முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திமுக அ.ராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸுக்கு மன்னிப்புக் கேட்க யூ-டியூபர் மாரிதாஸ் மறுப்பு

திமுக அ.ராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸுக்கு மன்னிப்புக் கேட்க     யூ-டியூபர் மாரிதாஸ் மறுப்பு.


  2 ஜி அலைக்கற்றை வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, தன்னை சந்திக்க திமுக எம்.பிக்கள் அல்லது எம்.எல்.ஏ க்கள் அல்லது திமுக கட்சிக்காரர்கள் யாராவது வந்தார்களா? தலைவர் என்ன துரைமுருகனையாவது அனுப்பி எனக்கு ஆறுதல் சொன்னாரா? நான் கைதாகி இரண்டு மாதங்கள் கழித்துத் தான் கனிமொழி கைது செய்யப்படுகிறார். அதன்பிறகு தான் அமைச்சர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரை ஒவ்வொருவராக டெல்லிக்கு படையெடுத்து வருகிறார்கள். அதுவரை யாருமே வரவில்லை. இந்த 2 மாதம் என் மனநிலை எப்படி இருந்திருக்கும்?




அந்தச் சமயத்தில் நான் Burst ஆகியிருந்தால் என்னவாகியிருக்கும்? கலைஞர் டிவிக்கு பணம் சென்றது. என் வீட்டில் ஏதாவது ஒன்றை சிபிஐ எடுத்தார்களா? ஒருநாள் அழகிரி நேரில் வந்து சிறையில் என்னை சந்திக்கிறார். கலைஞர் டிவிக்கு வாங்கிக் கொடுத்தது எல்லாம் ஸ்டாலின் தானாம். நீயும், கனிமொழியும் ஏன் சிறையில் இருக்கிறீர்கள். ஸ்டாலின் தான் எல்லாம் செய்தார் எனக் கூறி அப்ரூவராகி விட்டு வெளியே வர வேண்டியது தானே? 


கலைஞருக்குப் பிறகு கட்சி அவரிடம் போகும். ஆனால் என்னை விட்டுப் போகாது. ஆறு மாதமோ, ஒரு வருடமோ அதன்பிறகு காட்சிகள் மாறும். குறிப்பாக தான் வெளியே வந்துவிட்டால் ஹீரோ என்கிறார். புத்தகம் ஒன்று வெளியே வரப் போகிறது. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வெளியிடப்படும். ஹிந்து என்.ராம் படித்து விட்டு மலைத்துப் போய்விட்டார். என்ன சார், இந்த வெளு வெளுத்துவிட்டீர்கள் என என்னிடமே கேட்கிறார். அதில் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் என அனைவரையும் பிச்சு எடுத்திருக்கிறேன்.

அந்தப் புத்தகம் வெளியே வந்ததும் ஒரு ஸ்டாராக மாறும். அது வெளிவரும் வரை அடக்கி வாசிப்பேன். அதன்பிறகு எனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்வேன். என்னை யாரும் எஸ்.சியாக பார்ப்பதில்லை. இடைநிலை ஜாதியினர் யாராக இருந்தாலும் எனக்கு மரியாதை அளிக்கின்றனர். போதுமான பணம் இருக்கிறது. மூளை இருக்கிறது. ஸ்டாலினுக்கு பெரிய Brain இருக்கா?!அப்புறம் என்ன வேண்டும்? கலைஞர் போய்விட்டால் ஸ்டாலின் – கனிமொழி பஞ்சாயத்து வரும்.



எங்க டெல்லிக்கு போய் ஆங்கிலத்தில் பேசிவிடுவாரா ஸ்டாலின் எனக் கேட்கிறார். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்பது தங்கையை ஸ்டாலின் ஒருபோதும் நம்ப மாட்டார். அப்படியெனில் என்னை வெளியே தள்ள முடியாது. தன்னை எம்.ஜி.ஆர் என நினைத்துக் கொண்டிருக்கிறார். தலைவர் கலைஞருக்கு பின்னர் தான் இவருக்கு setback வரும். தற்போதைய சூழலில் தலைவரே கைதி மாதிரி இருக்கிறார். ஸ்டாலின் Takeover பண்ணிட்டார். ஸ்டாலின்கிட்ட கட்சி போனாலும் என் பிடி விட்டுப் போகாது.  என்னை கட்சியை விட்டு எடுக்க முடியாது; அதுக்கு வேற லாக் வச்சிருக்கேன்". 

இது மாரிதாஸ் வெளியிட்ட  ஆ.இராசா குரல் பதிவான ஆடியோவில் இருந்து  ஆ ராசாவின்  குரல் பதிவு திமுக வட்டாரத்துக்குள் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கூறி இருப்பது எல்லாம் உண்மைதான்! என கே.எஸ். ராதாகிருஷ்ணன் கருத்து இது "அப்போது கலைஞருடன் நெருக்கமாக இருந்தேன்! அந்த நேரத்தில் அவரது உடல்நிலை சீர்குலைந்து இருந்தது! ஏதோன்றையும்  நிர்வகிக்க இயலாத நிலையில் அவர் இருந்தார்! அந்த இடைப்பட்ட நேரத்தில் கட்சி ஸ்டாலின் கையில் சென்று விட்டது! பேராசிரியர் அன்பழகன் கூட இதுகுறித்து ஏதும் பேச முடியாதபடி மௌனமாக இருந்தார்.!

கருணாநிதியின் இறுதிகாலத்தில் ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் பிரச்னை ஏற்பட்டது அதனால் தான் இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கவில்லை என்கிறார். ஸ்டாலினுக்கு பெரிய மூளை இருக்குதா? டெல்லிக்கு போனால் ஆங்கிலத்தில் கிழித்துவிடுவாரா? கனிமொழியை ஒருநாளும் நம்ப மாட்டார், என்னை எப்போதும் கட்சியில் இருந்து வெளியில் தள்ளமுடியாது  எடப்பாடி பழனிசாமி என்கிறார்.



ஸ்டாலின் அவரது அப்பாவை கைதி போல வைத்திருந்தார், சொந்த அப்பாவையே அப்படி வைத்தவர்

தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களையெல்லாம் ஸ்டாலின் தான் தேர்ந்தெடுத்துப் பட்டியலிட்டார். இறுதியும் செய்தார்! என்னைப் பற்றி கலைஞர் பலவாறாக எடுத்துச் சொல்லியும் கூட அந்தப் பட்டியலில் இணைக்காமல் அதை எல்லாம் அசட்டை செய்தார். அந்த வகையில் கலைஞர் ஸடாலினின் போக்கு குறித்து என்னிடம்  குறைபட்டுக் கொண்டதுண்டு. அவருடைய செயலாளர் சண்முகநாதன் கூட இது குறித்து என்னிடம் அங்காலாய்த்துக் கொண்டிருந்தார். இப்போது அவர்கள் இருவரும் இல்லை.! 

 இதற்கிடையில் 2ஜி அலைக்கற்றை ஊழலில்

 ஆ . ராசாவைக் கைது செய்து இரண்டு மாதம் திகார் சிறையில் அடைத்து விட்டார்கள். அவர் சொல்லி இருப்பது போலவே இரண்டு மாதங்களாக யாருமே அவரைச் சென்று பார்க்கவில்லை.  சென்று யாராவது பார்த்தாலும் கூட அவர்கள் கண்காணிப்பில் எடுக்கப்படுவார்கள் என்கிற அச்சம்   இருந்ததோடு முற்றிலும் ஆ ராசாவே அதுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்கிற நிலையிலும் திமுகவின் தலைமை அலட்சியமாக நடந்து கொண்டது. ஊழலில் மட்டும் பங்கு!  வழக்கு என்றால் அவர் தனி நபர் ஆகிவிடுவார்.!

 இருந்தாலும் நானும் அன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரும் அவர் பெயர் சொன்னால் அவருக்கும் ஆபத்தாகிவிடும் இருவரும் சேர்ந்து அவரை பட்டியாலா கோர்ட்டில் போய் பார்த்தோம்.

ஸ்டாலின் ஆங்கிலத்தில் பேச முடியாது என்பதும் உண்மை 

இதற்கு அடுத்து நடந்தது என்னவென்றால் கனிமொழி கைது செய்யப்பட்டு அதே திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட போது எல்லோரும் குய்யோ முறையோ என ஓடிச் சென்று பார்த்தார்கள். பிறகு தான் அங்கு ராஜாவும் இருக்கிறார் என்கிற முறையில் அவரையும் சந்தித்தார்கள். ஸ்டாலின் கூட மிக தாமதமாகக் கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் கழித்த பிறகு தான் போய்க் கனிமொழியை ஆ ராசாவை சந்தித்தார் என்று எனக்கு ஞாபகம் இருக்கிறது.











அந்நேரத்தில்  கட்சியை ஸ்டாலினும் அவரது மருமகனும் ஏறக்குறையக் கையிலெடுத்து விட்டார்கள்! கலைஞரின் உடல்நிலை மிகவும் சீர்குலைந்து எதுவும் பேச இயலாத நிலையில் அவர் மௌனம் ஆக்கப்பட்டு விட்டார். 

எனக்கு அது நன்றாகத் தெரியும். அந்த நேரத்தில்  பேச முடியா கலைஞர் வைகோவிடம் எதிர்காலத்தில் ஸ்டாலினை நீங்கள் பாதுகாத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்க எந்தவித ஒரு வாய்ப்பும் இல்லை. இப்போது இது மாதிரியான கதைகளை வைகோ சொல்லி வருகிறார்! கலைஞரின் கடைசி காலத்தில் இத்தகைய நிலைப்பாடுகளை எடுப்பதற்கோ சொல்வதற்கோ யாருடனும் கலந்தாலோசிக்கவோ  அவரது உடல்நிலை  ஒத்துழைக்கவில்லை. அவற்றையெல்லாம் மறைத்து வைகோ கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கலைஞரின் இறுதிக் காலத்தில் அடிக்கடிச் சென்று அவரைச்சந்தித்து வந்தவன் என்கிற முறையில் இன்றைக்கு ஆ ராசா சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை என்று என் மனதறிந்து கூறுகிறேன்.  இந்த உண்மைகளுக்கு எல்லாம் அப்பால் அரசியல் சதுரங்க ஆட்டம் நடக்கின்றது! நீயா நானா என்கிற போட்டி கட்சிக்குள்ளேயே அதிகரித்திருக்கிறது. இப்படித்தான் திமுகவில் நடந்துகொண்டிருக்கிறது! இனி என்ன நடக்க இருக்கிறதோ பார்ப்போம்.

ஆ ராசாவின் இந்தக் குரல் பதிவு  வரும் தேர்தல் நேரத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது

 அதனால் கட்சிக்குள் ஏற்படும் குழப்பங்களையும் இந்தத் தமிழ்ச் சமூகம் வேடிக்கை பார்க்கத்தான் போகிறது" என பதிவில் தெரிவித்த நிலையில் தற்போது மாரிதாஸுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளர்  நாடாளுமன்ற உறுப்பினர் அ. ராஜா ஆனால் அதற்கு மாரிதாஸ் தான் மனனிப்புக் கேட்க முடியாது எனத் தெயிவித்துள்ளர்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...