முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோட்ஷேக்கள் கட்சியாக காந்தி கடசி விலகிய பிரமுகர் விளாசல்

அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முக்கிய நிர்வாகி,


மற்றும் ஊடக விவாதங்களில் பங்கேற்பவர். 37 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் இருந்தவர், இப்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவர் தனது துணிச்சலான கருத்துக்களுக்காகவும், கொள்கை முடிவுகளுக்காகவும் அறியப்படுகிறார்  அமெரிக்கை நாராயணன் வெளியிட்ட அறிக்கையில் :


"பொதுச்சேவை என்பது நோக்கமும் செயலும் ஒன்றுபட்டு இருக்கும்போது மட்டுமே அர்த்தம் பெறுகிறது. நீண்ட கால சிந்தனைக்குப் பிறகு, மக்களுடன் நேரடியாகவும் தன்னிச்சையாகவும் செயல்படும் என் முயற்சி, கட்சியின் தற்போதைய செயல்முறையுடன் இனி பொருந்தவில்லை என்று நான் உணர்ந்துள்ளேன்.ஒரு அரசியல் கட்சியின் மூலம் பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள், அந்தக் கட்சியின் மூலம் நாட்டிற்கு நான் என்ன செய்தேன்?' என்று தங்களைத் தாங்களே கேட்க வேண்டும். அதே நேரத்தில், 'அந்தக் கட்சி நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்கிறதா?


சமூகத்திற்கு உண்மையாக பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு அது அர்த்தமுள்ள வாய்ப்புகளை அளிக்கிறதா? என்பதையும் கேட்க வேண்டும்கட்சி என்பது பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு ஆயுதம். அந்த ஆயுதம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடையவில்லை என்றால், அதை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.

ஏவுகணை காலத்தில், கையில் கத்தியுடன் களத்தில் நிற்பது முட்டாள்தனமே" எனக்கூறி காங்கிரஸ் கட்சிக்கு 'குட்பை' கூறியுள்ளார்.

அதேவேளையில் தொடர்ந்து பொதுச்சேவையில் ஈடுபட்டு மக்களுடன் சேர்ந்து செயல்படுவேன் என்று கூறியுள்ளார். காங்கிரஸில் இருந்து விலகி உள்ள அமெரிக்கை நாராயணன் 1988 ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்செல்வப்பெருந்தகை தேர்தல் நேரமாக இருப்பதால் நீக்கப்படவில்லை முடிந்த பின் நீக்கிவிடுவார்கள் என்பதால் அவரே முந்திக்கொண்டு விடுவிக்கம்படி கேடடதாக பொது வெளியில் தெரிவித்தார் ஆனால் அது உண்மை இல்லை அவர் தூக்கப்படுகிறாரா? 

செல்வம் என்ற செல்வப்பெருந்தகையின் ராஜினாமா அறிவிப்புக்கு பின்னால் இருக்கும் டெல்லி மேலிடத்தின் அதிரடி உத்தரவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட ரகசியத் தகவலுமே காரணம்  தமிழ்நாடு அரசியலில்  பதவி பறிக்கப்படும் சூழலில் அவர் எடுத்திருக்கும் இந்த அடுத்தகட்ட முடிவு, தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரத்தில் ஒரு பெரிய அரசியல் உள்ளேயே சுழன்றடிக்கும் பூகம்பத்தையே கிளப்பியுள்ளது. குறித்த பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்தது.

"தேர்தல் முடிந்ததும் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன்" என ராகுல் காந்தியிடம் தெரிவித்து விட்டதாக செல்வம் என்ற செல்வப் பெருந்தகை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ராகுல்காந்திக்கு நெருக்கமான தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் தரப்பில் பேசிய போது, "செல்வப்பெருந்தகை சொல்வது பொய். காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளைக் கேட்டு பெறுவதிலும், தொகுதிகளை வாங்கியதிலும், வேட்பாளர்களை சிபாரிசு செய்ததிலும் மிக பெரிய அளவில் கூட்டாக ஊழல் நடந்திருக்கிறது.  அதில் புழங்கிய பண விளையாட்டுகள் ராகுல் காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது.



இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராகுல் காந்தி, அதனை  கே.சி.வேணுகோபாலிடம் சொல்லி     விசாரிக்கும் படி கூறிய போது தான் தொகுதிகள் பெறப்பட்டதிலிருந்தே ஊழல் நடந்திருக்கிறது என்பதும், சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதும் உறுதி செய்யப்பட்டது.

உடனே கே.சி.வேணுகோபால். அது தொடர்பான அறிக்கையை ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையைப் பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்த ராகுல் காந்தி ," அவரிடம் ( செல்வம் என்ற செல்வப் பெருந்தகையிடம்) ராஜினாமாக் கடிதம் எழுதி வாங்குங்க. உடனே அவரை பதவியிலிருந்தும் நீக்குங்கள்" என கே.சி.வேணுகோபாலிடம் அப்போதே ராகுல் காந்தி உததரவாகச் சொல்ல

அதற்கு வேணுகோபால்,  " தேர்தல் வேண்டாம். இப்போது நீக்கினால் தேவையற்ற விமர்சனங்கள் வரும். நீக்குவதற்கு அவரது ஜாதி ஆதரவாளரான மல்லிகார்ஜன கார்கேவே கூட இதை எதிர்ப்பார். அதனால் தேர்தல் முடியட்டும்" என்றாராம். இதற்குப் பிறகே அமைதியாகியிருக்கிறார் ராகுல்காந்தி என்கிறனர் விபரம் அறிந்த காங்கிரஸ்காரர்கள்.

இதன்பின் செல்வம் என்ற செல்வப் பெருந்தகையை வரவழைத்து தனது ஒட்டுமொத்த கோபத்தையும் அவர் மீது காட்டிய கே.சி.வேணுகோபால், ராஜினாமா கடிதத்தையம் அவரிடம் எழுதி வாங்கியிருக்கிறார்.

ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு வந்த செல்வம் என்ற செல்வப் பெருந்தகை, இதைப்பற்றி மல்லிகார்ஜூன காக்கேவிடம் சொல்லி வருத்தப்படவே எனினும், அனைத்தையும் மறைத்து விட்டு, தேர்தல் முடிந்ததும் தான் பதவி விலகுவதாக கூறி நாடகம் போடுகிறார். எப்படியும் தேர்தல் ரிசல்ட் வந்ததும் அவர் நீக்கப்படுவது உறுதி " எனத் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, தொகுதி விவகாரத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் ப.மாணிக்கம் தாகூர், செ.ஜோதிமணி, கார்த்தி ப.சிதம்பரம், விஷ்ணு பிரசாத் உள்ளிட்ட பலர், தங்களிடமிருக்கும் ஆதார தகவல்களை புகாராக ராகுலுக்கு அனுப்பி வைத்துள்ளனராம்.

இது மட்டுமல்லாமல், திமுகவுடன் பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்தபோது, பெங்களுர் சென்று மல்லிகர்ஜுன கார்கேவை ரகசியமாகச் சந்தித்தார் செல்லம் என்ற செல்வப்பெருந்தகை. அப்போது, நடந்துள்ள சில பேரங்கள் தொடர்பான 200 சி உள்ளிட்ட தகவல்களும் நாடாளமன்ற உறுப்பினர்களால் தற்போது ராகுல் காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தேர்தல் முடிவு வெளி ஆனதும், வெற்றியோ தோல்வியோ செலவம் ன்ற செல்வப் பெருந்தகைக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவைப் பொறுத்து, அவர் இப்போது அவர் இருக்கும் ஜந்தாவது கட்சியான காங்கிரஸில் இருந்து வேறு முக்கியக் கட்சியில் இணைவதற்கு திட்டமிட்டுள்ளாராம் அந்த செல்லம் என்ற செல்வப்பெருந்தகை. குறிப்பாக, திமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அக்கட்சியில் சேரும் யோசனையில் இருக்கிறாராம். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ தேர்தல் உணர்த்தும்.இந்த நிலையில் "மத்திய தேர்தல் குழு என்பது காங்கிரஸ் கட்சியின் உயர்ந்த முடிவு எடுக்கும் அமைப்பாகும். பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு, விரிவான விவாதத்தில் பங்கேற்க உறுப்பினர்கள் கருத்துகளை கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ji அவர்களின் தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் Rahul Gandhi ji அவர்களின் முன்னிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கடினமாக உழைத்த பல காங்கிரஸ் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு, நமக்கு வெறும் 28 இடங்கள் மட்டுமே உள்ளதால் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் தலைமை தேர்வு செய்த வேட்பாளர்களை நாம் அன்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அறிவிக்கப்பட்ட 27 வேட்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். 

தமிழ்நாட்டை பின்வாசல் வழியாக Fort St. George கோட்டைக்குள் நுழைய முயலும் கோட்சேவின் வாரிசுகளிடம் இருந்து காக்க வேண்டிய போராட்டம் இது".  என்கிறார் மணிக்கம் தாகூர்  இதில் இரட்டை அர்த்தம் உள்ளதாகவே பர்க்கலாம், காரணம் காந்தி கட்சியில் நுழைந்த கோட்ஷேக்களைத்தான் அவர் அப்படிக் கூறியள்ளார் என பலரும் பேசும் நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...