பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20.ஆம் தேதி வெளிவரும் மே மாதம் 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட பொதுத் தேர்வில், தமிழ்நாடு புதுச்சேரியைச் சேர்ந்த, 9.50 இலட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்று எழுதினர்.
விடைத்தாள் திருத்தமும் , மதிப்பெண் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளும் முடிந்துவிட்டதையடுத்து, பத்து மற்றும் பணிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியாகின்றன. அரசு தேர்வுத் துறையின், tnresults.nic.in, dge1.tn.nic.in மற்றும் dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளையும், மதிப்பெண் விபரத்தையும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். தனித் தேர்வர்களின் மொபைல் தொலைபேசி எண்களுக்கு, மதிப்பெண் விபரங்கள், குறுஞ்செய்தியாகவும் அரசுத் தேர்வுத் துறையால் அனுப்பப்படும்.
இந்த முறை, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் கணிதப் பாட வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கவலை அடைந்தது குறித்து, பள்ளிக் கல்வித் துறை ஆய்வு செய்து, கணிதப் பாடத் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்ட நிலையில். ஏற்கப்பட்டுள்ளதா என்பது, வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகும் தேர்வு முடிவுகளில் தெரிய வரலாம். தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்த நிலையில் ஜூன் மாதம் 20-ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு விழா நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
பணிரண்டாம வகுப்பு முடிவு காலை 9.30 மணிக்கும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் : ( S.S.L.C) 20.06.2022 (திங்கட்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு வெளியாகிறது.
இணையதள முகவரி : www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in
தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு S.S.L.C பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களால் ஜூன் 20-ம் தேதி (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்த நிலையில் 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இருபதாம் தேதி முன்கூட்டியே வெளியாகிறது.
கருத்துகள்