முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சக்தி இண்டர்நேஷனல் பள்ளி விடுதி மானவி மர்ம மரணம் நீதிகேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கனியாமூர் சக்தி இன்டா்நேஷனல் பள்ளியில்.


கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தின் 17 வயதுச் சிறுமி 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவி, பள்ளி விடுதியில் தங்கயிருந்தவாறு, படிப்பை தொடர்ந்து வந்த நிலையில், ஜூலை மாதம் 13 ஆம் தேதியன்று, மாணவி விடுதி அறையில் மர்மமாக உயிரிழந்தத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக சிறுமியின் வீட்டாருக்கு பள்ளி தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.



இது அவரது குடும்பத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவி மர்மமாக உயிரிழந்த நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகமே சிறுமியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மாணவியின் இறப்புக்கு நியாயம் கோரி, மாணயின் இறப்பில் சந்தேகமிருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மற்றும் ஜாதி அமைப்புகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில்,  இன்று காலை முதல் அது கலவரமாக மாறியது.


சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஒன்று சேர்ந்த இளைஞா்கள் அந்த சக்தி இண்டர்நேஷனல் பள்ளியை சூறையாடினர் மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளி வாகனத்திற்கும் தீ வைத்தனர். மேலும் காவலா் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். போராட்டகாரர்கள் கல்வீசித் தாக்கியதில் காவல்துறை துணை தலைவர் பாண்டியன் உள்பட 20 க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். மாணவி மரணம் தொடர்பாக, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏராளமானோர் போராட்டம் செய்து வருவதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவ மாணவி இறப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், அதுகுறித்து புலன் விசாரணை செய்யப்படும்.

மாணவி தனது இறப்புக்கு முன் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில் கணிதம், வேதியியல் பாடங்கள் கடினமாக இருந்ததென தெரிவித்துள்ளார், வேறு குறிப்பிட்டு எந்த குற்றச்சாட்டு அதில் தெரிவிக்கவில்லை. ஆசிரியர் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை ஒடுக்க 500 ஆயுதப்படையினர் சென்றுள்ளனர்.   மாணவியின் உயிரிழப்பில் சந்தேகமிருப்பதாகக் கூறி, கடந்த 4 நாட்களாக அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று இரவு முதல் விடிய விடிய மாணவியின் பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று காலை போராட்டக்காரர்கள் பள்ளி மீது கல்வீச்சில் ஏற்பட்டனர். பள்ளி வாகனங்களை தீ வைத்து எரித்தனர். மூன்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து நாசமாயின. அதையடுத்து காவல்துறை தடியடி நடத்தியதைத் தொடர்ந்து அப்பகுதியே கலவர பூமியானது விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவர் பண்டியன் உள்ளிட்ட காவலர்கள் மற்றும் மாணவர்களுக்கும் காயமேற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் காவல்துறை வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை, பள்ளிக்கூடம் மற்றும் அப்பகுதியில் நின்றிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.




கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி இண்டர்நேஷனல் பள்ளி விடுதி மாணவி மர்ம மரணம் தொடர்பில் நடந்த போராட்டம் வன்முறைகள் உளவுத்துறையின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறாகவே தெரிவதாக பலர் கூறினாலும், உண்மை பாதிக்கப்பட்ட நபர்களின் குரலுக்கு அரசு சிறிதளவேனும் செவிசாய்க்கவில்லை என்பதையும் பேச்சு வார்த்தை நடத்தி முடிக்க சரியான வழிகாட்டுதல் இல்லாத நிலை தான் காரணம் எனவும் பேசப்படுகிறது. 




பிரச்சனை நடந்து வரும் நான்கு நாட்களாக அந்த சுற்று வட்டார ஊர் பகுதியிலும் செல்போன் வாட்சப்பிலும், கிராமங்களிலும் தனியார் சக்தி இண்டர்நேஷனல் பள்ளி மாணவி மரணம் பற்றி ஏகப்பட்ட செய்திகள், மக்களும் வழக்கத்திற்கு மாறாக திரண்டு மூன்று நாட்கள் போராடியும் இருக்கிறார்கள். இந்நிலையில்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு சக்தி இண்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளியை எரித்து நாசமாக்கியதன் பின்னர் தான் மாணவி மர்மமாக மரணம் அடைந்த நிகழ்வு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பேசப்படுகிறது உளவுத்துறையோ உரிய உண்மைத் தகவல்களை அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை என்பது புலனாகிறது.
. டிராக்டர், பெட்ரோல் கேன், உட்பட முன் தயாரிப்புகளுடன் நடக்கும் இந்தக் கலவரம் போராட்டமல்ல. எந்த மக்கள் போராட்டங்களையும் அலட்சியம் செய்தால் அதுவே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

மர்மமாக விடுதியில் இறந்து போன அந்த மாணவியின் விவகாரத்தில் பள்ளிக்குத் தொடர்பு உண்டு என்றால் கடும் நடவடிக்கை தேவை. கலவரங்களில் மக்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை பள்ளியும் அதன் வாகனங்கள் தான் சேதமானது என்பதை இங்கு பார்க்கலாம். தவறான நடவடிக்கைகள் மற்றும் ஊழல்கள் தீர்வில்லை எனும் போது தான் மக்கள் தங்கள் கோபத்தை வேறு விதமாகப் பிரதிபலிப்பு செய்த நிகழ்வாகவே அங்கு பார்க்கப்படுகிறது இதுவே இங்கு பொது நீதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...