மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி
தென்பாண்டி நாட்டின் கீழ்திசை தன்னாட்சிக் கள்ளர் நாடுகளான வெள்ளளூர், மற்றும் மேலவளவு மற்றும் முத்தரையர் என அழைக்கப்படும் வலையர் சமூக மக்கள் நிறைந்த கொடடாம்பட்டி யூனியனில் அதிகம் வசிக்கும் சட்டசபை தொகுதியாகும் இங்கு மட்டும் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் இன்று மேலூர் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். வேலூரைச் சேர்ந்த முன்னாள் காஞ்சிபுரம் நடாளுமன்ற உறப்பினரான விஸ்வநாதன் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார். பி. விஸ்வநாதன், தற்போது காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளராகவும் தெலுங்கானா மாநிலப் பொறுப்பாளராகவும் உள்ளார்.
தேர்தலில் போட்டியிட தனக்கு பொதுத் தொகுதி வேண்டுமென விஸ்வநாதன் அண்மையில் கேட்டிருந்தார் அவர் மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் விஸ்வநாதன் அளித்த பேட்டியில், “மேலூர் தொகுதி என்பது எனக்கு புதிதல்ல, கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமாணிக்கத்துடன் இணைந்து தொகுதியின் அனைத்து கிராமங்களுக்கும் பயணித்துள்ளேன். கடந்த 25 வருடங்களாக எனக்கு இந்தத் தொகுதி பரிச்சயம். எனவே மேலூர் தொகுதியில் கடுமையாகப் பணியாற்ற காத்திருக்கிறேன். பொதுத் தொகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த என்னை காங்கிரஸ் கட்சி நிறுத்தி களம் காண்கிறது” எனக் கூறியுள்ளார். இதை வரவேற்றாலம் தமிழகத்து ஜாதிக் கணக்குகள் காங்கிரஸ் ராகுலுக்கு புரியாமல் இருக்கலாம் ஆனால் கார்கேவுக்கும் சிதம்பரத்திற்கும் ஏன் புரியவில்லை என்பதை தேர்தல் புரிய வைக்கும் என்பதே பகுதி மக்களின் கருத்து தற்போது என்டிஏ கூடடணியில் அதிமுக சார்மில் பெரியபுல்லான் என்ற செல்வம் மற்றும் தவெக சார்பில் வேட்பாளராக மதுரை வீரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் இராம. கோட்டை குமாரும் போட்டியில் உள்ளனர்





கருத்துகள்