முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவல்துறை ஆய்வாளர் என்ன ஆனார்.காணாமல் போனது உண்மை தானா

                            தூத்துக்குடி மாவட்டத்தில் டிஎஸ்பி.,யுடன் சண்டையிட்ட இன்ஸ்பெக்டர் ஒருவர் குறிப்பு எழுதி வைத்து விட்டு, மாயமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வருபவர் சுரேஷ். இவர் செய்துங்க நல்லூர் காவல் நிலையத்துக்கு ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் பணியில் இல்லை என்றும், அவர் அங்கு சரிவர காவல் பணிகளை மேற்கொள்வது இல்லை என்றும் குற்றச்சாட்டி காவல் நிலைய பொதுக் குறிப்பேட்டில் எழுதி வைத்து விட்டுச் சென்றார்.  அதற்கு பதிலடியாக, காலை 6:50க்கு பணிக்கு வந்த தன்னை 7:15 மணிக்கு டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு குறிப்பிட்ட வழக்கின் குற்றவாளிகளை பிடிக்க அறிவுறுத்தி வெளியே அனுப்பி வைத்ததாக, ரெகுராஜன் ஒரு குறிப்பை எழுதி வைத்து விட்டு போலீஸ் ஸ்டேசனில் இருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும், காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்னை திட்டமிட்டு பழிவாங்குவதாகவும், புறக்காவல் நிலையம் கட்டுவதற்கு ஸ்பான்சர்களை பிடிக்க சொல்லி தொல்லை செய்வதாகவும், டிஎஸ்பி.,யின் டார்ச்சரால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் சிகிச்சைக்கு செல்வதாகவும் டைரியில் எழுதி கையெழுத்து போட்டுவிட்டு ரெகுராஜன் சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்தனர். ஸ்டேசனில் இருந்து சென்ற ரெகுராஜன், மாயமாகியுள்ளதால், குடும்பத்தினர்கள் தேடி வருகின்றனர். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டிய இன்ஸ்பெக்டரே காணாமல் போன சம்பவம் பரபரப்பானது.


கருத்துகள்