தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை விசிகவின் தலைவர் திருமா
மறுபரிசீலனை செய்வதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானவர், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் அவருக்கு திமுக அழுத்தம் கொடுத்து வருவதாகவும், மாநில அரசியலுக்கு திருமா வருவதை திமுக விரும்பவில்லை என எதிர்க்கட்சிகள் அப்போது விமர்சித்தன. ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஒரு வேளை வெற்றி பெற்றால் திருமாவுக்கு அமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் பதவி கொடுக்க நேரிடுமாம். வி சி கட்சித் தலைவர் திருமா போட்டியிடாததால், அவருக்குப் பதிலாக விசிகவில் முன்னாள் காங்கிரஸ் தலைவரான க. இளையபெருமாள் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் விசிகட்சி போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பாளர் பட்டியல் சில நாள்களுக்கு முன் அவர் வெளியிட்டார். அந்தப் பட்டியலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமா போட்டியிடுவதாகக் அறிவிப்பு வெளியாகிய நிலையில் ஏற்கனவே 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது. இந்த நிலையில், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தான் போட்டியிடவில்லை எனத் தெரிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக பவேட்பாளராக ஜோதிமணி இளையபெருமாள் அறிவிக்கப்பட்டார்.
திமுக கூட்டணியில் வி சி கட்சிக்கு காட்டுமன்னார்கோயில், பெரியகுளம், திருப்போரூர், அரக்கோணம், திண்டிவனம், பண்ருட்டி, கள்ளக்குறிச்சி, செய்யூர் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதன்படி திண்டிவனம் (தனி) தொகுதியில் வன்னியரசு, பண்ருட்டி தொகுதியில் அப்துல் ரஹ்மான், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் அவரது அக்கா மகள் மாலதி, செய்யூர்(தனி) தொகுதியில் சிந்தனைச் செல்வன், திருப்போரூரில் பன்னீர் தாஸ், பெரியகுளம் (தனி) தொகுதியில் ஆற்றல் அரசு, அரக்கோணம் (தனி) தொகுதியில் தலித் எழில்மலை மகள் எழில் கரோலின் போட்டியிடுகின்றனர். காட்டுமன்னார்கோயில் தொகுதியில் திருமா விலகியதால், புதிய விசிக வேட்பாளராக ஜோதிமணி இளையபெருமாளுக்கு முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோதிமணி இளைய பெருமாளின் தந்தை இளையபெருமாள். அட்டவணை பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒருமுறை சட்டப்பேரவை உறுப்பினராக 20 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.இது குறித்து திருமா விளக்கம்
"நான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சொன்னதும், உடனே என்னென்னவோ வதந்திகள் கிளம்பின. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை கோருகிறார். அப்படியிருப்பவர், இந்த முறை தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் தான் அமையும் என்பதை கணித்திருக்கிறார் எனவும், எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்தி, துணை முதலமைச்சர் பதவியை வாங்க ஆசைப்படுகிறார் என்றும் வதந்திகள் கிளம்பின. எனக்கு அப்படியான எந்த ஆசையுமில்லை. இந்த தேர்தலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை நான் வலியுறுத்தவில்லை.
காரணம், இந்த டிமாண்ட் கூட்டணிக்குள் குழப்பதை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற நினைத்திருந்தேன். எனவேதான் இதை இந்த தேர்தலில் நான் இந்த டிமாண்டை முன் வைக்கவில்லை. அப்படி இருக்கும் எனக்கு, எப்படி துணை முதல்வர் பதவி குறித்த ஆசை வந்திருக்கும்? பதவி மீது ஆசை இருந்தால், நான் ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்தபோது எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?
எனவே என்னுடைய நகர்வை கொச்சைப்படுத்திய காரணத்தினால், நான் போட்டியிடவில்லை. நான் போட்டியிட இருந்த காட்டுமன்னார் கோவில் தொகுதியில், மறைந்த இளையபெருமாள் மகன் ஜோதிமணி போட்டியிடுவார்" என அறிவித்தார். இந்த நிலையில் ”நான் காங்கிரஸ் கட்சிக்காரன்.. திடீர்னு திருமா என்ன வேட்பாளர்னு அறிவிச்சதும் ரொம்ப சந்தோஷமா ஆகிடுச்சு”.. காங்கிரஸ் வேட்பாளரை திருமா அறிவிக்கலாமா?.. அப்படியானால் வி.சி.கவுக்கு 7 தொகுதிகள் தானா?.. வேட்பாளர் ஜோதிமணியின் பேட்டி அதை உறுதிப்படுத்துவதால்.. ஒரு பானையை உடைத்த கதை விரைவில் வரும்



கருத்துகள்