முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 7 முக்கிய மசோதாக்கள்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்  ஜூலை மாதம் 20 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வரை நடக்கிறது.


இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் முக்கிய மசோதாக்களின் பட்டியலில் புதிய மசோதாக்கள் மற்றும் ஏற்கனவே நிலுவையில் உள்ள மசோதாக்கள் என மொத்தம் 7 முக்கிய மசோதாக்கள் இடம்பெற்றுள்ளது..

மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு, விவாதத்திற்குப் பின் நிறைவேற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய மசோதாக்களின் விவரம்             முதலாவது :-வருமான வரி (திருத்த) மசோதா, 2026 (Income-tax Amendment Bill, 2026): முந்தைய அவசரச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்படும் இந்த மசோதா, இந்தியச் சந்தையை வலுப்படுத்தவும், உலகளாவிய நிலையான மூலதன முதலீடுகளை ஈர்க்கவும், சந்தை பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்கிறது.

இரண்டாவது :-உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026: இதற்கு முந்தைய அவசரச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் இந்த மசோதா, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையை (தலைமை நீதிபதி தவிர்த்து) தற்போதைய 33-லிருந்து 37 ஆக உயர்த்துவதற்காக 1956 ஆம் ஆண்டின் சட்டத்தில் திருத்தம் செய்யக் கோருகிறது.  மூன்றாவதாக :- பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா, 2026: கடந்த 2023 ல் திருத்தப்பட்ட 1969ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின் பிரிவு 13(3)- ல் மேலும் திருத்தங்களை மேற்கொண்டு, தாமதமாகப் பதிவு செய்யப்படும் பிறப்பு, இறப்புகளுக்கான விதிகளை மிகவும் கடுமையானதாக மாற்ற இந்த மசோதா முயல்கிறது.

நான்காவதாக :- தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026: இந்த மசோதா, 1971ஆம் ஆண்டின் தேசிய அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வழிவகை செய்கிறது.   ஐந்தாவதாக:- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு (திருத்த) மசோதா, 2026: மாறிவரும் தொழில் சூழலுக்கு ஏற்ப 2006ஆம் ஆண்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) சட்டத்தை மாற்றி அமைத்தல், தொழில் தொடங்குவதை எளிதாக்குதல், தாமதமாகும் நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துதல் மற்றும் மாநிலங்கள் தங்களுக்கான பிரத்யேக வசதிக் குழுக்களை (MSEFC) உருவாக்கிக் கொள்ள இதில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது  ஏற்கனவே அவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிலுவையில் உள்ள இரு முக்கிய மசோதாக்களும் இந்த கூட்டத்தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன: அதில் 


அந்நிய பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 (FCRA Amendment Bill, 2026): கடந்த 2026 மார்ச் மார்ச் மாதம் 25 ஆம் தேதி அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா, இந்தத் தொடரில் விவாதத்திற்கும் ஒப்புதலுக்கும் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அடுத்து 

விக்ஷித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் மசோதா, 2025 (The Viksit Bharat Shiksha Adhishthan Bill, 2025): கடந்த 2025 டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட்டு, இரு அவைகளின் கூட்டுக் குழுப் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட இந்த மசோதா, கூட்டுக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் இந்த கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

கருத்துகள்