சென்னை விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி மதிப்பிலான 1.42கிலோ தங்கம் மற்றும் மின்னணுப் பொருட்கள் பறிமுதல். ஐந்து பயணிகள் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி மதிப்பிலான 1.42கிலோ தங்கம் மற்றும் மின்னணுப் பொருட்கள் பறிமுதல். ஐந்து பயணிகள் கைது


துபாயிலிருந்து  வியாழக்கிழமையன்று (16.12.2021)  இண்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த நான்கு பயணிகளை, விமான நிலைய வெளியேறும் நுழைவாயிலில், சுங்கத்துறை அதிகாரிகள் வழிமறித்து சோதனைசெய்தனர்.  இவர்களது உடல் மற்றும் உடமைகளை சோதனையிட்டதில்,   தங்கத் துகள் வடிவில்,  அட்டைப்பெட்டிகளில் 1147 கிராம் எடையுள்ள, ரூ.49.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்திவரப்பட்டது கண்டறியப்பட்டு, கைப்பற்றப்பட்டது.  மேலும் இந்தப் பயணிகள் நான்கு பேரும்,  ரூ.42.04 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருட்களையும் கடத்திவந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.  இதையடுத்து, 4 பயணிகளும் கைது செய்யப்பட்டனர். 

மற்றொரு சம்பவத்தில்,  சார்ஜாவிலிருந்து அதேநாளில் வந்த ஒரு பயணியிடம் நடத்திய சோதனையின்போது, ரூ.11.87 லட்சம் மதிப்புள்ள 275 கிராம் தங்கம், ஊடுஅச்சு வடத்தின் முனைப்பகுதியில் மறைத்துக் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.  மேலும் அந்தப் பயணி, ரூ.9.80 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருட்களை கடத்தி வந்ததும் கண்டறியப்பட்டு, தங்கம் மற்றும் மின்னணுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்தப் பயணியும் கைது செய்யப்பட்டார். 

மொத்தத்தில்  ரூ.61.37 லட்சம் மதிப்புள்ள 1.42கிலோ தங்கம் மற்றும் ரூ.51.84 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டு, ஐந்த பயணிகள் கைது செய்யப்பட்டதாக, விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்