முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியுரிமை திருத்தச் சட்டம் அனைத்து தரப்பிலும் புரிந்துகொள்ளப்பட்டதா ?....ஒரு பார்வை

                 நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது அதை அமைதிபடுத்துவதற்குப் பதிலாக அரசியல் லாபத்திற்காக எரிகிற நெருப்பில் பலர் எண்ணெய் ஊற்றி குளிர்காய்கின்றனர். அவர்களின் கவனத்திற்கு... மீண்டும் சொல்கிறேன். நான் சொல்வது எல்லாம் சரி அல்ல. அதிலும் தவறுகள் இருக்கலாம். இருந்தால் தெரியப்படுத்தவும். தெரிந்துகொண்டு தெளிகிறேன். ஆனால் வாளி வாளியாக காவி சாயத்தை பூச ஓடி வரவேண்டாம். அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. இங்கே இருப்பது ஒரு கோடு. இந்தப் பக்கம் பாஜக ஆதரவு. அந்தப் பக்கம் பாஜக எதிர்ப்பு. பாஜக ஆதரவு பக்கத்திற்கு எதை செய்தாலும் ஆதரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பது போல எதிர்க்கும் பக்கத்திற்கு எதை செய்தாலும் எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த இரண்டையும் தூக்கி ஓரமாக வைத்து விட்டு கொஞ்சம் யதார்த்தத்தைப் பேசுவோம். அதுதான் நாட்டிற்கு நல்லது. 


இந்த சட்டத்திருத்தம் மிகத்தெளிவாக இப்போது 3 நாடுகளில் இருந்து வந்த அகதிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது. காரணம் இந்த 3 நாடுகளிலும் இந்தியாவில் இருந்து பிரிவினையின் போது மக்கள் சென்று குடியேறினார்கள். அப்போது அவர்களுக்கு ஒரு உறுதிமொழி அளிக்கப்பட்டது. அதாவது அவர்களுக்கு அந்த நாட்டில் வாழ வழியில்லை என்றால் அவர்களை மீண்டும் இந்தியா அரவணைத்துக் கொள்ளும் என்பது தான் அது. அந்த உறுதிமொழியின் படி சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் அந்நாட்டின் சிறுபான்மை மக்கள் மிகப்பெரிய அளவில் துன்பத்தை சந்தித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் அவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டு வருகிறது. இதனால் பயந்துபோய் இந்தியாவிற்கு ஓடிவந்த எண்ணற்ற சிறுபான்மை மக்களுக்கு தான் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 


இந்தக் கோரிக்கையை கடந்த பல ஆண்டுகளாகவே அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். அதைத் தான் தற்போதைய அரசு செயல்படுத்தி இருக்கிறது. ஆனால் சிக்கல் என்னவென்றால் அதில் முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதியில்லை. காரணம் அகதிகளாக வருபவர்கள் துன்பத்தை சந்தித்திருக்க வேண்டும். முஸ்லிம் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினர் என்பதால் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை நாட்டைவிட்டு ஓடிவர என்று கேள்வி எழுகிறது? வெறுமனே எல்லை கடந்து வந்துவிட்டால் மட்டும் அகதிகளாக கருத முடியாது. மறுபடியும் அவர்கள் அங்கே திரும்ப முடியாதபடி சூழல் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் அகதிகள். முஸ்லிம்கள் மீண்டும் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் திரும்பி செல்வதில் என்ன பிரச்சினை இருக்கிறது? மேலும் இதில் மற்றொரு பிரச்சினை என்னவென்றால் இப்படி அகதிகள் என்னும் போர்வையில் இந்தியாவில் சதிகாரர்கள் ஊடுருவ முடியும். ஏற்கனவே இந்தியாவுக்குள் பாகிஸ்தான் இப்படி பல பேரை அனுப்பி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கிறது. ஈடுபட்டும் கொண்டிருக்கிறது என்னும் போது இந்தக் கேள்வியை முக்கியமாக எழுப்ப வேண்டியுள்ளது. 


போகிற போக்கில் எல்லாருக்கும் அடைக்கலம் கொடுங்கள் என்று சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ள முடியாது. தற்போது இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மொமன் இந்தியாவில் பங்களாதேஷிகள் குடியேறியிருந்தால் அவர்களின் விவரங்களை கொடுத்தால் தங்கள் நாட்டிற்கு அவர்களை மீண்டும் அழைத்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். அதனால் இங்கே இருக்கும் பங்களாதேஷ் முஸ்லிம்கள் ஒன்றும் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்கு ஒன்றும் ஆபத்து நேர்ந்துவிடாது. யாரும் கூண்டோடு வைத்து கொளுத்திவிட மாட்டார்கள். கௌரவமாகவே நடத்தப்பட்டு அந்தந்த நாடுகளில் மீண்டும் ஒப்படைக்கப்படுவார்கள். காலங்காலகமாக எத்தனையோ பல இனக்குழுக்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்திருக்கிறது. இந்தியாவே கதி என்று நம்பி வந்த எந்த மக்களின் நம்பிக்கையும் வீணாக போனதில்லை. உதாரணம், யூதர்களும் பார்சிக்களும்.. எனவே இந்தியா தனது கண்ணியத்தை எப்போதும் போலவே காக்கும். உலகத்திற்கே விருந்தோம்பலை கற்றுக் கொடுத்த ஒரு தேசம் ஒரு நாளும் பாரபட்சமாக செயல்படாது. ஆனால் தன்னுடைய பாதுக்காப்பையும் அது விட்டுகொடுக்காது. 


 


அடுத்ததாக ரோஹிங்கியா முஸ்லிம்களும், ஈழத்தமிழர்களும் இதில் அடங்கமாட்டார்கள். அவர்களைப் பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று கேட்பது நியாயமானது தான். ஆனால் அந்த நிலைப்பாட்டை அறிந்துகொள்ளும் முன்பே அவர்களுக்கு எதிராக தான் அரசு இருக்கிறது என்று கற்பிதம் செய்துகொண்டு அதைப் பரப்புவது பச்சை அயோக்கியத்தனமானது. மேலும் இன்று வாய்கிழிய வக்கணையாக பேசும் எந்த அரசியல் கட்சியும் குறிப்பாக திமுக காங்கிரஸ் மற்றும் இதர சொம்புத் தூக்கிகளுக்கும் இதில் கேள்வி கேட்க எந்த அருகதையும் இல்லை. இன்றைக்கு வரிந்து கட்டிக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் 2004-14 காலத்தில் 10 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் இருந்த போது அதை நிறைவேற்றியிருக்க வேண்டியது தானே! யார் தடுத்தார்கள்? அப்போது அவர்களுடைய கைகளும் வாயும் என்ன செய்துகொண்டிருந்தது. அப்போதெல்லாம் வெளிப்படாத 'அக்கறை' இப்போது வெளிப்படுகிறது என்றால் அது முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி தானே ஒழிய உண்மையான அக்கறை அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 


இப்போதும் சொல்கிறேன். ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நல்லது செய்யமுடியும் என்றால் அது மோடியின் ஆட்சியால் மட்டுமே சாத்தியம். ஒருநாளும் திமுகவும் காங்கிரஸும் அதற்கு ஆதரவாக இருக்காது. கடைசி வரை அந்தப் பிரச்சினையை தீராமல் வைத்துக் கொண்டு அரசியல் செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள். வெளிநாடுகளில் செல்வாக்கை வளர்த்துக் கொண்டுள்ள மோடியால் மட்டுமே இலங்கை அரசின் மீது அழுத்தம் செலுத்தி தமிழர்களுக்கு ஒரு விடியலை கொண்டு வர முடியும். இவர் காலத்தில் அது நடைபெறாவிட்டால் இனி எப்போது நடைபெறாது என்பதை உறுதியாக நம்பலாம். சரி.. அவர் ஏதாவது செய்ய வேண்டியது தானே என்றால் அவரும் செய்கிறார். ஆனால் அது போதாது. இன்னும் தீவிரமாக இந்தப் பிரச்சினையை மத்திய பாஜக அரசு கையில் எடுக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு இதைப்பற்றி எடுத்து சொல்லி அழுத்தம் கொடுக்க தமிழ்நாட்டில் இருந்து பிரதிநிதிகள் வேண்டும். துரதிருஷ்டவசமாக தமிழ்நாட்டு பிரதிநிதிகள் யாரும் அப்படி செயல்படுவதில்லை. காரணம், ஒருவேளை அவர் அதில் தீவிரமாக ஈடுபட்டால் அந்தப் பெயர் அவருக்கு கிடைத்துவிடும் என்ற பயம் இருக்கிறது. 


எனவே ஈழத்தமிழர்கள் பற்றியும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பற்றியும் நாம் இப்போதைக்கு கவலைப்பட தேவையில்லை. அவர்களுடைய பிரச்சினைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கூடிய விரைவில் அதற்கும் ஒரு நல்ல தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையில் தான் நாமும் காத்திருக்கிறோம். மிக முக்கியமாக... மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இந்த சட்டத்திருத்ததால் இந்தியாவில் வசிக்கும் எந்த முஸ்லிம் மக்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்களை பயமுறுத்தி கலவரத்தில் ஈடுபட தூண்டிவிட்டு நாட்டின் அமைதியைக் கெடுக்க மிகப்பெரும் சதிச்செயல் நடைபெறுகிறது. 


மத்திய அரசு இந்த சதியை எப்படி சமாளிக்கப்போகிறது என்று நானும் கவலையோடு வேடிக்கைப் பார்க்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...