக்க அழைத்ததாகப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
ஒருமுறை கட்சி அலுவலகமான கமலாலயத்தில் மரியாதை செலுத்த வந்த தங்கசோபனாவைத் தனியாக அழைத்து, கரு.நாகராஜன் பாலியல் தொல்லை அளிக்க முயன்றதாக புகரில் தெரிவித்துள்ளார்
2022 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் 187-வது வார்டில் போட்டியிட இவருக்கு வாய்ப்பிருந்தும், கரு.நாகராஜனின் தலையீட்டால் அந்த வாய்ப்பு பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது அரசியல் காரணமாக கூறப்பட்ட நிகழ்வா இல்லை உண்மையா எனபது விசாரணைக்குப் பின் தான் தெரியும்.இந்தவிவகாரத்தில் ஒரு பொதநீதி யாதெனில் :1.சீட்டு எதிர்பார்த்து காத்திருப்பவர்கள்
2.தனக்கு போட்டியாக இருப்பவர்களை களத்தில் இருந்து அப்புறப்படுத்த துடிப்பவர்கள்
3.நான் விட்டுக் கொடுத்து விடுகிறேன் என்று ரேட் கார்டு போட்டு வைத்து பேரம் பேசுபவர்கள்
4.முக்கிய பதவிகளில் நீண்ட காலமாக இருப்பவர்களை காலி செய்ய காத்திருந்தவர்கள்
5.தேர்தல் நிதியில் கண் வைத்திருப்பவர்கள் மற்றும் சம்பவம் நடந்த போதே புகார் தராமல் தேர்தல் நேரம் தருவதால் இதில் சூழ்ச்சி உள்ளது.
இது போன்ற நீளமாக எழுதக்கூடிய பல விசயங்கள். ஆனால் இந்த புகார் நீண்ட வருடங்களாக இழுவை போல இழுத்து வந்து இப்போது புதிது போல வெளியே வந்துள்ளது.
யாரோ பின்னால் இருக்கின்றார்கள்.தற்போது 27 தொகுதிகள் பா.ஜ.க.
2014 ஆம் ஆண்டில் தாமரைச் சின்னத்தில் நின்றவர்கள் 9 பேர். அதில் பா.ஜ.க சார்ந்த நபர்கள் 6 பேர் மட்டுமே. இதில் பிணைத் தொகை (டெபாஸிட்) யை திரும்பப் பெற்றவர்கள் 4 பேர். ஹெச்.ராஜாவுக்கும், கருப்பு முருகானந்தத்துக்கும் அது கிடைக்கவில்லை.
2024 ஆம் ஆண்டு தாமரைச்சின்னத்தில் நின்றவர்கள் 23 பேர். அதில் பா.ஜ.க நபர்கள் 19 பேர். நைனார் நாகேந்திரனை பா.ஜ.க ஆளாக நாம் பார்க்கவில்லை. எனில் 18 பேர். இதில் பிணைத் தொகை (டெபாஸிட்) யை திரும்பப் பெற்றவர்கள் 9 பேர். பாதிக்குப் பாதி 16.67 சதவீதம் ஓட்டு கூட கிடைக்கவில்லை. அதாவது பாதிக்குப் பாதித் தொகுதிகளில் ஆறுக்கு ஒருவர் கூட பா.ஜ.க.வுக்கு ஓட்டளிக்கவில்லை.
2014 ஆம் ஆண்டில் நின்ற ஆறு தொகுதிகளில் கிடைத்த மொத்த வாக்குகள் - 13,84,235.
2024 ஆம் ஆண்டில் நின்ற 18 தொகுதிகளில் கிடைத்த மொத்த வாக்குகள் - 36,62,148.
சராசரியாகப் பார்த்தால் 2014 ஆம்ஃஆணடிபா.ஜ.க.வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கியிருக்கிறது அ.தி.மு.க. இதை ஒரு வெற்றியாகவே நான் பார்க்கிறேன். சென்றாண்டு ஏப்ரலில் கீழுள்ள் பதிவை எழுதினேன். அப்போது வந்து உருண்டு புரண்டவர்களில் பலரும், பா.ஜ.க 50 இடங்களுக்குக் குறையாது சட்டமன்றத் தேர்தலில் கேட்கும் என்றார்கள். அதில் பாதி மட்டுமே சரியாக இருக்கும் என்று அவர்களே முடிவு செய்துள்ளனர். இனி முன்னர் எழுதிய பதிவு.
பா.ஜ.க.வுக்குத்தான் அ.தி.மு.க மிகவும் தேவை. அதனால் தான் அமித்ஷா ஓடி வந்தார் என்று ஏன் சொல்கிறேன்?
2024 தேர்தலில் அண்ணாமலையின் அலையில் அனைத்துமே மாறப்போகிறது என்றார்கள். மாறவில்லை. ஆனால் முன்பைவிட இப்போது பா.ஜ.க வளர்ந்துவிட்டது. 18% ஓட்டைப் பிடித்துவிட்டோம் என்றார்கள். அவர்கள் என்ன பிடித்தார்கள் என்று பார்க்கலாம்.
2014ல் தாமரைச் சின்னத்தில் நின்ற வேட்பாளர்கள் 9 பேர். அதில் பா.ஜ.க ஆள்கள் 6 பேர் மட்டுமே. இதில் பிணைத் தொகை (டெபாஸிட்) திரும்பப் பெற்றவர்கள் 4 பேர். ஹச்.ராஜாவுக்கும், முருகானந்தத்துக்கும் கிடைக்கவில்லை.
2024ல் தாமரைச்சின்னத்தில் நின்றவர்கள் 23 பேர். அதில் பா.ஜ.க ஆள்கள் 19 பேர். நயினார் நாகேந்திரனை பா.ஜ.க ஆளாக நான் பார்க்கவில்லை. எனில் 18 பேர். இதில் பிணைத் தொகை (டெபாஸிட்) திரும்பப் பெற்றவர்கள் 9 பேர். பாதிக்குப் பாதிப் பேருக்கு 16.67% ஓட்டு கூட கிடைக்கவில்லை. அஃதாவது பாதிக்குப் பாதித் தொகுதிகளில் ஆறுக்கு ஒருவர் கூட பா.ஜ.க.வுக்கு ஓட்டளிக்கவில்லை.
2014 ஆம் ண்டில் நின்ற ஆறு தொகுதிகளில் கிடைத்த மொத்த வாக்குகள் - 13,84,235.
2024 ஆம் ஆண்டில் நின்ற 18 தொகுதிகளில் கிடைத்த மொத்த வாக்குகள் - 36,62,148.
சராசரியாகப் பார்த்தால் 2014 ஆம் ஆண்டில் ஒரு தொகுதிக்கு 2.3 லட்சம் வாக்குகளும், 2024 ஆம் ஆண்டில் 2.03 லட்சம் வாக்குகளுமே பெற்றிருக்கின்றனர். அப்படி நேரடிக்கணக்காகப் பார்ப்பது சரியான முறையில்லை என்றாலும் அதுவும் ஒரு கவனிக்கத்தக்க கணக்கீடாகும்
கோயம்பத்தூர் , கன்னியாகுமரி, தென்சென்னை, தஞ்சாவூர் தொகுதிகளில் தான் 2014 ஆம் ஆண்டிலும், இம்முறையும் ஒன்றாகப் பா.ஜ.க நின்றிருக்கிறது. கோயமுத்தூரில் சென்ற முறையும் இம்முறையும் 33 சதவீதம் கன்னியாகுமரியில் இம்முறை 2 சதவீதம் குறைவு, தென்சென்னையில் 2 சதவீதம் கூடுதல். தஞ்சாவூரில் 2014 ஆம் ஆண்டில் 5 சதவீதம் மட்டுமே வாங்கியவர்கள், இம்முறை 16.79 சதவீதம் வாங்கி பிணைத்தொகையைத் திரும்பப் பெற்றுவிட்டனர்.
புதிதாகக் களம் கண்ட தொகுதிகளில், மத்திய சென்னை, நீலகிரி, மதுரை, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி ஆகிய ஐந்தில் பிணைத் தொகை வாங்கிவிட்டது. தற்போதய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செல்வாக்குள்ள தொகுதியில் முன்னால் தலைவர் கே.அண்ணாமலை நின்று அதேயளவு வாக்குகளையே பெற்றிருக்கிறார். பிணைத்தொகை வாங்கிய இந்த 9 தொகுதிகளிலிருந்தே இவர்களின் 64 சதவீதம் வாக்குகள், அதாவது மூன்றுக்கு ஒரு வாக்கு வந்திருக்கிறது. அதிலும் 7 தொகுதிகளிலேயே 50 சதவீதம் வாக்கு வந்துவிட்டது. மீதமிருக்கும் 11 தொகுதிகளும் சேர்த்து 50 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்தம் பதிவான 4.34 கோடி வாக்குகளில், இவர்கள் பெற்ற 36.62 லட்சம் வாக்குகள் என்பவை வெறும் 8.44 சதவீதம் மட்டுமே.

























கருத்துகள்