முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆர் எஸ் எஸ் குறித்து யுனிசெப் பரிந்துரை நியாயமானதா என்பதே இங்கு எழு வினா

சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையமான USCIRF, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் எனும் RSSமற்றும் இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' அதாவது R&AW ஆகியவற்றிற்கு எதிராகத் தடைகளை விதிக்கப் பரிந்துரைத்துள்ள நிலையில்,


ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது. உண்மை நிலை தான் என்ன, உலகம் முழுவதும் மதம் தானே ஆட்சி செய்கிறது அதை ஏற்கும் போது இதை தடை செய்ய என்ன அவசியம் வந்தது, 

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான USCIRF வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் மதச் சுதந்திரம் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த வகுப்புவாத மோதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளே காரணம் என்று அந்த அமெரிக்க அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்தியாவில் கொண்டு வரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டங்கள் மற்றும் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றையும் அந்த அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த விவகாரத்தை முன்னிறுத்தி இந்தியாவுடனான ஆயுத விற்பனை மற்றும் வர்த்தக உறவுகளை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த ஆணையம் கோரியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, இந்தியாவுக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறி, அதன் மீது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தடைகளை விதிக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்திற்குப் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்க்கும் மற்றும் மனுஸ்மிருதியின் படி நாட்டை நடத்தத் துடிக்கும் ஓர் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், இந்த தேசத்தின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் விஷம் போன்றது. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதித்தார்.தற்போது அமெரிக்க ஆணையமும் இந்த அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என எச்சரித்துள்ளது. எனவே, ஆர்.எஸ்.எஸ்-க்குத் தடை விதிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "அமெரிக்க ஆணையத்தின் மதிப்பீடுகள் ஒருதலைப்பட்சமானவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூக அமைப்பைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் இது போன்ற அறிக்கைகள் வெளியிடப்படுகிறது" என விளக்கம் அளித்துள்ளது.RSS அமைப்பை அமெரிக்காவில் தடை செய்ய அமெரிக்க மத சுதந்திர அமைப்பு USCIRF பரிந்துரையில் 

உண்மை நிலை என்ன

முதலில் .அந்த அமெரிக்க மத சுதந்திர அமைப்பின் பொறுப்பாளர் ஆசிப் முகமது ஒரு பாகிஸ்தானியர் ஆவார். இரண்டாவதாக. ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல, இந்தியாவின் உளவு அமைப்பான ரா (RAW) மீதும் தடை விதிக்க வேண்டும் என்றும் USCIRF பரிந்துரைத்துள்ளது

மூன்றாவதாக . மேற்குறிப்பிட்ட USCIRF, அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது வன்மம் பரப்பி வருவதால் அதைக் கலைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அந்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஒன்றை நன்றாகச் சிந்தியுங்கள்.

பக்கிஸ்தானியர்களுக்கு பாரதத்தை நேசிக்கும், காக்கும் அமைப்பு மீது வெறுப்பு வரத்தானே செய்யும்? ஆகவே. உலக நாடுகளில் எல்லாம் அவர்கள் சார்ந்த மதம் விலகி விட்டதா, இவர்களுக்கு ஏன் இந்தியா மீது அக்கரை இவர்கள் உலகை ஆளும் உரிமை பெற்றவர்களா. என்பதே இங்கு எழு வினா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...