முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரட்டைக் கொலை வழக்கு 683 பக்கம் தீர்ப்பு காவல்துறைக் குற்றவாளிகளுக்கான சவுக்கடி

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு 683 பக்கம் தீர்ப்பு காவல்துறைக் குற்றவாளிகளுக்கான சவுக்கடி.             



குற்றவாளிகள் காவல் துறை ஆய்வாளர் ஶ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது காவல்துறை பணியாளருக்குமே தூக்கு தண்டனை விதித்து மதுரை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.

செல்போன் விற்பனைக் கடை நடத்திய ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை ஆறாண்டுகளுக்கு முன் காவல் நிலையத்தில் காவலில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர் 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி கொரோனா பரவல் காலத்தில் காவல்துறை பணியில் இருந்த காவலர் சிலரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு




 21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்படவர்கள். ஜூன் மாதம் 22-ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில் பென்னிக்ஸ் உயிரிழந்தார். அவரது தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் அதிகாலையில் உயிரிழந்தார்.

இந்த விவகாரம்  பெரிய அளவில் தமிழ்நாடு மக்கள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியது. வழக்கை சூமோட்டோவாக எடுத்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் , அறிக்கை தாக்கல் செய்யம்படி மாவட்டக் காவல்துறைக்கு உத்தரவிட்டதற்குப் பின்  வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் குற்றம்சடடப்பட்ட பத்து நபர்கள் இந்த வழக்கில் இரு கட்டங்களாக 2,427 பக்கங்களைக்கொண்ட குற்றப் பத்திரிகையை மத்தியப் புலனாய்வுத் துறை சிபிஐ தாக்கல் செய்தது.



மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்துமே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் விசாரணை அணைத்தும் முடிவடைந்து வழக்கின் தீர்ப்பு மார்ச் மாதம் 23-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.




இவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், தண்டனையை அறிவிக்கும் முன்பாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். அதில் 

"இருவரையும் கொல்லும் நோக்கத்தில் இதைச் செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் எதுபோன்ற தண்டனை அளிக்கலாம் எனக் கேட்டபோது, உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென மத்திய அரசு கூறியது. அதேபோல, தமிழ்நாடு அரசும் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென கூறியது.'' என நீதிபதி தெரிவித்தார்




இது முழுக்க முழுக்க மனித கண்ணியத்தை மீறும் செயலாக அமைந்திருக்கிறது என்றார் நீதிபதி.

''இதனை நீதிமன்றம் சாதாரணமாக கடந்துசொல்ல முடியாது. அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பு கிடைத்தும் திருந்தவில்லை. கொரோனா காலகட்டத்தில் கடையைத் திறந்து வைத்தார்கள் என்பதற்காக இப்படித் தாக்கியிருக்கிறார்கள்.





இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தானாக விசாரித்திருக்காவிட்டால், அவர்களது உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.''

''நிராயுதபாணியாக நின்றவர்களை இவர்கள் தாக்கியுள்ளனர். இவர்களை மன்னிக்க வேண்டியதில்லை. வயது, குடும்ப சூழலை காரணம் காட்டி இவர்களுக்கு குறைந்த தண்டனை விதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதிரிகள் நல்ல மன நிலையில் இதனைச் செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள். வேலியே பயிரை மேய்ந்ததுபோல மக்களைக் காக்க வேண்டிய காவல்துறை அவர்களைத் தாக்கியுள்ளது.'' என நீதிபதி கூறினார்






இந்தச் செயலைப் பார்க்கும்போது மனம் வெந்து போகிறது என கூறியவர், ''பென்னிக்சின் தாயாரின் துக்கத்தை யாரும் தீர்க்க முடியாது. ஒரு குடும்பத்தின் ஆணி வேரே பிடுங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆயுள் தண்டனை போதுமானதாக இருக்காது.'' என்றார்

இது அரிதினும் அரிதான வழக்கு எனக் கூறிய நீதிபதி 

''இப்படி ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு, 14 வருடங்களில் வெளியில் வந்துவிடலாம் என எதிரிகள் சுலபமாக நினைக்கலாம். ஆனால், அப்படி விட்டுவிட நீதிமன்றம் தயாராக இல்லை" எனத் தெரிவித்த நீதிபதி ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனை விவரங்களை அறிவித்தார்.அதன்படி முதல் குற்றவாளி ஆய்வாளர் ஸ்ரீதருக்கு இரட்டை மரண தண்டனையும் தவிர, பல சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறையுமா, 3 ஏழாண்டு சிறை, மூன்றாண்டு சிறை தண்டனை ஆகியவை விதிக்கப்பட்டன. இது தவிர, 24,10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இரண்டாவது குற்றவாளி, பாலகிருஷ்ணனுக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழே ஒராண்டும், ஏழாண்டு சிறை தண்டனையும் இரட்டை மரண தண்டனையும் 16,80,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.




மூன்றாவது குற்றவாளி ரவி கணேஷுக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஓராண்டு, ஏழாண்டு சிறை தண்டனையும் இரட்டை தூக்கு தண்டனையும் 5,20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. நான்காவது குற்றவாளியான தலைமைக் காவலர் முருகனுக்கு இரட்டை தூக்கு தண்டனையும் சில சட்டப் பிரிவுகளின் கீழ் ஓராண்டு மற்றும் ஏழாண்டு சிறை தண்டனையும் 10,10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது  ஐந்தாவது குற்றவாளி சாமிதுரைக்கு இரட்டை மரண தண்டனையும் சில சட்டப் பிரிவுகளின் கீழ் ஓராண்டு மற்றும் ஏழாண்டு சிறை தண்டனையும் 5,60,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆறாவது குற்றவாளி முத்துராஜாவுக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை தண்டனை, மூன்று ஏழாண்டு சிறை தண்டனை, ஒரு மூன்றாண்டு சிறை தண்டனை, இரட்டை மரண தண்டனை ஆகியவை விதிக்கப்பட்டன. இது தவிர, 3,20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஏழாவது குற்றவாளி செல்லதுரைக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 14,40,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. எட்டாவது குற்றவாளி தாமஸ் பிரான்சிஸிற்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 10,54,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஒன்பதாவது குற்றவாளி வெயில் முத்துவுக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 10,54,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.                       




தீர்ப்பு 
கடந்து வந்த பாதை நிலவரம்:-

மார்ச் மாதம் 23ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறையினரும் இந்திய தண்டனைச் சட்டத்தின்  பிரிவுகள் 342 (தவறான சிறைவைப்பு), 195 (பொய்யான ஆதாரம்), 211 (தவறான குற்றச்சாட்டு), 218 (பொது அலுவலர் தவறான பதிவுகள்) மற்றும் 302 (கொலை) ஆகியவற்றின் கீழ், 109 (தூண்டுதல்), 34 (சேர்ந்த நோக்கம்) உடன் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

பின்னர், குற்றவாளிகளின் தற்போதய சொத்துக்கள் , மற்றும் வாங்கிய சம்பளம் மற்றும் குற்றத்தின் தீவிரம் தொடர்பான முழுமையாக அறிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி அறிக்கைகள் அணைத்தம் முறையே தாக்கல் செய்யப்பட்டன. அதன்பின் நடைபெற்ற வாதங்களில், சிபிஐ தரப்பு குற்றவாளிகள் அணைவருக்கும் தூக்கு தண்டனை கோரிய நிலையில், பாதுகாப்புத் தரப்பு தளர்வு கோரியது. இறுதியில், நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை விதித்து உத்தரவிட்டது.

வழக்கில் குறறச் சம்பவம் குறித்த பார்வை:-

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி, கோவிட்-19 ஊரடங்கு விதிகளை மீறி செல்போன் விற்பனைக் கடையை இரவு 9 மணிக்குப் பிறகு திறந்திருந்ததாகக் கூறி  ஜெயராஜ் மற்றும்  பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது  இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி )பிரிவுகள் 188, 269, 294(பி), 353 மற்றும் 506(2) ஆகியன பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்கள் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டவர்களில், பென்னிக்ஸ் ஜூன் 22ஆம் தேதியும், ஜெயராஜ் ஜூன் 23ஆம் தேதியும் உயிரிழந்தனர்.

விசாரணையும் மற்றும் காவல்துறை மீதான குற்றச்சாட்டுகளும் :-

குற்றச் சமபவ வழக்கில் 10  காவல்துறையினருக்கு எதிராக வழக்குபா பதிவு செய்யப்பட்டது. மதராஸ் உயர்நீதிமன்றம் (மதுரை கிளை) தானாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டு, இது முதற்கட்டத்தில் கொலை மற்றும் ஆதாரங்கள் அழித்தல் எனக் குறிப்பிட்டது.

முதலில் சிபி-சிஐடி விசாரணை மேற்கொண்ட நிலையில், மாநில காவல்துறை தலைமை இயக்குனர் கோரிக்கையின் பேரில் வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பு க்கு மாற்றப்பட்டது.

காவல் ஆய்வாளர் எஸ். ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் பி. ரகு கணேஷ், கே. பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் எஸ். முருகன், ஏ. சாமிதுரை மற்றும் கான்ஸ்டபிள்ஸ் எம். முத்துராஜ், எஸ். செல்லதுரை, எக்ஸ். தாமஸ் பிரான்சிஸ், எஸ். வேலுமுத்து ஆகியோர் மீது IPC 302, 342, 201, 182, 193, 211, 218, 120பி மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே கோவிட்-19 ல் பாதித்து  உயிரிழந்தார்.


நீதிமன்றத்தின் ஆய்வுக் கண்டுபிடிப்பு:-

பிரேதப் பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களின் காயங்கள் இயற்கைக்கு மாறானவை என்றும், மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாக ஏற்பட்டவை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. சுய காயப்படுத்தல் என்ற வாதத்தையை பொய் என நீதிமன்றம் நிராகரித்தது.

ஜெயராஜ் உடல் நலக்குறைவு இருந்தபோதிலும், காவல் துறையினரின் தாக்குதலே இருவரின் உயிரிழப்புக்கும் நேரடிக் காரணம் என நீதிமன்றம் உறுதி செய்து, இதை கொலை வழக்காக வகைப்படுத்தியது.பலவிதமான நியாய சட்டப் படிநிலைகளைக் கடந்து வந்த நல்ல தீர்ப்பு.

ஜூன்,மாதம் 2020- முதல் ஏப்ரல் மாதம 2026.வரை காலம் விசாரணை முடியக் காத்திருப்பு 

வழக்கை சிறப்பாக நடத்திக் கையாண்ட மத்திய புலனாய்வுத்துறை (CBI) காவல்துறையின் புலனாய்வுக் 

காவலர்களின் பணிக்கு வெற்றி   பாராட்டுக்கள்...   மற்றும் எதிராக சாட்சியம் அளித்த காவலர் ரேவதியின் நேர்மை மனச்சாட்சி.


குற்றவாளிகளுக்கு பிணை வழங்காமல் ஆறு ஆண்டுகளாக சிறையிலேயே வைத்த நீதிமன்றம்.

தொடக்கPRC வழக்கின் விசாரணையை நேர்த்தியாய்க் கையாண்ட கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன்.

குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனையை தீர்ப்பாக அளித்த மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன்.

இதே போல கடந்த ஏப்ரல் மாதம், 1995- ஆம் ஆண்டு ஆட்டோ சங்கருக்கு நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனை தான், தமிழ்நாட்டில் இறுதியான மரண தண்டனையாக உள்ளது.

மேல்முறையீடு போன்ற விஷயங்கள் பின்னால் தான் தெரியவரும். மேலும் இதற்கு முன் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் மூவரை இலக்கியம்பட்டியில் உயிருடன் எரித்துக் கொன்ற குற்றவாளிகளுக்கு விதிக்கபபட்ட தீர்ப்பு இறுதி கருணையை எதிர்நோக்கி இன்றுவரை காத்திருக்கும் நிலை மேல்முறையீடு விசாரணை தாமதமானால் இந்தக் கொடும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மீதான பயமும் மரியாதையும் வரவில்லை ஆகவே அந்த விசாரணை நடந்தால் அதில் விரைந்து தண்டணை கிடைத்தால் மக்கள் நீதி வென்றதாக பாராட்டலாம்.. மேல்முறையீடு இனி உயர் நீதிமன்றம் இந்தத் தண்டனையை உறுதிப்படுத்தும் என்றே சட்ட வல்லுநர்கள் கருத்தாக அமைகிறது.                                இதில் பொதுநீதியாக :-                         "தோட்டம் காக்கப் போட்ட வேலி    பயிரைத் தின்றதோ            .                       அதைக் கேள்வி கேக்க ஆளில்லாமல்... பார்த்து நிப்பதோ.                                     வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள்...       மனித ஜாதி...                                                      பிறர் வயிறெரியச் சிரிப்பவர்கள்.     மிருக ஜாதி.                                             மனிதன் என்ற போர்வையில்.                         மிருகம் வாழும் நாட்டிலே                          .நீதி என்றும் நேர்மை என்றும்.                    எழுதி வைப்பார் ஏட்டிலே!"   இதில் பொது நீதி தோடடக் காவல் வேலி போலத் தான் நாட்டுக் காவல் பணியாளர்கள்,  வேலி பயிரைத் திங்காது, காவலர்கள் மனித வாழ்வியலில் பாதுகாவலர்கள், சாமானியன் வாழ்வை அழிக்க அவர்கள் யார்? நீதிமன்றம் வழங்கிய சம்மட்டி அடி தான் இந்த முதல்படி தீர்ப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...