ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர்
முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது, திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில்
புதிய அரசியல் அறியாத தவெக வேட்பாளர் என நினைத்தவர்களால் ஏமாற்ற முடியவில்லை. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார். அதை தேசிய கட்சியின் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி உள்ளிட்ட சில சுயேச்சைகளும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட நிலையில் முடிவு அதிகாரப்பூர்வமாக இரவு அறிவிக்கப்பட்டது கடந்த 20 ஆண்டுகள் திமுக திருப்புத்தூர் பகுதி மக்கள் அறியாமல் நடந்த ஊழல் ஆட்சி அதிகாரம், ஜாதித் துவேசம் முடிவுக்கு வந்தது,
இந்தத் தொகுதியின் தபால் வாக்குகள் அனுப்பியது தொடர்பாக திமுக கே. ஆர்.பெரியகருப்பன் கொடுத்த புகாருக்கு பதில் அளிக்காதது ஏன்? என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் முதலில் கேள்வி எழுப்பியது. ஆனால் அதை உச்சநீதிமன்றம் மிகவும் தவறு எனக் கூறி தடையை நீக்கி உத்தரவிட்டது, இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் வைத்த வாதத்தில் முன்னால் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு வாக்கு எண்ணிக்கை போலவே மிகுந்த சவாலானது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் திருப்புத்தூர் (183) தொகுதியில் மட்டும் ஒரு ஓட்டில் திமுக வாக்காளர்களுக்கு பணம் லஞ்சமாகக் கொடுத்தும் தோல்வியடைந்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் தொகுதியில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே. ஆர்.பெரியகருப்பன் 83 ஆயிரத்து 364 வாக்குகளையும், த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 365 வாக்குகளையும் பெற்றிருந்தார்கள். தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி. சுமார் 30,000 வாக்குகளை எடடியிருந்தார்,
நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் டெப்பாசிட் இழந்தார், இதனால் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றம் கோடை கால விடுமுறை நீதிமன்றம் மூலம் அவசர வழக்குத் தொடர்ந்தார். திமுக வேட்பாளர்
கே.ஆர்.பெரிய கருப்பன் தனது மனுவில் , "சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் தொகுதிக்கு பதிவான ஒரு தபால் வாக்கு, வடமாவட்ட திருப்பத்தூர் (50) தொகுதிக்கு அனுப்பப்பட்டு விட்டது. அந்த வாக்கை மீட்டு, என்னுடைய தொகுதியின் கணக்கில் சேர்க்க வேண்டும். அதுவரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தவெகவின் சீனிவாச சேதுபதி தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல்.விக்டோரியா கௌரி, என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை அவசர வழக்காக விசாரணைக்கு வந்த போது, திமுக முன்னாள் அமைச்சர் கே. ஆர்.பெரிய கருப்பன் தரப்பில் ஆஜரான
என் ஆர்.இளங்கோ உள்ளிட்ட தமிழக வழக்கறிஞருடன் மூத்த வக்கீல் முகுல் ரோத்ஹி, "சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்185 ன் தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் 50 எனும் தொகுதிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அங்கு அந்த வாக்கை, அந்தத் தொகுதி தேர்தல் அதிகாரி செல்லாது என நிராகரித்திருக்கிறார். அந்த வாக்கை சிவகங்கை மாவட்டப் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பியிருக்க வேண்டும். செல்லத்தக்க அந்த வாக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தால் இரு வேட்பாளர்களும் சமமான வாக்குகளைப் பெற்றிருப்பார்கள். குலுக்கல் மூலம் வெற்றி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்" என முகுல் ரோத்ஹி சர்கார் படப் பாணியில் வாதிட்டார்
உடனே உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல்.விக்டோரியா கௌரி, என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, "இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் ஏதேனும் சட்ட விதிகள் வகுத்துள்ளதா?" எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர் பேசிய பின் உடன் வாதி தரப்பு மூத்த வழக்கறிஞர்,
"இதுசம்பந்தமாக எந்த நடைமுறையும் இல்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்கள் அளித்தும் எந்தப் பதிலும் இல்லை. தவறான முகவரிக்கு செல்லும் கடிதம் கண்டு பிடிக்கும் போது, சரியான முகவரிக்குத்தானே அனுப்பி வைக்க வேண்டும். அதுபோல இந்த வாக்கை சரியான தொகுதிக்கு அனுப்ப உத்தரவிடவேண்டும்" என்று கூறினார்
தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "இந்த விவகாரம் தொடர்பாக கே. ஆர்.பெரியகருப்பன் அரசியல் அமைப்புச் சட்டப்படி விசாரணை நீதிமன்றம் மூலம் தானே தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்ய முடியும். சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை கோரி இந்த வழக்கை தாக்கல் செய்ய சட்டப்படி முடியாது. இதில் எந்த இடைக்காலத் தடை உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு விட்டால், அவரை கடமையாற்ற அனுமதிக்க வேண்டும். சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்க முடியாது. தடை விதித்தால், மக்கள் உரிமை பாதிக்கப்படும்" என்று கூறினார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் கே.தருண், "இந்த விவகாரத்தில் தேர்தல் வழக்குத் தான் தாக்கல் செய்ய முடியும். தபால் வாக்குகள் இந்திய தபால் துறை மூலம் அனுப்பப்படுவதில்லை. அதுவே தவறு தபால் வாக்குகளைப் பெற தேர்தல் ஆணையம், துணைத் தாசில்தார் அந்தஸ்து உள்ள அலுவலரை மட்டுமே நியமிக்கும். அந்த அலுவலர் தபால் வாக்குகளைப் பெற்று, சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு நேரில் அனுப்பி வைப்பார். அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இதில் அமர்த்தப்படுவதால் எந்தவிதமான தவறும் நடக்க வாய்ப்புகள் இல்லை. இது மனுதாரர் கூறும் பொய் தவறான தகவலாகும், தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாற்றி அனுப்பி விட்டால், என்ன செய்ய வேண்டும்? என சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் வழக்கு தாக்கல் செய்யும் வரை தேர்தல் தொடர்பான ஆவணங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும்" என்று கூறினார்.
அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல்.விக்டோரியா கௌரி, என்.செந்தில்குமார் ஆகியோர், "தபால் வாக்குகள் வேறு தொகுதிக்கு அனுப்பியது குறித்து திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரியகருப்பனின் புகாருக்கு பதிலளிக்காதது ஏன்? ஒரு வாக்காக இருந்தாலும் பதிலளிக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. இதற்கான காரணங்களை விரிவாக விளக்கி மறுநாள் திங்கட்கிழமை தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை மீண்டும் விசாரிப்போம்" என்று கூறினார்கள்.அடுத்த நாள் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது. கே. ஆர்.பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான
மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியுள்ளதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு. வாக்கு மாறி வந்தது குறித்து தேர்தல் அதிகாரியே தகவல் தெரிவித்திருக்கிறார். எனக் கூறிய நிலையில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் எம்.எல்.ஏ.வாக சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க கோரி திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை தவெகவின் வேட்பாளருக்கு எதிராகத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிட்டு 19 ஆம் தேதிக்க்கு தள்ளிவைத்தது, அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் தவெக வேட்பாளர் சார்பில் அவசர வழக்காக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தடையை நீக்கியது, விசாரணைக்குத் தடை விதித்தது இனி விசாரணை நீதிமன்றத்தில் தான் தீர்வு காண வேண்டும் இந்த நிலையில் திமுகவின் தோல்விக்கு வழி வகுத்தது மு.க. ஸ்டாலின் குடும்ப அரசியலும் சட்ட ஒழுங்குச் சீர்கேடு, ஊழல் எனப் பல காரணங்கள் உண்டு. நல்ல ஆட்சி நடத்துவதற்கான எந்த சாணக்கியத் திறமையும் இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலினின் தகுதியும் தான்! உடன் சேகர்பாபு போல துதிபாடிகள் செய்த ஊழல்
அதோடு திருநெல்வேலியில் ஒரு வேதமூர்த்தி எனும் ஆசிரியரின் மகனாகப் பிறந்து மு.க.ஸ்டாலினின் மருமகனாக வந்த சபரீசனின் என்பலர் எல்லாம் எனக்குத் தெரியும் என்கிற கர்வம், மெத்தனப்போக்கு மற்றும் எல்லாத் துறைகளிலும் தலை நீட்டி அவர் செய்த அதிகாரத் துஷ்பிரயோகம் ஒரு மோசமான பின்னடைவைத் திமுகவிற்குத் தந்தது!
மற்றபடி முதல்வரின் துணைவியார் துர்கா ஒவ்வொரு கோயிலுக்குச் செல்லும் பொழுதும் பொதுமக்கள் யாருக்கும் அனுமதியளிக்காமல் கதவை மூடுகிற கொடுமைகள், பல ஆலய சுவாமி அணியும் ஆபரணங்களை உறுக்கியது அவர்கள் வாங்கிய சாபம் மற்றும் செய்த பல பாவம் பல அமைச்சர்களின் மக்கள் மீதான அலட்சியமான பேச்சு என்று பலவகையிலும் ஜனநாயகத்தின் மாண்புகளைக் குலைத்த மு. க.ஸ்டாலினால் தான் சி ஜோசப் விஜய் இந்த வெற்றியைப் பெற முடிந்தது! அதேபோல் உதயநிதியிடம் நடிகை நிவேதா பெத்துராஜ் கோரிக்கை வைக்க அதை ஏற்று பல நூறு கோடிகள் செலவு செய்து நகரில் கார் பந்தயம் நடத்தியது நினைத்து மக்கள் மறக்காமல் முதல்வரான அவரைத் தோற்கடித்தனர்.
ஜாதகத்தில் ஏதோ பிரம்மஹத்தி தோஷம் என்பார்கள். அதுபோல தமிழ்நாட்டைப் பிடித்த பீடை விலகி விட்டது. என்றைக்கு அதிமுகவில் இருந்து விலகி வந்த பலருக்குத் திமுகவில் மு. க.ஸ்டாலின் முதலிடம் கொடுத்தாரோ அன்றைக்கே சரிவும் அதிருப்தியும் உண்டானது, தமிழக மக்கள் கொடுத்த தண்டனை தான் இந்தத் தோல்வி!
. யார் யாரோ வெற்றி பெற்றுள்ளார்கள்! ஆனால் அந்தக் கட்சித் தலைவர் மு. க.ஸ்டாலின் வெற்றி பெற முடியவில்லை"!. இனித்தான் மு. க.ஸ்டாலின் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள், பார்க்க வேண்டிய காட்சிகள், போக வேண்டிய தூரங்கள், அதிகமாகிறது! .
கட்சி ன்ற அவர்கள் கழகத்திற்கும் அதற்காக உழைத்தவர்களுக்கும் அவரிடம் மதிப்பு இல்லை!!
எல்லாம் என் குடும்பத்திற்கு நல்ல சேவை செய்யால்தான் கிடைக்கும் என்று சொன்னால் அந்த சுயநலப் போக்கும் அதற்கான மரியாதையும் எத்தனை நாள் நீடிக்க முடியும்? இது ஜனநாயக நாடா இல்லை சர்வாதிகாரம் கொண்ட நாடா?
எப்படி எம்ஜிஆர் திமுகவிற்குப் பாடம் கற்பித்தாரோ, அதே போல முதல்வர் சி. ஜோசப் விஜயும் பாடம் கற்பிப்பார்! எந்தவித அரசியல் பின்புலங்களும் இல்லாமல் கட்சி ஆரம்பித்த 3 வருடங்களில் சினிமாவிலிருந்து வந்து பெரும்பாலான வாக்குகளை பெற்று 107 க்கும் மேலான இடங்களைத் தவெக பிடித்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம் திமுகவில் முதலமைச்சராக இருந்த மு. க.ஸ்டாலினுடைய தவறுகள் தான்.
எதைச் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்யாமல் விட்டு விட்டு தேவையில்லாத பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது! தொடர்ந்த காவல் நிலைய மரணங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பின்மை! எங்கு சென்றாலும் ஊழல்,லஞ்சம்,நிர்வாக திறன் இன்மை!
அதிகாரிகளை மட்டும் நம்பியே ஆட்சியை ஒப்படைத்தது போன்றவற்றால் நாட்டில் நடப்பது என்ன என்று அவர் அறியாமலே போய்விட்டார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் காங்கிரஸ் திமுக முதுகில் குத்தி விட்டது என்ற கருத்தைச் சொல்லி உள்ளார் . இளி காலமதான் பதில் சொல்லும்.
பக்கத்தில் கருத்துக் கந்தசாமிகளை வைத்துக்கொண்டு மற்றும் கோபால், ராம் போன்ற கூலி ஊடகங்களின் மூலமாக வாக்குறுதிகள் பிரச்சாரங்களைக் கட்டி நிமித்தினாலும் படகு உள்ளே ஓட்டை விழுந்துள்ளதை அவர் கவனிக்கத் தவறி விட்டார்!
மு. க.ஸ்டாலினுக்கு எனத்தனிப்பட்ட செல்வாக்கு என்றுமே இருந்ததில்லை! அது கலைஞர் மு.கருணாநிதி பிள்ளை என்ற பதட்டம் கலந்த பயம் கூடிய மரியாதை ஆனால் விஜய்க்கு அன்பு கலந்து வந்த மரியாதை ஆனால் ஸ்டாலினுக்கு இப்பொழுதும் இல்லை!! அவர் ட்விட்டர் பேஸ்புக் pen இன்னும் பல்வேறு வகையான ஊடக விளையாட்டுகளை வைத்து ஆட்சியை நகர்த்திக் கொண்டு போனார். மேற் சொன்னவை தான் கடந்த ஐந்து வருடங்களாக அவர் ஆட்சியைக் கடத்தி வந்ததற்கான காரணிகள். திமுகவின் தோல்விக்கான முழு பொறுப்பையும் அவர்தான் ஏற்க வேண்டும்!! ஊழல் வாதிகளுக்கு முதலிடம் கொடுத்தாரோ அன்றைக்கே சரிவும் அதிருப்தியும் உண்டானது! திமுகவில் துரைமுருகனுக்கோ
டி ஆர் பாலுக்கோ அல்லது இன்னும் சிலரைப் போன்றவர்களுக்கோ கொடுக்க வேண்டிய தகுதிகளை மறுத்து ஒதுக்கி வைத்தார்கள். இல்லையா? அதற்கு இந்தத் தமிழ்நாடு மக்கள் கொடுத்த தண்டனை தான் இந்தத் தோல்வி!
. யார் யாரோ வெற்றி பெற்றுள்ளார்கள்! ஆனால் அந்தக் கட்சித் தலைவர் மு. க ஸ்டாலின் மற்றம் திருப்புத்தூர் முன்னால் அமைச்சர் வெற்றி பெற முடியவில்லை"!. மேற் சொன்னவை தான் கடந்த ஐந்து வருடங்களாக அவர் ஆட்சியை கடத்தி வந்ததற்கான காரணிகள் தானே திமுகவின் தோல்விக்கு என்பதே கள யதார்த்த நிலை











































.webp)






கருத்துகள்