முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை விமானநிலையத்தில் 10.3 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல் கடத்திய நபர் கைது

சென்னை விமான நிலையத்தில், ரூ.10.3 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர் துபாயில் இருந்து இன்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது(44) என்ற பயணியை சந்தேகத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், இடைமறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது பசை வடிவிலான தங்க பொட்டலங்களை தம்முடைய ஆசனவாயில் வைத்து கடத்தி வந்ததை  அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட தனிப்பட்ட சோதனையில் அந்த நபரின் ஆசனவாயில் இருந்து 231 கிராம்கள் எடை கொண்ட பசை வடிவிலான தங்கம் மூன்று பொட்டலங்கள் எடுக்கப்பட்டன. பசை வடிவிலான தங்கத்தில் இருந்து 201 கிராம் கொண்ட 24 கேரட் சுத்தமான தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின்  மதிப்பு ரூ.10.33  லட்சமாகும். சுங்கத்துறை சட்டத்தின்படி இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.   இந்த கடத்தல் குறித்து,  மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது  என  சென்னை சர்வதேச விமானநிலையத்தின் சுங்கத்துறை ஆணையர்  தெரிவித்துள்ளார்.


கருத்துகள்