ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மேதகு ஃபியூமியோ கிஷிடாவுக்கு பிரதமர் வாழ்த்து
ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மேதகு ஃபியூமியோ கிஷிடாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்த சுட்டுரையில் பிரதமர் கூறியிருப்பதாவது :
“ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மேதகு ஃபியூமியோ கிஷிடாவுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள். நமது யுக்தி சார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டுறவை மேலும் வலுப்படுத்தவும், இந்தோ – பசிபிக் பகுதி மற்றும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் செழிப்பை ஏற்படுத்தவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்”.
கருத்துகள்