தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிகள் 2025-ல் செய்யப்பட்டுள்ள திருத்தம் டிஜிட்டல் சூழல் அமைப்பின் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிகள் 2025-ல் தொலைத்தொடர்புத் துறை சில திருத்தங்களை 22.10.2025 அன்று மேற்கொண்டது. இந்தத் திருத்தம் வங்கித்துறை, மின் வணிகம், மின் நிர்வாகம் போன்றவற்றில் டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்குத் தேவையானதாகும். திருத்தப்பட்ட விதிகள் தற்போதுள்ள ஒழுங்குமுறை விதிகளில் உள்ள இடைவெளிகளை சரி செய்து சைபர் மீள்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தத் திருத்தங்கள் 22.10.2025 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வெளியீட்டிலிருந்த சிறு குறைபாடுகளைச் சரி செய்ய மீண்டும் 25.11.2025 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது
ஜவுளித் துறையில் ஆராய்ச்சி, புதுமை மற்றும் போட்டித்தன்மையை வலுப்படுத்த ‘டெக்ஸ்-ராம்ப்ஸ்’ திட்டத்தை அரசு அங்கீகரித்துள்ளது. ஜவுளித் துறையில் ஆராய்ச்சி, புதுமை மற்றும் போட்டித்தன்மையை வலுப்படுத்த ஜவுளி சார்ந்த ஆராய்ச்சி, மதிப்பீடு, கண்காணிப்பு, திட்டமிடல் மற்றும் தொடக்கநிலை (டெக்ஸ்-ராம்ப்ஸ்) திட்டத்தை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. 2025-26 நிதியாண்டு முதல் 2030-31 நிதியாண்டு வரை மொத்தம் ரூ 305 கோடி செலவில் இந்தத் திட்டம், வரவிருக்கும் நிதி ஆணைய சுழற்சியுடன் இணைந்து முடிவடைகிறது. மத்திய துறை திட்டமாக செயல்படுத்தப்படும் இது, ஜவுளி அமைச்சகத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும். இந்தத் திட்டத்தை அறிவித்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், இந்தியாவின் ஜவுளித் துறையை மேம்படுத்தவும், நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் போட்டித்தன்மையில் நாட்டை உலகளாவிய தலைவராக நிலைநிறுத்தவும் டெக்ஸ்-ராம்ப்ஸ் திட்டம் ஆராய்ச்சி, தரவு மற்றும் புதுமைகளை ஒன்றிணைக்கும் என்று கூறினார். இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை சூழல் அமைப்பை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட டெக்ஸ்-ராம்ப்ஸ், ஆராய்ச்...