தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2. முதன்மைத் தேர்வில் கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்ட இடத்தில் நடந்துள்ள தவறுகளே குளறுபடிகளுக்குக் காரணமாகுமென டிஎன்பிஎஸ்சி விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு 20 மாவட்டங்களிலுள்ள பல நகரங்களில் நடந்தது. இத் தேர்வில் விடைத்தாள்கள மாற்றி மாற்றி வழங்கப்பட்டதால் குழப்பம் ஒவ்வொரு தேர்வருக்கும் உரிய எண்கள் விடைத்தாள்களில் இடம் பெற்றிருக்கும். ஆனால் அவை மாற்றி மாற்றி வழங்கப்பட்டதால், இந்தக் குளறுபடி ஏற்பட்டது இந்த விவகாரம் சம்பந்தமாக டி என் பிஎஸ்சி அதிகாரிகள் நேற்று நடத்திய ஆலோசனையில்கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்ட இடத்தில் தான் த வறுகளே குளறுபடிகளுக்கு
நடந்த முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள்கள் சரியாக அடுக்கப்படாமல் மாற்றி மாற்றி அடுக்கப்பட்டு வெவ்வேறு மையங்களுக்கு அனுப்பப்பட்டதே, இந்தக் குளறுபடிகளுக்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், வினாத்தாள் அச்சிட டெண்டர் எடுத்த நிறுவனம், நேரடியாக இந்தப் பணிகளை
மேற்கொள்ளாமல் வேறு நிறுவனங்களுக்கு சப் காண்ட்ராக்ட்டா் பணிகளை வழங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. டெண்டர் எடுத்த நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்