முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உதயம் தியேட்டர் மூட அந்தப் பகுதியில் அமையும் புதிய மாலே காரணம்

உதயத்தூர் கீழூர்  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இராதாபுரம் வட்டாரத்திலுள்ள கிராமம்,


ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருநெல்வேலி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும் அங்கு பூர்வீக சைவப்பிள்ளைகள்  திருநெல்வேலிக்காரர்கள் உறுவாக்கிய உதயத்தூர் கிராமமும், சென்னை உதயம் தியேட்டரும்.

திருநெல்வேலி பரமசிவம் பிள்ளை தொடங்கிய பல பலசரக்குக் கடைகள் தான் பிற்காலத்தில் நாடார்கள் எனும் அண்ணாச்சிகளின்  கடையாக மாறியது சென்னை முழுவதுமிருந்தது  பெரும்பாலும் திருநெல்வேலியிலிருந்து சென்னை வந்து பலர் தற்போது பாத்திரக்கடை, ஜவுளிக் கடைகளைத் துவங்கிய போது ஒரு குடும்பம் மட்டும் தியேட்டர் கட்டியது.


உதயத்தூரிலிருந்து வந்த அந்தக் குடும்பத்தினர் 1983 ஆம் ஆண்டில் அசோக் பில்லர் அருகில் நிலம் வாங்கி தியேட்டர் கட்டியது . முதலில் ஒரு திரை வைத்து கட்டப்பட்ட தியேட்டருக்குப் பெயராக. தங்களின் உதயத்தூர் நினைவாக.. உதயம் தியேட்டர் என்றானது. பரமசிவம் பிள்ளை மற்றும் அவரின் ஐந்து சகோதரர்கள் உள்ளிட்ட அறுவர் சேர்ந்து உருவாக்க தியேட்டரானது.

அது வளர வளர தியேட்டரில் கூடுதல் ஸ்கிரீன் போடப்பட்டு உதயம், சந்திரன், சூரியன், உதயம் மினி எனப்பட்டது. அதுவே உதயம் காம்ப்ளக்ஸ், சென்னையில் 20 வருடங்களுக்கு முன்பு வரை கூட சத்யம் , அபிராமிக்கு அடுத்ததாக பெரிய தியேட்டரிது சென்னையின் மிகப்பெரிய அடையாளம் மற்றும் வெற்றிகரமாக இயங்கும் சினிமா தியேட்டர்களில் ஒன்றானது.

அதன்பின் இந்தத் தியேட்டரின் பங்குகள் அந்த  அண்ணன் - தம்பிகளின் குடும்பத்தில் பிறந்த எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தளிக்கப்பட்டது. அது வேறு சில நிறுவனங்களுக்கும் கூடச் சென்றது. ஒழுங்கான ஒரு குடும்பத் தலைமை இல்லாத காரணத்தால் 2000 தொடக்கத்தில் இந்தத் தியேட்டர் நல்ல பராமரிப்பின்றிப்பின்தங்கியது. 2009 ஆம் ஆண்டில் தான் சென்னையிலுள்ள உதயம் திரையரங்கை அதன் நிறுவன உறுப்பினர் பரமசிவம் பிள்ளை ஒரு முக்கியப் பிரமுகரிடமிருந்து மீண்டும் வாங்கினார். அந்தத் தியேட்டரை உருவாக்கிய ஆறு சகோதரர்களில் அப்போது உயிரோடு இருந்த ஒரே ஆள் இவர்  மட்டும் தான். சொத்துக்களை குடும்பத்திற்குள் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக ரூபாய் .80 கோடிக்கு வாங்கினார்.

அதன்பின் இந்தத் தியேட்டரை 2013 ஆம் ஆண்டில் விற்கும் முடிவை எடுத்தனர். ஆனால் அப்போது தியேட்டர் விற்பனைக்கு வரவில்லை. மாறாக வாங்குவதற்கு பெரிதாக ஆட்களின்றி  இருந்தது. அதே போல் இங்கே மக்கள் கூட்டமும் முன்பு அளவிற்கு வர வில்லை.

,''உதயம் தியேட்டரில் என் இதயத்தைத் தொலைச்சேன்.." எனும் பாடல் தொடங்கி சென்னையின் அடையாளம் கூறும் பகுதிகளில் ஒன்றான தியேட்டர் இருந்த நிலையில்  தான் அது மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் எனும் நிறுவனம் வாங்கியுள்ளது.

உதயம் தியேட்டரைப் பற்றிய திருநெல்வேலிக் காரர்கள் தங்களின் நினைவுகளையும், பார்த்த படங்களையும் தற்போது நினைவு கூர்ந்து வருவது குறிப்பிடத் தக்கது   காரணம் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் மூலம் இந்தக் குடியிருப்புக் கட்டப்பட்டு வருகிறது. மதுக் கோப்பை வடிவத்தில் தோன்றும் 22-அடுக்கு மாடிகள் அமைப்பு, அசோக் பில்லரில் உள்ள ட்ரை-ஜங்ஷன் ப்ளாட்டில் கட்டப்பட்டு வருகிறது.

ஒரு லட்சம் சதுர அடி நிலத்தில் 24,000 சதுர அடி அளவு கொண்ட மால் பகுதி  ஒதுக்கப்படும். மற்ற பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கப்படும். ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பின் அளவும் 1,700 சதுர அடி மற்றும் 2.13 ஏக்கர் நிலத்தில் முழு கட்டமைப்பையும் கட்ட 227.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 10 மாடிகள் வரை கட்டப்பட்டு உள்ளது. மீதம் உள்ள மாடிகளின் கட்டுமானம் தற்போது நடந்து வருகிறது. இங்கே மால் வருவதால் அதன் உள்ளே மல்டிபிள்க்ஸ் தியேட்டர் கண்டிப்பாக இருக்கும். அதனால் இனி உதயம் தியேட்டர் வியாபாரம் பெரிய அளவில் இருக்காது என்பதைக் கருதி அதை விற்கும் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பழகிய பலருக்கு இன்னும் பத்தாண்டு ஆனாலும் உதயம் பஸ் ஸ்டாப் தான் இந்த நிலையில் உதயம் திரையரங்கை விற்றுவிட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல. அதுபோல ஒரு பேச்சுவார்த்தை நடக்கிறது. எதுவும் முடிவாகவில்லை. அதற்குள் திரையரங்கை விற்றுவிட்டதாகவும் இடிக்கப் போவதாகவும் செய்திகளில் உண்மையில்லை, இந்தத் தருணம் வரை இதுபோல எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" எனக் கூறுகிறார் சண்முகசுந்தரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...