முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழர்கள் உழைக்கத் தயாரில்லாததே அயல் மாநிலத்தவர்களின் தாக்கம் அதிகமாகும் நிலை

பப்ளிக் ஜஸ்டிஸ் செய்திஇதழ் சார்பில் ஒரு ஆய்வுத் தகவல் : தென்னிந்தியாவில் உழைக்கும் மக்கள் எங்கே என்ற நிலை? இப்போது வட இநதியர்கள் கொரானா பாதிப்பால் 75 சதவீதம் சொந்தமாநிலத்திற்குச் சென்றுவிட்ட நிலையில், வட இந்தியர்கள் பற்றிய விவாதம் நமக்குள் நம் மக்களிடம் ஓடிக்கொண்டிருக்கிறது. பான்பராக் வாயர்கள், படிக்காத அறிவுகெட்டவர்கள்.. அங்கே ஓட்டு போட்டுவிட்டு இங்கே பானிபூரி விற்க வந்துவிடுகிறார்கள், மதவெறியர்கள் என்றெல்லாம் பல பதிவுகளை நாம் காண முடிகிறது. இன்று அவர்கள் செய்த,அல்லது பங்கேற்ற தொழில்கள் மற்றும் வேலைகள், ஸ்தம்பித்து நிற்கின்றன அல்லது போதிய வேலையாட்களின்றி ஆட்கள் பற்றாக்குறையுடன் நடக்கிறது. இது ஒருபக்கமிருக்கட்டும்.முதலில் நம்மைப் பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்.கடந்த பத்து முதல் இருபது ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறதே ஏன்? இதை நாம் ஒவ்வொருவரும் சில நேரத்தில் அனுபவித்திருப்போம்.ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம். இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்கவில்லை எனத் திண்டாட்டம் எந்தப் படிப்புப் படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல்.எந்தத் தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம், பல தொழில் நிறுவனங்கள் சிறிய, பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகிறதே.. எங்கு பார்த்தாலும் பேச்சில் "எந்த பிசினசும் சரியில்லைங்க" என்ற குரல்.. இதற்கு நடுவில் கொரனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் வேலையிழந்தோர் பல இலட்சம்,வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் பல இலட்சம் இதற்குப் பிண்ணனிக் காரணங்கள் இருக்க முடியும் என்பதை உணர்வோம் முதலில் மது எனும் போதை, கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மறைவாக இருந்த பலரது குடிப்பழக்கம் இப்போது தேனீர்,காஃபி, போல ஒன்றாகி விட்டது. தினமும் மாலையில் மதுப் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது என்ற நிலையில் மிக அதிக எண்ணிக்கையில் ஆண்களும் அவர்களுக்கு போட்டியிட்டு பெண்களும் மது பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். அது விற்பனை மூலம் அறியலாம்.இருபது வருடம் முன்பாக குடிப்பவன் ஒதுங்கிப் போனநிலை இப்போது குடிக்காதவன் ஒதுங்கிப்போகும் நிலை. உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில் இன்று குடிகாரர்கள் நிறைந்து , உற்பத்தி திறன் (productivity) மிகவும் குறைந்துவிட்டது. குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாகவோ, குறிப்பிட்ட பணி நேரமோ செய்ய முடிவதில்லை.ஊதியமும் அதிகம் ஏதிர்பார்த்து நிற்கும் நிலை குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் , கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட அவர்களால் சரிவரச் செய்ய முடிவதில்லை. அதிகம் போனால் 4 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.. அதற்கு ₹ 1000 கூலியாம். வீட்டுக்கு ₹500, தனக்கு இருவேளையும் மது , சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு ₹500 என்று.ஒரு கணக்கில் நடக்கும் நிலை அடுத்ததாக கடந்த 2009-11 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நிலவிய அபரிமிதமான மின்வெட்டினால் பல சிறு,குறு தொழில்கள் முற்றிலும் நசிந்து அவர்களில் பலர் வெளி மாநிலங்களுக்குப் பிழைப்பு தேடிப் புலம் பெயர்ந்தனர். சிலர் வேறு வேலைகளுக்கும் சொற்ப சம்பளத்திற்கும் சென்றனர். சிலர் கவலையில் குடி நோயாளிகளாகிவிட்டனர். மின்சாரம் சீரடைந்த பின்னரும் தொழில் தொடங்கப் பயந்து சோம்பேறிகளாக பணிக்குச் செல்வதே பாதுகாப்பானது என்று இருப்பவர்களும் உண்டு. அடுத்ததாக நூறுநாள் வேலை இந்த திட்டம் விவசாயம் உள்ளிட்ட எவ்வித வாழ்வாதாரமுமே இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை. ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை.. இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால் காலை 10 மணிக்கு போய்விட்டு 2 மணிக்கு வந்துவிடலாம், வீட்டுக்கு தேவையான விறகுகளை வெட்டிக்கொள்ளலாம்.வேறு எந்த வேலையும் இல்லை.. ₹150 அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்ற நிலையால் சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்களில் அடிநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது. இரண்டு மணிநேரம் ஊர் கதை மரத்து நிழல் காற்று நல்ல தூக்கம் சிறிது பணி என அதுவும் கடந்து விட விவசாயக் கூலிகள் இல்லாத நிலை எப்போதோ வந்து விட்டது. அடுத்தாக இலவசங்கள். அரசு தரும் இலவசப் பொருட்களும், ஊரக வேலைவாய்ப்பு திட்டமும் மக்களை உழைக்க விரும்பாத, சும்மாவே காசு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேறிகளாக்கிவிட்டனர். அடுத்தது நமது கல்விமுறை மற்றும் கல்வியின் தரம்.அது பட்டதாரிகளை (scholars) உருவாக்குகிறதே தவிர திறன்மிக்கவர்களை (skilled) உருவாக்குவதில்லை. அடுத்ததாக தொலைக்காட்சித் தொடர்கள் 1985 க்கு முன் எப்போதோ நாடகமும்,திரைப்படமும் பார்த்த மக்கள் வீடுதேடி வரும் வில்லங்கம் சென்சாருக்குப் போகாத தொலைக்காட்சித் தொடர்கள். இதனால் குமுதம் விகடன் போன்ற. பத்திரிகைகள் படித்து எழுத்தறிவுடன் இருந்த ஒரு தலைமுறை இனி பேச மட்டுமே அறிந்து தமிழ் வார்த்தைகள் எழுதுவதில் பிழைவரும் காரணம் படிப்பது அதுவும் தமிழ் படிப்பது அவலம் என உணரும் தமிழன் குடும்பம். இக் காரணங்களால் தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது... சமீபத்தில் தொழில் தொடங்கி நஷ்டமடைந்து தொழிலை விட்டவர்களிடம் விசாரித்துப் பாருங்கள். பத்தில் எட்டு பேர் பழுதின்றி ஊழியர் மற்றும் சம்பள பிரச்சினைகளாலேயே தொழில் நஷ்டமடைந்ததாகச் சொல்வார்கள். தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாய முள்ளோர், வேறு வழியின்றி தங்களுக்குத் தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட நாட்டினரை இங்கே வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர். ஹோட்டல் முதல் கட்டுமானப் பணி வரை இதுதான் நடக்கிறது. தமிழ் சமையல்காரர், கொத்தனார், ஓட்டுனர்கள் ஒருநாளைக்கு பெறும் ₹850-1000 சம்பளத்திற்கு , (பெரும்பாலும் அடிக்கடி லீவு போடும் பழக்கமுடையவர்கள்) செய்யும் வேலையை விட வடமாநிலத்தவர்கள் இரண்டு மணிநேரம் அதிகமாக ₹500-600 சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள்.. தங்குமிடத்துடன் உணவும் கொடுத்துவிட்டால் போதுமானது.. வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும். இதுதான் பெயிண்ட் அடிப்பவர்,தச்சு வேலை , பிளம்பர் எனும் பைப் வேலை மின்சார வேலை எலக்ட்ரீசியன்கள் என பலவற்றை நம் ஆட்கள் கேலி செய்வதை போல அவர்கள் பானிபூரியும் திருவிழாக்கடை பலூன்களும் மட்டுமே விற்க இங்கே வரவில்லை. சொல்லப்போனால் இங்கு உள்ள 100% பானிபூரி வண்டிகளில் 30% கூட வட இந்தியர்களுடையதல்ல. 70%க்கும் மேற்பட்ட வண்டிகளில் தமிழர்களே பானிபூரி விற்கிறார்கள். கடைசியாக.. நம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்கள் மனநிலையில் ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேலையே செய்யக்கூடாது, சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும், சும்மாவே பணம் கிடைக்க வேண்டும், சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும், தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள்.மனதில் இவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அரசுகளே சாராயத்தை விற்பதில் கவனமாக இருக்க லாபத்தை தேடுவதுதான் உச்சபச்ச கொடுமை. கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் எல்லோரும் இது குறித்து சிந்தித்து இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள நோயை மாற்ற வழி தேடினால் மட்டுமே நமது தென்னாட்டில் மக்கள் பிழைக்கும் நிலை வரும். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதற்குக் காரணமென்ன? தமிழர்கள் உடல் உழைப்பை விரும்புவதில்லை.அதோடு சாராயம் மது மற்றும் சோம்பேறித்தனம் லேசான வேலையை செய்ய, உழைக்காமல் தினமும் இரு நூறு ரூபாய் கிடைத்தால் போதும் என்ற மன நிலையில் பலர் உண்டு அரசியலே தெரியாமல் அரசியல் கட்சியில் இருப்பவர்கள் , எதுவுமே படிக்காமல் சட்டம் தெரியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வது. அல்லது போராட்டத்தில் மூன்று மணி நேரத்தில் சம்பாத்தியம், தற்போதய அரசியல் வா (வியா)திகளைப் போல் கொள்ளையடித்து ஏமாற்றிப் பொய் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு நண்பர் கீழ் கண்டவாறு கூறினார் . நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல் ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன். அதில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்து வேலை வாங்கி உள்ளேன், வண்டி வாகனங்கள் இதையெல்லாம் வைத்து வேலை வாங்கி அதில் வேலை செய்த தமிழர்கள், இப்பொழுது வேலை செய்வது இல்லை, முழுவதும் வட நாட்டு மக்களுக்கு தான் வேலை தமிழர்கள் இப்பொழுது கிடைப்பது இல்லை அதனால் வெளிமாநிலத்தவர்கள் இங்கே உடல் உழைப்பு தந்து தனது பொருளாதாரத்தை வலிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். விரைவில் தமிழனும் பிச்சை எடுப்பான் அன்று புரியும். ஹார்டுவேர்ஸ், பெயின்டர்கள் கார்பெண்டர்,பெரிய ஆள் ஹெல்பர்கள் ,பிட்டர்கள், டெய்லர்கள் , மேஸ்திரிகள். முக்கிய தொழிலாக ஹோட்டல்கள், ஹோட்டல்களில் வேலை செய்பவர் , மாஸ்டர்களே இப்பொழுது வட நாட்டவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லா தரப்பட்ட உடல் உழைப்பு தரும் ஆட்கள். தாம்பரத்தில் முக்கிய ஹோட்டலில் தோசை மாஸ்டர் வட நாட்டவர் அவரிடம் பேசினோம் அவர் சொன்ன விவரங்கள் பலர் பாத்தால் தலை சுற்றுமே, மாதம் மாதம் 10,000.(பத்தாயிரம்) அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்துத் தொழிலாளி அது தமிழர்களால் முடியாத நிலை. ஒருவர் மாதம் 10,000.அனுப்புகிறார் ,இப்படி 10.பேர் அனுப்பினால் ஒரு இலட்சம், ஒரு லட்சம் பேர் அனுப்பினால் அதுவே ஆயிரம்கோடி மனம் அதிர்ச்சியடைந்தது முதலில் வடமாநிலங்களிலிருந்து தமிழகத்தில் எவ்வளவு நபர்கள் இருக்கிறார்கள் எனக் கணக்கு பலர் கூறக் கேட்டேன். தொழில் நகரங்களான பெரும் நகரங்களில் மாவட்ட அளவில் திருப்பூரில் மூனு லட்சம் பேரும் கோவையில் ஏழுலட்சம் பேரும் சென்னையில் இருபது லட்சம் பேரும் இருப்பார்கள் என சொன்னார்கள் அப்போ சேலம் ஈரோடு போன்ற இன்ன பிற மாவடங்களில் எவ்வளவோ தெரியாது. சென்னை ,கோவை, திருப்பூர் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வோம் என முடிவெடுத்தால் மொத்தம் முப்பது இலட்சம் பேர் ஒருவர் மாதம் மாதம் பத்தாயிரம் என்றால் 30 லட்சம் பேர்க்கு மூவாயிரம் கோடி.. மாத மாதம் 3,000 கோடி என்றால் வருடத்திற்கு 36,000 கோடி இது அனைத்தும் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்தால், அந்த சிறு பணம் புழக்கம் கொண்டு தமிழக மக்களையும் சிறு குறு பெரும் வியாபாரிகளை வளமாக வாழ வைக்க வேண்டிய இந்தப்பணம் எங்கோ வடமாநிலங்களில் புழக்கத்தில் சென்று கொண்டிருக்கிறது .அங்கே இருக்கும் மக்களையும் சிறு குறு பெரும் வியாபாரிகளையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது . இது வெறும் தமிழகத்தின் மூனு மாவட்டக் கணக்கு ,மீதம் இருக்கும் 36 மாவட்டத்திலும். வடமாநில தொழிலாளிகளைக் கணக்கெடுத்துக் கூட்டிப் பார்த்தால் தலை சுற்றுமே. இது வட மாநிலத் தொழிலாளர்கள் கணக்கு இன்னும் வடமாநில சுய தொழில் செய்யும் வியாபாரிகள், முதலாளிகள் போன்றோர்களை கணக்கெடுத்து அவர்கள் ஈட்டும் வருமானங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் அய்யய்யோ நினைத்து பார்க்க முடியவில்லை. வேப்பேரியும் புரசைவாக்கமும் மற்றொரு சௌக்கார்பேட்டையாகியது எப்போதோ. அது இப்போது புரியாது இன்னும் பத்தாண்டுகள் கழித்து பலர் புலம்பல் கேட்கும். அதுவரை நாமும் காத்திருப்பது தான் நல்லது ... சில வாத்துக் கூட்டங்களுக்கு எப்போதும் புரியாது. இன்னொரு பிரச்சினை பணப்புழக்கம் இல்லாமல் இருக்கும் காரணம் கைத்தொழில், எல்லாவகையான சிறு பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிறது . அதனால் லட்சக்கணக்கான பொருட்கள் உளி , சுத்தியல் ஆரம்பித்து மருத்துவர் போடும் ஊசி வரை. ஏற்கெனவே இங்கு இருந்த இந்த தொழில்கள் காணாமல் போனதே.கொடுமை ... மீன்டோ அல்லது மீண்டும் எப்போது வரும் என உங்களுக்கு ஒரு கனவு வந்தால் அதில் எங்களுக்கும் பங்குண்டு .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்