முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜி-ஸ்கொயர் நிறுவனங்களில் நடந்த சோதனைகளில் சிக்கிய ஆவணங்கள் ஆய்வு

ஜி-ஸ்கொயர் கட்டுமான நிறுவனங்களில் மூன்றாவது நாளாக நடந்த சோதனைகள் மூலம் மூன்றாண்டுகளில் நடந்த பத்திரப்பதிவுகள் உள்ளிட்ட வங்கிப் பணபரிவர்த்தனைகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்கின்றனர்


சென்னையைத் தலைமையிடமாக கொண்டு திருச்சிராப்பள்ளி, கோயம்பத்தூர், பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட  பல இடங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இயங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜி- ஸ்கொயர் குரூப் திமுகவின் தலைவர் குடும்ப உறவுகளுக்கு நெருக்கமான நிறுவனம் எனவும், திமுக ஆட்சி அமைத்த பிறகு இந்த நிறுவனம் 38 ஆயிரத்து 827 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியதாகவும் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில்  ஜி- ஸ்கொயர் நிறுவனத்தில் மூன்றாவது நாளாகத் தொடரும் வருமான வரித்துறையின்  சோதனைகள் .



ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் குறைந்த விலையில் நிலங்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு அடிப்படையில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி முதல் அவர்களது ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஜி- ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக திமுகவுக்கு  நெருக்கமாக இருக்கக்கூடிய நபரது நிறுவனம் என்பதால் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக்கு அழைத்து வரப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதில்




சென்னை சேத்துப்பட்டு, ஆழ்வார்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகம், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர்  மோகன் வீடு, அவர் மகன் கார்த்திக் வீடு, ஆடிட்டர் சண்முக மூர்த்தி, முதல்வர் மருமகன் சபரீசனின்  நண்பர்கள், நெருக்கமானவர்கள் எனப் பல இடங்களில் மூன்று நாட்களாக சோதனை மேற்கொள்ளப்படுவதில்

"ஜி ஸ்கொயர் " நிறுவனம் என்பது ஒரே ஒரு நிறுவனம் அல்ல,
ஜி ஸ்கொயர் ஹோம் டெவலப்பர்ஸ்,
ஜி ஸ்கொயர் லேண்ட் டிசைன்,
ஜி ஸ்கொயர் ஜமீன் ப்ராப்பர்ட்டீஸ்,
ஜி ஸ்கொயர் லேண்ட் ஹோல்டிங்ஜி ஸ்கொயர் பில்டர்ஸ்,
ஜி ஸ்கொயர் ராயல் எஸ்டேட்ஸ்,
ஜி ஸ்கொயர் ஹவுசிங் டெவலப்பர்ஸ்,
ஜி ஸ்கொயர் சாரா பில்ட்மோர்,
ஜி ஸ்கொயர் சிக்னிடிவ் பில்ட் ஆன்,                        ஜி ஸ்கொயர் யுனைடட் ரியாலிட்டி,
ஜி ஸ்கொயர் லேண்ட் & பில்டிங்,
ஜி ஸ்கொயர் கிரியேட்டர்ஸ்,
ஜி ஸ்கொயர் குயின் கேட்,
ஜி ஸ்கொயர் ரியால்டர்ஸ்,
ஜி ஸ்கொயர் கிராண்ட் எஸ்டேட்,
ஜி ஸ்கொயர் ஜமீன் எஸ்டேட்,
ஜி ஸ்கொயர் லே அவுட்,
ஜி ஸ்கொயர் கிரவுண்ட் & ப்ரமோட்டர்ஸ், 
ஜி ஸ்கொயர்  ஹைடெக் பில்டர்ஸ்,
 ஜி ஸ்கொயர் எகோசென்ஸ் கிரியேஷன்ஸ், 
 ஜி ஸ்கொயர் கன்ஸ்ட்ரக்டர்ஸ்,
 ஜி ஸ்கொயர் கிரீன் ரோப் டெவலப்பர்ஸ் ,     ஜி ஸ்கொயர் ரியல் ப்ரமோட்டர்ஸ்,
ஜி ஸ்கொயர் ஏட் காம் கிரியேஷன்ஸ் ,  ஜி ஸ்கொயர் பென்டோ க்ரியேட்டர்ஸ், 
ஜி ஸ்கொயர் குனீத் டெவலப்பர்ஸ்.என இருபத்தைந்து நிறுவனங்கள் கொண்டது.




ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனை மட்டும் நிறைவடைந்தது.கடந்த மூன்று வருடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு மற்றும் பத்திரப்பதிவு செய்துள்ள நிலங்கள் தொடர்பாக வருமான வரித்துறையினர் ஆய்வை மேற்கொண்டனர். மேலும் ஜி ஸ்கொயர் வங்கி கணக்கு விவரங்களை பெற்று, கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொண்டுள்ள பண பரிவர்த்தனைகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.இதனை தொடர்ந்து ஈட்டிய வருமானத்திற்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் முறையாக வரி செலுத்தி உள்ளனரா அல்லது வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனரா எனவும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருவதாகத் தகவல் 2019 ஆம் ஆண்டு இதே நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி கைப்பற்றியுள்ள ஆவணங்களை ஒப்பிட்டும் விசாரணை நடைபெறுவதாக வும்,மூன்று நாட்களாக நடைபெறும் இச்சோதனை மேலும் சில நாட்கள் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் வருமான வரித்துறையினர் தகவல் ,யார் இந்த பாலா சைக்கிளில் தொடங்கிய வியாபாரம்...!

இன்று பல ஆயிரம் கோடிகள் வரை  தாண்டி விட்டது!!

 அவரது   உழைப்பு!

ஆம் ஒட்டன்சத்திரம் அருகே கிராமம் பேபி அம்மாவின் செல்லப் பிள்ளைதான் ராமஜெயம் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற தாக்கம் திருப்பூரில் சைக்கிளில் தெருத்தெருவாக சேர், ஃபேன், டிவி என விற்பனை செய்து கொஞ்சமாக முன்னேறி திருப்பூர் சாந்தி தியேட்டர் அருகே பேபி எலக்ட்ரானிக்ஸ் என்பது அவரது தாயார் பெயரில் 10 க்குப் 10 ரூமில் உருவாகி படிப்படியாக பல ஷோரூம் திறந்து வியாபாரத்தில் கொடி கட்டி பறந்து பின் சரிவு ஏற்பட்டு சென்னைக்கு சென்று ரியல் எஸ்டேட் செய்து படிப்படியாக முன்னேறி இன்று ஜி ஸ்கொயர் நிர்வாகியாகி பாலா என தனது பெயரை மாற்றிக் கொண்ட உண்மையான உழைப்பாளி தான் !  ராமஜெயம் திருப்பூரில் பேப்பர் விளம்பரம்  செய்வார்  அப்போதே செய்தி இதழ்களில்  சைக்கிளில் தொடங்கி காரில் வலம் வரும் ராமஜெயம் என கட்டுரை வந்த காலம் உண்டு உலகையே ஒரு காலத்தில் வலம் வருவேன் என கூறினார்.   பாலாவாக மாறிய பின் ராமஜெயத்தை பலரும் பார்க்கமுடிய தான்.! மாற்றங்கள் மனிதனை புரட்டிப்போட்டுவிட்டது ....ஆக இப்போது பாதி உண்மைகள் மட்டும் மீதி உண்மைகள் பேசும் போது நடப்பு அரசியல் கலப்பு வரும் ....அப்போது தான் ஊழல் இலஞ்ச இலாவண்யங்கள் துவங்குகிறது...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...