முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம்

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து  தேர்தல் ஆணையம் உத்தரவு

2023 ஆம் ஆண்டில் ஆவடி காவல்துறை ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, காவலர் பயிற்சிப் பள்ளி இயக்குநராக நியமனமானார்.

சந்தீப் ராய் ரத்தோரை DGP யாக்க பெரு முயற்சி நடந்த நிலையில் அதற்கு முன் DGP ஷங்கர் ஜிவால். அதற்காக பதவி நீடிப்பு கேட்டார், அவருக்கு பதவி நீடிப்பு செய்தால் சந்தீப்பும் சீமா அகர்வாலும் லிஸ்ட்டில் வருவார்கள். என்ற  நிலையில் வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக நியமனம் செய்தது தமிழ்நாடு அரசு இந்த நிலையில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யை மாற்றிய தேர்தல் ஆணையம். புதிய டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்தது,


தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக நியமனம் ஆன 

சந்தீப் ராய் ரத்தோர்  1992-பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார், இவர் தமிழ்நாட்டின் முக்கிய காவல்துறை பதவிகளை வகித்துள்ளார். ஜூன் 2023-ல் சென்னை பெருநகர காவல் துறையின் 109-வது ஆணையராகப் பொறுப்பேற்றார். முன்னதாக, இவர் தமிழ்நாடு காவல்துறை பயிற்சிப் பிரிவு டிஜிபியாக பணியாற்றியுள்ளார். 


109-வது சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் (ஜூன் 30, 2023 முதல் சங்கர் ஜிவாலுக்குப் பிறகு சென்னை ஆணையராகப் பொறுப்பேற்றார், காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபி, தமிழ்நாடு.



பேட்ச்: 1992 தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ். இவர் காவல்துறை நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர் மற்றும் முக்கிய டிஜிபி பதவிகளில் பணியாற்றியுள்ளார். தறதேர்தல் ஆணையமே தலையிட்டுத் தான் நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.2026 தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி  தாம்பரம் மாநகர் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் மாற்றம். புதிய ஆணையராக  சஞ்சய்குமார் நியமனம்.

மதுரை காவல்துறை ஆணையர் லோகநாதன் மாற்றம், புதிய ஆணையராக அபிஷேக் தீக்சித் நியமனம்.

மேற்கு மண்டல IG யாக இரம்யாபாரதி நியமனம். தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தூத்துக்குடி ஆட்சியராக விசு மகாஜனும், சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் உயர் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். தூத்துக்குடி: இளம்பகவத் மாற்றப்பட்டு, புதிய கலெக்டராக விசு மகாஜன் நியமனம்.

சேலம்: பிருந்தா தேவி மாற்றப்பட்டு, அருண் தம்புராஜ் நியமனம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாகவும், தேர்தல் பணிகளில் அரசியல் தலையீட்டைத் தவிர்க்கவும் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள் தேர்தல் முடியும் வரை எந்தவொரு தேர்தல் பொறுப்புகளிலும் நியமிக்கப்பட மாட்டார்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...