முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி

பேனா நினைவுச் சின்னம் அரசியல் வரலாறு 


திராவிடக் கட்சி மீது மத்திய பாரதிய ஜனதா கட்சியின் அரசு முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை கடலுக்குள் எழுப்புவதற்கு  கடலோர ஒழுங்குமுறை ஆணையம், மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச் சூழல் துறையின் விதிகள்,  கடலோர மேலாண்மை ஆணையம் ஆகிய அனைத்திலும் உள்ள சட்ட விதிகள் படி  அனுமதி தருகிறார்கள் 

ஆனால் இதற்கு முன்பு கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குப் பின்னர் தான் எந்தக் கட்டுமானமும் இருக்க வேண்டும் என்பது கடலோர மேலாண்மை ஆணையத்தின் அடிப்படை விதியாக இருந்தது, 


மத்திய பாரதிய ஜனதா கட்சியிண் அரசைப் பொறுத்த வரை அவர்களுக்கு திராவிடம் என்றாலே எட்டிக்காயாகும். அதுவும் அந்த திராவிட சித்தாந்தத்தின் மூலவேரான ஈ.வே.ராமசாமி எனும்  பெரியார் என்றாலே, அவர்களுக்கு ஆற்ற முடியாத சினம் எழும். ஏனென்றால், இந்தியாவில்  பாசிச சித்தாந்ததை எதிர்த்து எத்தனையோ சித்தர்கள் போராடினாலும் அவர்களை வாழும் காலத்திலேயே வதைத்ததும்  கொன்றதும் அதிகம்  முடியாவிட்டால் இறப்பிற்கு பின் அரவணைத்து காலப் போக்கில் அவர்களை காணாமல் அழித்தது. ஜனாதனத்தை எதிர்த்த புத்தரையே இந்து மதம் இப்படித் தான் உள்வாங்கிச் செறித்தது! அதில் காலம் சென்ற பின்பும் மக்கள் மனதில் பதிவான பெரியார் எனும் ஈ.வே.ராமசாமி  ஒருவரே! அவரை எதிர்க்க,  பாஜக எடுத்த முடிவு தான் காலம்சென்ற  முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நினைவுச் சின்னம்.


பெரியார் என்ற பெரிய கோடு ஒன்று கண்களை உறுத்துகிறது, எனவே, அதற்கு அருகில் காலம்சென்ற முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி என்ற அதைவிடப் மிகப் பெரிய கோடு வரையும் போது தான் ஈ.வே.ரா.எனும்  பெரியாரின் முக்கியத்துவம் குறையும். இது தான் அவர்கள் தியரி. இந்தத் தியரியைத் தான் காந்தியின் முக்கியத்துவத்தை சிதைக்க மூவாயிரம் கோடியில் உலகின் இரும்பு மனிதர் மிகப் பெரிய சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலையை அங்கு நிறுவினார்கள்! 

ஏனென்றால், உலகத்தாரை பொறுத்த வரை இந்தியா என்றால், அவர்களின் நினைவுக்கு முதலில் தோன்றுபவராக மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மட்டுமே இருக்கிறார். இனி அடுத்தடுத்த தலைமுறையினர் காந்தியை விட பட்டேல் தான்  மிகப் பெரியவர் என எண்ணத் தலைப்படுவார்கள் ஆனால், பட்டேல் என்பவர் காந்தியின் பல சீடர்களில் ஒருவர்! பட்டேலை விட, முக்கியத்துவம் வாய்ந்த சுமார் இருபது  தளபதிகள் காந்திக்கு இருந்த நிலை உண்டு.

அதே போலத் தான் ஈ.வே.ராமசாமி பெரியார்! அவருக்கு இணை சொல்ல  பேரறிஞர் அண்ணா போன்ற முதல் நிலையில் இருக்கும் சுமார் இருபது  தளபதிகளும்  ஈ.வே

ராமசாமி எனும் பெரியாருக்கு உண்டு!


பெரியார் ஒரு வரலாற்று நாயகர். திராவிடத்தின் ஐகான்! அவர் உருவாக்கிய சமூக மாற்றத்தின் விளைவாய் ஆட்சிக்கு வந்தவர்களே அண்ணாவும், கருணாநிதியும்! இவர்கள் வெறும் ஆட்சியாளர்கள் தான்! கட்சிகளைக் கடந்து ஈ.வேரா.எனும் பெரியாரின் தாக்கம் அனைத்து மட்டத்திலும் உணரப்பட்டது. இவர்களுக்கும் முன்பே பெரியாரின் தாக்கத்தால் காங்கிரசில் பாசிசத்தின் தாக்கம் சிதைந்து, காமராஜர் தலைமைக்கு வந்தார்! 

ஆக, ஈ.வே.ரா எனும் பெரியாரின் கொள்கைகளை முதன் முதலில் நடைமுறைப்படுத்த சட்டங்கள் போட்டுத் தொடங்கி வைத்தவர் காமராஜர்

 அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது அண்ணாவும், கலைஞரும்! அதே பாதையில் பயணப்பட வேண்டிய கட்டாயம் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் அத்தியாவசியமாக ஏற்பட்டது.

ஆகவே, அந்த ஈ.வே.ரா எனும்  பெரியாரின் முக்கியத்துவத்தை குறைக்கவே திமுகவினய தலைவர் பேனா சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் அரசு அனுமதியளிக்கிறது. 

தமிழ்நாட்டின் தலை நகர் சென்னையில் உலகப் புகழ் பெற்ற மெரீனா கடற்கரையில் முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர்  கருணாநிதியின் வானளாவிய நினைவுச் சின்னத்தை பார்க்க நேரும் வருங்கால தலைமுறைக்கும், வெளிநாட்டு பயணிகள் மற்றும் மீடியாக்களுக்கும் டாகடர் கலைஞர் மு.கருணாநிதி தான் இனி திராவிடத்தின் ஐகானாகத் தெரிவார்! ஈ.வே.ரா எனும் பெரியார் மெல்ல, மெல்ல மறக்கடிக்கபடுவது உறுதி. இனி முழு வீச்சில் 

மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் இலக்கியப் பணி, எழுத்தாளுமையை போற்றும் விதமாக, சுமார் 81 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்தில் அவர் பயன்படுத்திய பேனாவின் மாதிரி சிலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை விடப் பெரியதாக 134 அடி உயரத்தில் பேனா சிலை அங்கு செல்ல கரைமீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும்  மொத்தம் 650 மீட்டர் தொலைவில், கடல்பரப்பிலிருந்து 6 மீட்டர் உயரத்தில் இரும்பாலான கண்ணாடிப் பாலம் அமைக்கப்படும் இத்திட்டத்தை செயல்படுத்துவற்காக தமிழ்நாடு பொதுப்பணித்துறை, CRZ (Coastal Regulation Zone) அனுமதிகேட்டு சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்திற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ஏற்கெனவே, முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் சுமார் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், மேலும் இரண்டு மடங்கு செலவில் புதியதாக கடலில் பேனா சிலை அமைக்க தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவாக பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதைத்தொடர்ந்து கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெரீனாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் இடத்துக்கு அருகிலேயே ஐஎன்எஸ் அடையாறு கடற்படைத் தளம் இருப்பதால், அவா்களிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.

நினைவுச் சின்னம் கட்டப்படும் போது கடலோர நிபுணா் குழுவினா் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

நிலத்தடி நீரைப் பயன்படுத்தி நினைவுச் சின்னத்தை எழுப்பக் கூடாது.

நினைவுச் சின்னம் தொடா்பாக நீதிமன்றங்கள் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால், அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கடலோரப் பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும் காலத்தில் நினைவுச் சின்னத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.

நினைவுச் சின்னத்துக்கு சரியான சாலை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 காண வரும் பொதுமக்களைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

போக்குவரத்து திட்டம் மற்றும் அவசர காலங்களில் மக்களை வெளியேற்றுதல் ஆகியவற்றுக்கான திட்டமிடுதல்களை முறையாக அமல்படுத்த வேண்டும்.

பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மீறப்பட்டால், திட்ட அனுமதி திரும்பப் பெறப்படும்

என்பது உள்பட 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே நினைவுச்சின்னம் அமைக்க முடியும்.                                              கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க EIA வை பரிசீலித்து யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.முத்தமிழ் அறிஞருக்கு முதலில் தங்கத்தால் பேனா வழங்கியவர் நடிகர் விஜயகாந்த் நினைவுக்கு வருகிறார் அவரும் தற்போது அரசியல் தலைவரான நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...