முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முறைகேடான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரான முன்னால் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்

 சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னால்  சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்  சி. விஜயபாஸ்கருக்கு


எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இலஞ்ச ஒழிப்புத்துறை. விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரான டாக்டர் சி.விஜயபாஸ்கர்.திருவள்ளூர் மாவட்டம்  மஞ்சக்கரணையில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு  முறைகேடாகச்  சான்றிதழ் வழங்கியதாக உள்ள விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் மே மாதம்   குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். டாக்டர் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அவரது மனைவி வி.ரம்யா மற்றும் இரண்டு மகள்களின்  பெயரில் ரூபாய் 58 கோடிக்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார்


என டாக்டர் சி. விஜயபாஸ்கர் மீது  பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் படி    ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த ஆண்டில் சோதனையும்  நடத்திய நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

2011, மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடர்ந்து பல புகார்கள் வந்த நிலையில் அவர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு  மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர்  வழக்குப் பதிவு செய்தனர்.


முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 60 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளதாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர்  குற்றஞ்சாட்டியுள்ளதுடன் அவர் மற்றும் அவரது மனைவி வி.ரம்யாவின் மீதும்  பதிவு செய்யதுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரின் வீடு, அவருக்கு சொந்தமான இடங்களில்  2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தி பல மாதங்களுக்குப் பிறகு புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் மே மாதம்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதன் பேரில்   டாக்டர் சி.விஜய பாஸ்கர் மீது 216 பக்கத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேற்படி வழக்கில் நேற்று முன் தினம்  புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு தற்போது விசாரணை துவங்கியுள்ளது.   முதன்மை மாவட்ட நீதிபதி முன்பு நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். துணைக் கண்காணிப்பாளர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தாக்கலான குற்றப் பத்திரிக்கையில் 





 குற்றம் சாட்டப்பட்டவராக உள்ள  டாக்டர் C.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி வி.ரம்யாவும் உள்ள நிலையில் சம்மன் படி  ஆஜரானார். அவரது வக்கீல் ஆஜராக, மேலும்  கூடுதல் அரசு வக்கீல் எஸ்.ஜாய்ஸ் குமார் ஆஜராகி மனுவை தாக்கல் செய்ததன் படி . வழக்கு சம்மன் அவரது கைத் தொலைபேசிக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவலாக அனுப்பப்பட்டதாகவும், அதன் சேவை உறுதிசெய்யப்பட்டதாகவும், இலுப்பூரிலுள்ள அவரது முகவரியில் அவரது மனைவி வி    ரம்யா  இல்லாததால், சம்மனை அன்று இலுப்பூர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் கதவில் ஒட்டியதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ததாகவும் , மேலும், தங்கள் கோரிக்கையின் பேரில், இந்த நீதிமன்றத்தால், ஒப்புகை அட்டையுடன் பதிவுத் தபால் மூலமாகவும் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும்  வழக்கறிஞர் தெரிவித்த நிலைஇல்  நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான டாக்டர் சி.விஜயபாஸ்கர்  சார்பில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டாம் நபர் வி.ரம்யா தனது மனைவி என்றும், அவர் சென்னையில் வசிப்பதாகவும், அவருக்கு முதுகுத் தண்டுவடப் பிரச்சனை இருப்பதாகவும், அதனால் அவரால் உடனடியாக பயணம் செய்ய முடியாதென்றும், இனிமேல் இந்த நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரினார். இந்த மாத இறுதி வரை அவகாசம் அளிக்கக் கேட்ட நிலையில் ஏ.2 வான அவரது மனைவி வி.ரம்யாவுக்கு  சம்மன்  நீதிமன்றத்தால் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு, அதற்கான சேவைக்கான ஒப்புகை அட்டை இன்று வரை நீதிமன்றத்திற்கு வரவில்லை எனவும்  அரசுத் தரப்பு சமர்ப்பித்த அறிக்கையின் படி, சம்மன் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு வி.ரம்யாவுக்கு வழிகாட்டுதல்கள் அறியப்பட்ட சட்டத்தின் மூலம் அவருக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அது பொருத்தமான சேவையாக எடுத்துக்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. அரசுத் தரப்பால் கோரப்பட்டபடி, ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பிப்பதன் மூலம் வி.ரம்யா முன்னிலையாக  நீதிமன்றம் தகுந்த நடவடிக்கைகளைத் தொடங்கலாம்் என அரசு தரப்பில் தெரிவித்த நிலையில் அவரது  கணவரான விஜயபாஸ்கர் சார்பில் அடுத்த விசாரணையில் ஆஜராக நீட்டித்த உறுதிமொழியையும், உடல்நிலையையும்   கருத்தில் கொண்டு அவரது மனைவி வி.ரம்யா ஆஜராக மேலும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுகோள் விடுத்த நிலையில் 29 ஆகஸ்ட் 2023 அன்று அவர் மனைவி வி.ரம்யா  ஆஜராக வேண்டும் என்றும்  . 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதியன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.     


 வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததில் டாக்டா் சி.விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ராப்பூசல் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் சி.விஜயபாஸ்கர்.அவரது மனைவியுடன் சேர்ந்து அவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ரூபாய் 35.79 கோடி அளவுக்கு சொத்துக் குவித்துள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கலாகிறது.

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியின் தற்போதய  சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி வி.ரம்யா ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம் புதுக்கோட்டையில் 2023 ஆம் ஆண்டு மே மாதம்  22 ஆம் தேதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும்  இலஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

திரு.விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், அவர் தனது மனைவியுடன் சேர்ந்து அவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ரூபாய் 35.79 கோடி அளவுக்கு சொத்துக் குவித்துள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை வருகிறது

இருவர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988 ன் வெவ்வேறு பிரிவுகளின் படி  பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை துணைக்  கண்காணிப்பாளர் ஜி. இமயவர்மன் தலைமையிலான புதுக்கோட்டை பிரிவு, 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை துணை ஆவணங்களுடன் புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக டி.வி.ஏ.சி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

திரு.விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், அவர் தனது மனைவியுடன் சேர்ந்து அவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ரூபாய் 35.79 கோடி அளவுக்கு சொத்துக் குவித்துள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை வருகிறது.

விஜயபாஸ்கர் முந்தைய அதிமுக அரசில் அமைச்சராக இருந்தபோது, ​​வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட சோதனை காலம் ஏப்ரல் 1, 2016 முதல் மார்ச் 31, 2021 வரை என ஊழல் தடுப்புத் துறை  வட்டாரங்கள் தெரிவித்தன. விசாரணையின் போது, ​​மாநிலம் முழுவதும், 56 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, வழக்கு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

குற்றப்பத்திரிகையுடன் சுமார் 10,000 பக்கங்கள் கொண்ட 800 ஆதார ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக அந்தத் தகவல்கள் தெரிந்த சட்ட வல்லுநர்கள் மூலம் வரும் தகவலாகும். ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர்  இமயவரம்பன், காவல் ஆய்வாளர் ஜவகர் ஆகியோர் தலைமையிலான ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் தகவலில் கடந்துபோன  ஐந்தாண்டுகளில் 51 கோடி ரூபாய்க்கான சொத்துகளை டாக்டர் சி.விஜயபாஸ்கர் சேர்த்துள்ளார். அதே சூழலில் வருமான வரித்துறையில் தனக்கு 58 கோடி ரூபாய்க்கு வருமானம் வந்ததாகவும்  கணக்கை தாக்கல் செய்துள்ளார். இச் சூழலில்  தனக்கு 34 கோடி ரூபாய்க்கு செலவினங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளதால், செலவினங்கள் போக நிகர வருமானமென்பது  24 கோடி ரூபாய் தான் இருந்துள்ளது. இதனை வைத்துக் கொண்டு அவர் எப்படி 51 கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கினார் என்பது தான் இந்த சொத்துக்குவிப்பு  வழக்கின் சாராம்சம். இந்த 27 கோடி ரூபாய் வித்தியாசம் காரணமாகத்தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்ததாக முதல் தகவல் அறிக்கையும்  போடப்பட்டது," என்கிறார்கள் விபரம் அறிந்த சட்ட வல்லுனர்கள் .சொத்துகள் குறித்து அப்போதே டாக்டா் சி.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில்  ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர்  

``ராசி புளூ மெட்டல்ஸ், ஸ்ரீவாரி ஸ்டோன்ஸ் என டாக்டர் சி.விஜயபாஸ்கருக்குச் சம்பந்தப்பட்ட பல நிறுவனங்கள் கணக்கு காட்டப்பட்டுள்ளதில் ஒரு சில நிறுவனங்களில் அவர் பங்குதாரராகவும்  இருக்கிறார். சில நிறுவனங்களில் முதலீடு மட்டுமே செய்துள்ளார். அவர் மனைவி ரம்யாவும் வி.பி.எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களில் பங்குதாரராக இருந்துள்ளதாகவும்  சொல்லப்பட்டுள்ளது. இது ஐந்தாண்டுகளில் 7 டிப்பர் லாரிகள், பி.எம்.டபுள்யூ கார், ஜே.சி.பி, மிக்ஸர் வாகனம் என பலவகையான வாகனங்களையும் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வாங்கியுள்ளார். காஞ்சிபுரத்தில் 4 கோடி ரூபாய்க்கு விவசாய நிலமும், சென்னையில் பகீரதி அம்மன் சாலையில் 14 கோடி ரூபாய்க்கு வீடும் வாங்கியுள்ளது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது," என்றார் மூத்த சட்டவல்லுநர் ஒருவர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...