முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலஞ்ச ஊழலற்ற, திறமையான நிர்வாகம் தவெக வுக்கு சாத்தியமா

இலஞ்ச ஊழலற்ற, திறமையான நிர்வாகத்திற்கு மக்கள்  ஏங்குவதாக - தமிழக வெற்றிக் கழக நிறுவனர் நடிகர் விஜய் கருத்து  கட்சி துவங்கிய நடிகர்கள் பலர் கடைசி நிமிடத்தில் மாறிய ஆட்டங்கள்   நிறைய உண்டு!நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி. 2024 ஆம் ஆண்டில் நடக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை எனவும், 2026 ஆம் ஆண்டில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 


போட்டியிடப்போவதாகவும் அறிவித்த நிலையில், அவருக்கு பல தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளையும் சிலர் எதிர்ப்பும்  தெரிவித்து வந்தனர். அரசியலில் தமிழகத்தின் வெற்றிடத்தை 

முடிக்கும் ஆற்றல் உள்ளவர் ஒருவர் இருந்தார் அவர் எம்ஜிஆர் மட்டுமே!! அவர் காலமாகி பின் அந்த இடத்தில் ஜெயலலிதா வருவாரா!!  என்ற நிலையில் வந்தார் வென்றார் பின் சென்றார்,  அதே இடம் இப்போது காலியாகவே உள்ளது சரியாக ஒருவர் அந்த இடத்தை அக்கட்சியில் நிரவல் செய்யாத நிலைக்கு காரணம் சிதறி ஒடிய நெல்லிக்கய்  மூட்டை கதை தான் அயோத்தியில் பரதன் ஆண்டபோதும்  ராமபிரானின் பாதுகை ஆண்டது போல தற்போது அதிமுக என்பது இரட்டை இலையும், கொடியும் தான் அது எங்கு உள்ளதோ அதுவே கட்சி இப்போது எடப்பாடி கே.பழனிச்சாமி வசமிருந்தாலும் அது இறுதி உத்தரவில் ஓ.பன்னீர் செல்வம் வசமானால் அடித்த பந்துபோல் அக்கட்சியினர் வருவார்கள் இப்போது அந்தப் பந்தை எரிந்தவர்கள் தங்கள்வசம் பந்து வருமென எதிர் பார்க்க பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதை போலாகவே அதன் நீட்சி தான் 


நடிகர் விஜய்  அரசியல் கட்சி தொடங்கினார் என்ற அரசியல் அறிந்த நபர்கள் பேசும் விவாதத்தில் உண்மை உள்ளது, வாழ்த்துக்கள்.

ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் திமுக அதிமுக என்பதே  இதுவரை முக்கியக் கட்சிகள். அடுத்ததாக  பாஜக,நாதக,பாமக, காங்கிரஸ், தேமுதிக ஆகியவை குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெறும். இதற்கிடையே  தான் நடிகர் விஜயும் புகுந்து விளையாட வேண்டும்.

இனி கொஞ்சம் வரலாறு காண்போம் 

1989 ஆம் ஆண்டில் வன்னியர்  ஓட்டு அன்னியருக்கு இல்லை என மருத்துவர் ச.ராமதாஸ் துவங்கிய பாமக.

1994 ஆம் ஆண்டில் வை கோபால்சாமி எனும் வைகோ  துவங்கிய மதிமுக.

2006 ஆம் ஆண்டில் நடிகர் விஜயகாந்த் துவங்கிய தேமுதிக.

2011ஆம் ஆண்டில் நடிகர் சீமான் துவங்கிய நாம் தமிழர் கட்சி2019 ஆம் ஆண்டில் நடிகர் கமலஹாசன் துவங்கிய மக்கள் நீதி மையம்.

இது போக மூன்று கம்யூனிஸ்ட்கள்,  சரத்குமார் நடத்தும் கட்சி, டாக்டர் கிருஷ்னசாமி , ஜாண்பாண்டியன், திருமாவளவன் போன்றோரும் தங்கள் கட்சியில் களத்திற்கு வந்துள்ளனர்.

தமிழ்நாட்டு அரசியலில் புதிதாக வரும் எந்தக் கட்சியும் திமுக,அதிமுக இரண்டுக்கும் மாற்று நாங்கள்  தான் என மக்களிடம் நிரூபித்து வாக்குகளை  வாங்க வேண்டும். அதற்கு இரண்டு கட்சிகளையும் புரிந்து கொண்டு திட்டவும் வேண்டும்.வேறு பெரிய கொள்கை கோட்பாடெல்லாம் வேண்டியதில்லை

அப்படிச் செய்து இதுவரை அதிகபட்ச வாக்குகளாக 9 சதவீதம் வரை  எட்டியவர் மறைந்த நடிகர் விஜயகாந்த் மட்டுமே.   இந்த சதவீதம் எந்தத் தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராகவோ நாடாளுமன்ற உறுப்பினராகவோ வெற்றி பெற வைக்காது. இரண்டு மூன்று தேர்தலில் வரும் தோல்விகள் பதவி நாடி வரும் கட்சி உறுப்பினர்களை சோர்வடையச் செய்துவிடும். அதோடு இப்போதைய தேர்தல் அரசியல் சேவைக்கு மதிப்பே இல்லாத பெரும் பணத்தைக் கோருகிறது.   இந்தக் காரணங்களால் எதிர்த்தவர்களோடேயே கூட்டணி அமைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.(இந்தப் பட்டியலில் திமுக,அதிமுகவுடன் கூட்டணியில்லாமல் தனித்தே நிற்பது சீமான் நடத்தும் நாம்தமிழர் கட்சி மட்டுமே)  ஆனாலும் அவராலும் சோபிக்க முடியவில்லை. காரணம்  அவர் தூக்கிப் பிடிக்கும் இலங்கை மக்களின் அரசியல் 

இதனால் ஆரம்பகால நம்பிக்கைகள் தகர்ந்து போய் கட்சி கலகலக்க ஆரம்பித்துவிடும்.  சினிமா நட்சத்திரங்கள் தமிழ்நாட்டில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் துவங்கி சிரஞ்சீவி, பவன் கல்யாண் போன்றோர் அரசியலுக்கு வந்த தெலுங்கு தேசத்திலும் இதே அனுபவங்கள் தான்.

இத்தனையும் தாண்டி சாதிப்பதென்பது கயிரைக் கட்டி மலையை இழுக்கும் வேலை தான். பார்ப்போம் என்ன நடக்கும் என்பதை என மக்கள் இருக்க.

அந்த வகையில், தமிழகத்தில் அரசியல் கட்சி துவங்குவதாக அறிவித்து, மூன்று வருடங்கள் தனது நிர்வாகிகள் ரசிகர்கள் அனைவரையும் அரசியல் கட்சிக்கான பூத் கமிட்டி அமைப்பு உட்பட அனைத்துக் கட்டமைப்புகளையும்  ஒருங்கே உருவாக்கி, பேரிடர் காலங்களில் மக்களுக்கான சமூக நலன் உதவிகள் அனைத்தையும் செய்ய வைத்து பொதுமக்கள் அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெரும் வகையில்  சீர்மிகு முறையில் வழிநடத்தி   தன் விழி அசைவுக்கு கட்டுப்பட வைத்து  அனைவராலும் தலைவர் என்று அழைக்கப்பட்டு அந்த அடைமொழியை மெய்மையாக்க முற்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால்  சாபமோ சூழ்நிலையோ நெருக்கடியோ அல்லது அவரது வயதான ரசிகர்களோ எதுவென்று எதிர்காலம் அறிந்து கொள்ள புரிந்து கொள்ள முடியாத வகையில் தன் முடிவை சட்டென மாற்றிக்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் .    ரசிகர் மன்றத்திலிருந்து முதல்வர் கனவு - இதுவரை கட்சி ஆரம்பித்த நடிகர்கள்

திரைத்துறையில் பயணிக்கும் ஹீரோக்கள், தனது ரசிகர் மன்றங்களை, மக்கள் இயக்கமாக மாற்றி பின்பு அதனை அரசியல் கட்சியாக மாற்றி வருவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். அதை பதிவும் செய்துள்ளார் தேர்தல் ஆணையத்தில் மேலும் தமிழக வெற்றி கழகம் என்று கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் இன்னும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில் தமிழ் சினிமாவில், இதுவரையில் நடிகர்களாக இருந்து அரசியல் கட்சி ஆரம்பித்தவர்களின் பட்டியல் பின்வருமாறு.  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன்  1989. ஆம் ஆண்டு, தமிழக முன்னேற்ற முன்னணி, எனவும் இயக்குநரும் நடிகருமான கே.பாக்கியராஜ் 1989ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம், எனவும்  டி.ராஜேந்தர் 1991ஆம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம், எனவும் நடிகர் விஜயகாந்த் 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம், எனவும் நடிகர் சரத்குமார் 2007ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, எனவும் நடிகர் கார்த்தி 2009 ஆம் ஆண்டு நாடாளும் மக்கள் கட்சி, எனவும் நடிகர் கருணாஸ் 2016 ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை, எனவும்  நடிகர் கமல்ஹாசன் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம், எனவும் மன்சூர் அலிகான் 2021ஆம் ஆண்டு இந்திய ஜனநாய புலிகள் எனவும் துவங்கியவை அதன்பின் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளாகும். 

இந்தப் பட்டியலில்  அனைவரும் முதல்வர் கனவை நோக்கியே ஆரம்பித்தனர். அதில் எம்.ஜி.ஆர் மட்டும் முதல்வர் கனவை அடைந்துள்ளார். அதன் பிறகு வந்த விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக முன்னேறினார். இதைத் தவிர்த்து பலரும் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே உயர்ந்தனர். சிலருக்கு அந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கின்றனர். இந்தச் சூழலில் கட்சி ஆரம்பித்துள்ள விஜய், எந்தளவிற்கு முன்னேறுவார் என்பது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.       நடிகர் விஜய்க்கு ஜாதகப்படி தற்போது கோச்சாரப்படி அஷ்டமத்து சனி காலத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்க மாட்டார்கள் ஆனால் நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்து விட்டார். 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் களமிறங்கப்போகும் விஜய்யின் ஜாதகத்தில் கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். அவரது ராசியில் சந்திரன் உடன் செவ்வாய் அமர்ந்து. செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலும் ஆட்சி பெற்ற சந்திரன் உடன் அமர்ந்திருப்பதால் நீச பங்க ராஜயோக அமைப்புள்ளது. எனவே தான் தைப்பூச நட்சத்திர  நாளில் தனது கட்சியின் பெயரை முடிவு செய்திருக்கிறார். நீச பங்க ராஜ யோக அமைப்பை பெற்றதால் திடீர் அரசாளும் யோகம் தேடி வரும்.ராஜ கிரகங்களான சூரியன், சனி சேர்ந்திருப்பது அரசு பதவியை தேடித்தரும். விஜய் ஜாதகத்தில் கன்னி லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் சூரியன், சனி ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்திருக்கின்றனர். ரிஷப ராசியில் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் கேது இணைந்திருப்பதும் யோகமான அமைப்பு. கலைத்துறையில் பிரபலமான நடிகராக வருவதற்கு இதுவே காரணமானது.  அவரது ராசி லக்னப்படி கும்ப ராசியில் சனி கோச்சாரத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். அஷ்டமத்து சனி காலத்தில் கட்சி பெயரை அறிவித்தாலும் விஜய் முழுமையான அரசியல்வாதியாக மாற இன்னும் இரண்டாண்டுகள் ஆகும். அதை மனதில் வைத்துதான் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறியுள்ளார்.

பேச்சில் வசீகரம்: அரசியல்வாதிகள் என்றாலே நன்றாக வேண்டும். நடிகர் விஜய் தற்போது நிறைய பேச ஆரம்பித்திருக்கிறார். மாணவர்களிடம் அரசியல் தலைவர்கள் பற்றி பேசினார். எம்ஜிஆர் பற்றி பேசி அதிமுக தொண்டர்களை தனது பக்கம் ஈர்த்து வருகிறார். இனி விஜய் பேசும் வார்த்தைகள் பலருக்கும் உதாரணமாக இருக்கும். விஜய் பேசும் வார்த்தைகளை கேட்கவே பலரும் விரும்புவார்கள் காரணம் அவரது பேச்சில் வசீகரத்தன்மை அதிகரிக்கும்.

விஜய் ஜாதகத்தில் 10ஆம் வீட்டில் சனியுடன் புதன் சேர்ந்திருப்பதால் நகைச்சுவையாக பேசுவார். லியோ வெற்றி விழாவில் பேசியபோது 2026 ஆம் ஆண்டு என்று கேட்டதற்கு கூட முதலில் நகைக்சுவையாக பேசி விட்டு கப்பு முக்கியம் பிகிலு என்று சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவர் சொன்னது போலவே 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப்போவதை கட்சியின் தலைவராக உறுதிபடுத்தி விட்டார். நடிகர் விஜய் ஜாதகத்தில் சந்திரன் கடக ராசியில் செவ்வாய் நீசம் பெற்றிருந்தாலும் நீச பங்க ராஜயோகம். இவருக்கு பெண்களின் ஆசி தாய்மார்களின் ஆசி நிச்சயம் கிடைக்கலாம். எம்ஜிஆர் போல இவரை சுற்றி எப்போதும் ஒரு கூட்டமிருக்கும். சனி பகவான் சுப வலிமையுடன் இருந்தால் தொண்டர்களின் ஆசி கிடைக்கும்.ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சனி நல்ல வலிமையோடு இருப்பது அவசியம். சனி பலமாக இருப்பதால் ஜன வசியம் இருக்கும். விஜய் ஜாதகப்படி 2014 ஆம் ஆண்டு முதல் சுக்கிர திசை நடைபெறுகிறது. இப்போது சுக்கிர திசை ராகு புத்தி நடந்து கொண்டிருக்கிறது. தலைவா படத்தின் போது நிறைய நெருக்கடியை சந்தித்தார் விஜய். அரசியல் ரீதியான பிரச்சினைகளை சந்தித்தார். அவரது ராசி லக்னப்படி கும்ப ராசியில் சனி கோச்சாரத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். அஷ்டமத்து சனி காலத்தில் கட்சி பெயரை அறிவித்தாலும்.

 சுக்கிரன் உடன் தடைகளை ஏற்படுத்தும் கேது இருக்கிறார். சுக்கிரன் வண்டி வாகனத்திற்கு ஆடம்பர வாழ்க்கைக்கு அதிபதி. நடிகர் விஜய் வாங்கிய கார் மூலம் வழக்கு வந்தது. இவருடைய பல திரைப்படங்கள் சர்ச்சைகளை சந்தித்துதான் வெற்றி கிடைத்துள்ளது. 2026ஆம் ஆண்டு இவர் அரசியலில் அடி எடுத்து வைத்தாலும் தனது இருப்பை தக்க வைக்க முடியும்.

தற்போது கடகராசிக்கு தொழில் குருவாக பயணம் செய்கிறார். 2026ஆம் ஆண்டு சனியின் பயணம் பாக்ய சனியாக 9ஆம் வீட்டில் இருக்கும். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நேரத்திர் கடக ராசியில் ஜென்ம குருவாக பயணம் செய்வார் குரு பகவான். விஜய்க்கு தற்போது 49 வயதாகிறது. 2026ஆம் ஆண்டு அதாவது 52வது வயதில் இருந்து முழு அரசியலில் ஈடுபடுத்திக்கொள்வார். 2031ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்று கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.

 சினிமா நடிகர்களாக இருந்து அரசியலில் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலர் தான். எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் தவிர யாராலும் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என பழமொழி சொல்வார்கள். அரசியல் தலைவராகவோ, மக்களின் ஆசியுடன் முதல்வராகவே வருவதற்கோ ஒரு யோகம் வேண்டும். நடிகர் விஜய் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் அவரை முதல்வர் நாற்காலியில் அமர வைக்குமா என்று கிரகங்களின் பெயர்ச்சியும் காலமும் பதில் சொல்லும்.நடிகர் விஜய் என்கிற ஜோசப் விஜய் அவர்களது அரசியல் நுழைவு குறித்து தனது முகநூல் பக்கத்தில்  எல் ஆர் ஜெகதீசன் எழுதியிருப்பதைப் படிக்க வேண்டியது என்பதை விட இந்தத் திராவிடக் கட்சிகளின் பண பலத்தையும் கள பலத்தையும் எதிர் கொள்வது எத்தனை சிரமமானது என்பதை நடிகர்  இரஜினிகாந்த் பேசியது அப்படியே நினைவில் வந்து செல்கிறது.

நடிகர் கமலகாசன் ஏன் சமரசமாக இரண்டு இடங்களில் போட்டி என்று மாற்றிக் கொள்கிறார் என்பதும், இரஜினி கிஞ்சித்தும் தனது பணத்தை விரயமாக்காமல் தப்பித்தார் என பின்புலமும் அறிய முடிகின்றது.   இளமை, மார்க்கெட் உச்சத்தில்  இருக்கும் போது அரசியலுக்கு வர ஒரு துணிவு வேண்டும்.

25 வருடம் முடிவெடுக்க முடியாத ரஜினி, 65 வயதில் அரசியலுக்கு வந்த கமலை ஒப்பிட்டு பார்த்தால் இப்போது இளைய தலைமுறையின் தளபதி என அழைக்கப்படும் விஜயின் முயற்ச்சிக்கு வாழ்த்துகள். 

தமிழக வெற்றிக் கழகம் என்பதை ஆங்கிலத்தில் எழுதினால் TVK என்று வரும்.. பன்ருட்டி வேல்முருகன் கட்சியும் TVK - தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று வைத்துள்ளார். 

ஆக மக்களுடன் களத்தில் நில்லுங்கள். உடன் இருப்பவர்கள் கைப்பாவையாக இருக்காதீர்கள்.

தற்போதய தேர்தல் ஆணையத்தின் பதிவில் அங்கரிக்கப்படாத பிரந்திய அரசியல் கட்சியாக விஜய் கட்சியும் அதில் பொருப்பில் விஜயும், புஜ்ஸி ஆனந்த் மட்டுமே உள்ள நிலை இனி மேல் வரும் நிரவாகிகள் தான் எதிர்காலம் ஊழல்வாதிகள் இல்லாத நபரா இல்லை இதுவும் அப்படித்தானா என அறியலாம்புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் பிரமுகருமான மறைந்த அஷ்ரப்பின் உதவியாளராக பணியாற்றிய என் ஆன்ந்த் என்ற  புஸ்ஸி ஆனந்த்... அப்போதிருந்தே விஜய்யின் தீவிர ரசிகராவர்.

புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்ற கௌரவத் தலைவராக இருந்தவர்.. அதன்பின் தலைவரானார்.2006-ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் புஸ்சி  தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராவார். அதனால் தான் இவர் புஸ்ஸி ஆனந்த் எனப்பட்டார். விஜய்க்கு நெருக்கமானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் மாறியதையடுத்து, புஸ்ஸி ஆனந்திற்கு, அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் பதவி அதன்பிறகு முழுமையாக விஜய் மக்கள் இயக்க பணியை தற்போது வரை கவனித்து வருகிறார். அதனால் தற்போது கட்சியில் பொதுச் செயலாளர்,   ஜோசப் விஜய் சந்திரசேகர் நிறுவனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த