முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

35 தாசில்தார் அலுவலகங்களில் லஞ்ச, ஊழல் தடுப்புச் சோதனையில் ரூபாய் 82,10,000 சிக்கியது விசாரணை தீலிரம்

தமிழ்நாடு முழுவதும் 35 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், 82 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற ஊழல் பணம் சிக்கியது.

சோதனை மூலம் சிக்கிய ரூபாய் .82.10 லட்சத்தில், G-PAY மூலமாக மட்டுமே ரூபாய் .68.32 லட்சம் லஞ்சமாக வாங்கியது தெரியவந்தது தமிழ்நாடு முழுவதும் உள்ள 35 வருவாய் வட்டாட்சியர்  அலுவலகங்களில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத மொத்தம் ரூபாய் 82.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் அளித்த தொடர் லஞ்சப் புகார்களின் அடிப்படையில், நேற்று மதிய உணவு இடை வேளைக்குப் பிறகு இந்த திடீர் சோதனைகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. 

சோதனையில்  பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை: ரூபாய் 82,10,832. ரொக்கப் பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரொக்கமாக ரூபாய் 13,78,250 கைப்பற்றப்பட்டது.

டிஜிட்டல் பரிவர்த்தனை (GPay) பணமும் சந்தேகத்திற்குரிய ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மூலம் லஞ்சமாகப் பெறப்பட்ட ரூபாய் 68,32,582 கண்டறியப்பட்டது. மாநில அளவில் லஞ்சப் பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகம் கண்டறியப்பட்ட முதன்மை வட்டாட்சியர் அலுவலகங்களும் உண்டு 

கண்டறியப்பட்ட மற்றும் கைப்பற்றப்பட்ட தொகை விவரம்:- இனி இடைத் தேர்தல் நடக்க உள்ள 

கரூர் ரூபாய் 16,33,654 அதிகபட்ச டிஜிட்டல் (GPay) பரிவர்த்தனை, இனி இடைத்தேர்தல் நடக்க உள்ள திருச்சிராப்பள்ளி கிழக்கு ரூபாய் 12,40,000 சந்தேகத்திற்குரிய ஆன்லைன் பரிவர்த்தனை சேலம் தலைவாசல் ரூபாய் 8,51,498 சந்தேகத்திற்குரிய ஆன்லைன் பரிவர்த்தனை, கிருஷ்ணகிரி  ரூபாய் 2,22,200 மாநில அளவில் அதிகபட்ச ரொக்கப் பணம் (Cash) கோயம்பத்தூர் வடக்கு ரூபாய் 7,50,000 சந்தேகத்திற்குரிய ஆன்லைன் பரிவர்த்தனை

சென்னையில் உள்ள எழும்பூர், சோழிங்கநல்லூர், மாம்பலம் மற்றும் முதல்வர் தொகுதி பெரம்பூர் ஆகிய 4 வட்டாட்சியர் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றதில் அங்கிருந்து மொத்தமாக ரூபாய் 84,900 ரொக்கப் பணமும், ரூபாய் 6,88,680 மதிப்பிலான சந்தேகத்திற்குரிய ஜிபே பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டதில் சோழிங்கநல்லூர் அலுவலகத்தில் மட்டும் அதிகபட்சமாக ரூபாய் 6.36 லட்சம் டிஜிட்டல் பரிவர்த்தனை கண்டறியப்பட்டன,

சோதனை நடந்த சமயத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் இருந்த ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் யாரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் கூகுள் பே கணக்குகளுக்கு உரிய விளக்கமும் ஆவணங்களும் கோரப்பட்டன. முறையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான துறை ரீதியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஊழல் தடுப்புக் கண்கணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்