இனித் தேர்வு வினாத்தாள் வெளியாகி மோசடி நடந்தால் கடுமையான தண்டனை: 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை , ரூபாய் 10 கோடி அபராதம் பொதுத்தேர்வுகளில் வினாத்தாள் வெளியாகி மோசடி , ஆள்மாறாட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தேர்வு முறைகேடுகளைத் தடுக்கக் கொண்டு வரப்பட்ட "பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்தச் சட்டம், 2026" நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தற்போது சட்டமாகியுள்ளது. வினாத்தாள் மோசடியாக வெளியாகுதல் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு: 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூபாய் 50 லட்சம் வரை அபராதமும் விதிக்க . ஒழுங்கமைக்கப்பட்ட வினாத்தாள் வெளியிடும் கும்பல்கள் மற்றும் பெரிய அளவிலான தேர்வு மோசடிகளுக்கு: குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ரூபாய் 10 கோடி அபராதம். தேர்வு நடத்தும் சேவை நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் ரூபாய் 5 கோடி வரை அபராதம் மற்றும் 8 ஆண்டுகள் வரை தேர்வு பணிகளில் இருந்து தடை. விசாரணையை விரைவுபடுத்த சிறப்பு விசாரணைக் குழுக்க...
RNI:TNTAM/2013/50347