இஸ்ரேல் இராணுவ அமைச்சர் தகவல் ஈரான் பாதுகாப்புத் தலைவர் கொல்லப்பட்டார்:
பசிஜ் படைப்பிரிவின் தலைவரும் பலி.இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) இன்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த இஸ்ரேலிய ராணுவத்திற்கு (IDF) முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு தாக்குதலுக்கும் அரசின் தனிப்பட்ட ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், உளவுத்துறை உறுதி செய்யும் எந்தவொரு இலக்கையும் ராணுவம் உடனடியாக அழிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் (Esmail Khatib) நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், இந்தத் துணிச்சலான முடிவு ஈரானியத் தலைமைக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

கருத்துகள்