முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய சாதனை படைத்த ராஜா ரவி வர்மாவின் கலை வண்ணம்

உயர் மதிப்பில் ஏலத்தில் வாங்கிய இந்திய ஓவியம். புதிய சாதனை படைத்த இராஜா ரவி வர்மா கலை வண்ணம்

இராஜா ரவி வர்மாவின் யசோதா மற்றும் குழந்தைக் கண்ணன் பசுவுடன் வரைந்த ஆயில் பெயிண்டிங் ரூபாய் .167.2 கோடிக்கு விற்பனையாகி, அதிக மதிப்பில் வாங்கிய இந்திய ஓவியம் எனும் சாதனையை படைத்தது.    மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் நேற்று Saffronart நிறுவனத்தின் ஏலம் நடைபெற்றதில் ராஜா ரவி வர்மா வரைந்திருந்த 'யசோதா மற்றும் கிருஷ்ணா' புகைப்பட ஓவியம் ரூபாய் .167.2 கோடிக்கு விற்பனையாகி,  அதிக தொகைக்கு விற்கப்பட்ட இந்திய ஓவியம் எனும் சாதனையை படைத்தது. எம்.எப். ஹுசைனின் 'கிராம் யாத்ரா' ஓவியம் ரூபாய் .118 கோடிக்கு விற்பனை மட்டுமே முந்தைய சாதனையாக இருந்தது. அந்த ஓவியத்தை டெல்லியைச் சேர்ந்த பிரபல கலைப்பொருள் சேகரிப்பாளர் கிரண் வாங்கினார்.

தொழிலதிபரும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் நிறுவனருமான சைரஸ் பூனாவாலா இந்த ஓவியத்தை வாங்கினார்.

1980-களில் ராஜா ரவி வர்மா உச்சத்தில் இருந்த போது வரைந்த ஓவியமிது. யசோதா பசுவிடம் பால்கறக்கும்போது, கிருஷ்ணன் அவரது பின் இருந்து பாலை எடுக்க முயற்சிக்கும் காட்சி தான் இந்த அழகிய ஓவியம்.

இந்திய யதார்த்தவாதக் கலை பாணியில் அமைந்த இந்த ஓவியம், இந்தியக் கலைத்துறையின் "மோனலிசா" என்று கலை விமர்சகர்களால் போற்றப்படுகிறது.

ராஜா ரவி வர்மாவின் படைப்புகள் "தேசிய பொக்கிஷங்களாக" வகைப்படுத்தப்பட்டுள்ளதால், இவற்றை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்ல அனுமதி இல்லை. இந்த ஓவியங்களை இந்தியாவிற்குள் மட்டுமே விற்கவோ அல்லது மாற்றவோ முடியும்.

நவீன இந்திய ஓவியக் கலையின் தந்தை என அழைக்கப்படுபவர் ராஜா ரவி வர்மா. கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தான  அரச குடும்பத்தைச் சேர்ந்தவர், இந்தியக் கலை வரலாற்றில் ஒரு ஓவியப் புரட்சியை ஏற்படுத்தியவர்.

ஐரோப்பிய ஓவிய நுணுக்கங்களையும், எதார்த்தவாதத்தையும் இந்தியத் தொன்மவியல் காதைகளுடன் (இராமாயணம், மஹாபாரதம்) இணைத்து ஓவியங்களை வரைந்தவர்.


சாமானிய மக்களும் கலைப்படைப்புகளைப் பெற வேண்டும் என்பதற்காகத் தனது ஓவியங்களை அச்சுப் பிரதிகளாக வெளியிட்டு, அவற்றை கிராமப்புறங்களில்கொண்டு சேர்த்தார்.

இன்று நாம் பார்க்கும் பல ஹிந்து வழிபடும் தெய்வங்களின் உருவங்களுக்கு  (லக்ஷ்மி, சரஸ்வதி) வடிவம் கொடுத்தவர் இவராகும்.இதன் மூலம் இந்தியக் கலைப் பொருள் விற்பனைக்கு உரிய சந்தையின் வளர்ச்சியை மட்டுமில்லாமல் , பாரம்பரிய கலைப்பொருட்களின் முதலீட்டுப் பொருளாகவும், கலாச்சார அடையாளமாகவும் அதிக மதிப்பைப் பெறுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும், இந்தியக் கலைஞர்களின் படைப்புகள் உலகளவில் புதிய உயரங்களை எட்டக்கூடிய காலமிது என்பதற்கான உறுதியான சான்றாகவும் இந்த ஏலம் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.ஸ்பிரிங் லைவ் ஏலத்தில், இந்த ஒப்பற்ற தலைசிறந்த படைப்பு ஏழு நிமிட ஏலப் போட்டியைத் தொடர்ந்து, குறிப்பிடத்தக்க ரூபாய் .167.20 கோடிகளை ($17.97 மில்லியன்) எட்டியது. இதன் விளைவாக இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட தெற்காசியக் கலையின் அதிக மதிப்புள்ள படைப்புக்கான புதிய உலகளாவிய சாதனையை நிறுவியுள்ளது.

இந்த ஆரம்ப ஓவியம் வசந்த கால ஏலத்தின் முக்கிய அம்சமாக வெளிப்பட்டது, ஐரோப்பிய கல்வியியல் யதார்த்தவாதம் மற்றும் இந்திய புராணக் கதைகளின் சிறந்த தொகுப்பு மூலம் இந்திய கலையின் நியதிக்குள் கலைஞரின் நீடித்த முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...