முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவசர சிகிச்சையை வலுப்படுத்த ஆம்புலன்ஸ்களுக்கான பாதுகாப்பு விரிவாக்க அம்சங்களில் திருத்தம்

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்


அவசர சிகிச்சையை வலுப்படுத்த ஆம்புலன்ஸ்களுக்கான பாதுகாப்பு விரிவாக்க அம்சங்களில் திருத்தம்

நாடு முழுவதும் ஆம்புலன்ஸ்களின் பாதுகாப்பு, செயல்பாடு, மருத்துவ திறன்களை வலுப்படுத்த போக்குவரத்து தொழில்துறை தரநிலை – 175-ல் திருத்தங்களை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.


1.    பச்சிளங்குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் – வழக்கமாக உயர்நிலை மருத்துவ சிகிச்சைக்காக என்பதை மாற்றி, நோயுற்ற அல்லது வளர்ச்சி குறைவுற்ற பச்சிளங்குழந்தைகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

2.    பல படுக்கைகள் கொண்ட ஆம்புலன்ஸ் – ஒரே நேரத்தில் ஒரு நோயாளிக்கு தீவிர சிகிச்சைக்கு உதவி செய்ய பல படுக்கைகளை கொண்டுசெல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3.    மீட்புக் கருவிகள் கட்டாயமாக்கப்படுதல் – ஆம்புலன்ஸே விபத்தில் சிக்கினாலும் மீட்புக்கு உதவி செய்யும் வகையில் அனைத்து அவசர கால மற்றும் மீட்புக் கருவிகளை கொண்டிருக்கும் பி சி மற்றும் டி வகை ஆம்புலன்ஸ் வண்டிகள்

4.    இ-ஆம்புலன்ஸ்களுக்கு தனியாக மின்சாதனம் – நோயாளிகள் நலனில் சமரசம் செய்துகொள்ளாமல், மருத்துவ சாதனங்களை இயக்குவதற்கு இ-ஆம்புலன்ஸ்களில் தனியாக மின்சாதனம் பொருத்துதல்.

14.05.2026 தேதியிடப்பட்ட இந்த நகல் அறிவிக்கை தற்போது, பொதுமக்கள் கருத்துக்காக சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இறுதி அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து இந்தத் திருத்தங்கள் அமலுக்கு வரும்.

கருத்துகள்