முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டில் 1,64,17,983.வாக்காளர்களைப் பட்டியலில் காணவில்லையா ? உண்மை நிலை!

தமிழ்நாட்டில் 1,64,17,983 ஒரு கோடியே அறுபத்து நான்கு   இலட்சத்து பதினேழாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து மூன்று வாக்காளர்களைப் பட்டியலில்  காணவில்லை


அவர்கள் வாக்களிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டில் தேர்தல் ஆணையம் தக்க முடிவு செய்ய வேண்டும் .            1 ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக வரும் தகவல் உண்மை தானா ?  மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் 

ஜனவரி மாதம் இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்னர் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளக் கோரி அணைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் பட்டியல் வழங்குகிறது அதில் தேர்தல் ஆணையத்தால் பொதுமக்களுக்கும் தொடர் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது, .



ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதன் பிறகு ஒவ்வொரு மாதமும் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கல் முகவரி மாற்றம் ஆகியவைகள் சரி செய்ய பல இடங்களில் முகாம்களை தேர்தல் ஆணையம் சார்பில் நடத்துகிறது.

இவை அல்லாத இறுதி வாக்காளர் பட்டியலை 20 நாட்களுக்கு முன்னரே அரசியல் கட்சிகளுக்கு 3 பிரதிகள் வீதம் இலவசமாக வழங்குகிறது. 

அரசியல் கட்சிகளுக்கு வாக்குச்சாவடி அளலில் வேலை செய்ய ஆட்கள்  இருந்திருந்தால் அவர்கள் அதை வீடு வீடாகச் சென்று சரி பார்த்திருப்பார்கள்.இல்லாதவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. மேலும் தேர்தல் ஆணையத்திற்கு தனிப்பட்ட முறையில் ஊழியர்கள் இல்லை, வருவாய் துறை பணியாளர்கள் தான் இந்த நிலையில் 

தனி நபர்கள் பெயர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள் வருந்துவதில் நியாயமுள்ளது. அது கூட நேரமும் வாய்ப்பும் தந்தபோது அவர்களால் சரி பார்க்க முடியாத கவனக்குறைவு தான் காரணம் எனலாம்.  இருப்பினும் அவர்கள் சட்ட வழிமுறைகள் படி அடையாள அட்டை உள்ள பெயர் நீக்கம்மானவர்கறள் படிவம் 17 முறையில் வாக்களிக்க முடியும்.

இறந்து போன ஒரு தனி நபர் பெயரை நீக்குவதற்கே அலுவலகத்தில் சிலர் போரட வேண்டியிருக்கிறது.           மொத்தமாக பெயர் நீக்கமெல்லாம் சாத்தியமே இல்லாதது என அரசு தரப்பிலும் மற்றும் மாநில ஆளும் தரப்பின் கருத்தாக இருந்த போதும் 

நீக்கப்பட்ட நபர்கள் கருத்து வேறுபடுகிறது,

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இப்படிப் புகார் சொல்வதால் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பதவி விலகுவது தான் சரி.



எளிய முறையில் வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள எதுவாக, தேசிய வாக்காளர் சேவை தளம் மூலமாகவும்,1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும் பிரத்யேக வசதி ஏற்படுத்தபட்டுள்ளதென கோயமுத்தூர் மக்களவைத் தொகுதியில் சுமார் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய புகாருக்கு கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.   அடையாள அட்டை வைத்திருந்து பெயர் நீக்கம் செய்திருந்தால்    FORM -17. List of Challenged Votes. [See Rule 33 (1) (c)]. Election சட்டத்தின் படி யாரும் வாக்குகள் பதிவு செய்ய முடியும் அதை அந்த அந்தக் கட்சியின் பூத் ஏஜன்டுகள் செய்ய வேண்டும். அது அவர்கள் அறியாமல் இருப்பது தான் இந்த பிரச்சினைகளுக்கு முழுமையான காரணமாக இருக்கிறது. அது குறித்து அவர்களுக்கு பயிற்சி தரவில்லை ஆனால் இது அல்லாத பிற மாநிலங்களில் இந்தியாவில்       சீனா பெயரை மாற்றி அறிவித்த அருணாச்சலப்பிரதேசத்தின் 11  குடியிருப்புப் பகுதிகளில் நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் நடைபெறவில்லை என்பது இங்கு கவணிக்கத் தக்கது. மேலும் 50  சதவீதம் சென்னை மக்கள் வாக்களிக்கவில்லை. அதற்காக காரணமாக தெரிவது . அலட்சியம். 

வாக்காளர்கள் மூ‌ன்று நாட்கள் விடுமுறையைக் கொண்டாட கடமை மறந்தனர்.

பல்லாயிரக்கணக்கான மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி மோசடி நடந்து செய்துவரும் தங்கள் கடமையை மறந்தனர் அரசு பணியாளர்கள்.  பாரீர்! பாரீர்! என் பாரதிய ஜனதா கட்சியினர் கூறினாலும் 

மோசமான அரசின் பிடியில் சிக்கித் தவிக்கும் கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பை அலட்சியப்படுத்தி, ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றிய நிகழ்வான அவலத்தைப் பட்டியல் போடலாம்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கிராம மக்கள் தேர்தலை புறங்கணித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சித்தூரணியில் சாலை வசதி இல்லாதது, இளையான்குடி நகர் பகுதி கழிவுநீர் வருவது உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எகனாபுரம், நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தல் வாக்குப்பதிவை புறக்கணித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நல்லூர் சாலையில் டிரெண்ட் சிட்டி என்ற தனியார்     லேயவுட்பகுதி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் அந்தப் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே அம்மக்கள் 'நோ ரோட், நோ வோட்' என்ற வாசகத்துடன் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தனி ஊராட்சிக் கோரிக்கை தொடர்பாக எஸ். எரிப்பாளையம் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் கடவர்ஹள்ளி கிராமம், கருக்கனஹள்ளி ஆகிய கிராமங்களில் வீட்டுமனைப் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடியும் நடவடிக்கை இல்லாததால் தேர்தலைப் புறக்கணித்தனர்.

அன்னூர் அருகே கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராமங்கலில் குடிநீர் இல்லாததால் தேர்தலைப் புறக்கணித்தனர்.

முத்துப்பேட்டையை அடுத்த முனகாடு கிராமத்தில் சாலையை சீரமைக்காததை கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்யாததை கண்டித்தும் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கின்றனர் அக்கிராம மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம், குமாரராஜா பேட்டையில் உள்ள பொதுமக்கள் விளைநிலங்களை கையகப்படுத்தியதை கண்டித்து தேர்தலைப் புறக்கணிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்ன அயன்குளப் பகுதி மக்கள் கறுப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்புச் செய்தனர்.

மேற்கண்டவை சில'மாதிரிகள்  தான். இன்னும் எண்ணற்ற பகுதிகளில் தமிழ்நாட்டில் கிராம மக்கள் அரசின்  அலட்சிய நிர்வாகத்தினால், சிலரது அதிகாரத் துஷ்பிரயோகத்தினால், தேர்தலைப் புறக்கணிக்கும்  நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்து சென்ற மூன்று வருடங்களில் தி மு க வின் ஆட்சியில் தமிழகமெங்கும் மக்கள் படும் துயரங்களின் சிறு துளிதான் இது என்றால் மிகையாகாது.

மக்களை பற்றி கவலைப்படாத அரசு, சட்ட மன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசு நிர்வாகம், ஆட்சியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என யாருமே மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முன்வராத நிலையில், தங்களின் ஜனநாயகக் கடமையை, உரிமையை மக்கள் நிறைவேற்ற மறுப்பது இந்த  அரசின் படு தோல்வியை பறைசாற்றுகிறது. மக்களிடம் வாக்குகளைப் பெற்று பெரும் ஊழல் செய்து செல்வச்செழிப்பில் மிதக்கும் அரசியல்வாதிகள், மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தூக்கி எறிவது ஜனநாயக நாட்டில் மக்கள் விரோதம்.

என்று தணியும் மக்களின் தாகம்? என்று முடியும் தமிழனின் ஏக்கம்?நடந்து முடிந்த தேர்தல் முடிவில் உணர்ந்து கொண்ட ஒரு விஷயம்.

தாமரை மலர்கிறதோ இல்லையோ? ஆனால் ஆச்சர்யப்படத்தக்க அளவில் அது மொட்டு விடத் தொடங்கியுள்ளது . நரேந்திர மோடி - அண்ணாமலை என்கிற பெயர்கள் கிராமங்களில் வயதானவர்கள் முதற் கொண்டு உச்சரிக்கிறார்கள். அந்த அளவுக்கு களப்பணி. அதற்கு  முக்கியக் காரணம் அவர்கள் பதவியில் இருப்பதும், பணபலமும். இரண்டாவது காரணம்  எதிர் தரப்பினரின் அராஜகம் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம். எங்கும் எதிலும் ஊழல் மூன்றாவது காரணம் அதிமுக வில் ஏற்பட்டுள்ள பல பிளவுகள் மற்றும் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாதது. ஜெ.ஜெயலலிதா என்ற அவர்களின் அம்மா என்ற ஒற்றைச் சொல்லுக்கு கட்டுப்பட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் இப்போது கிருஸ்தவ மத போதகர் ஏசுநாதர் போல ஒரு மேய்ப்பான் இல்லாத ஆடுகள் போல திசை தெரியாமல் தவிக்கிறார்கள். மாவட்டச் செயலாளர் சொல்லுக்குக் கூட கீழுள்ள நிர்வாகிகள் செவிசாய்ப்பதில்லை. தேர்தல் பணிகளில் ஒற்றுமை இல்லை என்பது கண்கூடாக நாம் பார்க்கத் தெரிகிறது. இந்தத் தேர்தல் முடிவு தங்கள் கட்சியை கரை சேர்க்கக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு. இதன் மூலம் சில நல்ல முடிவுகளை எடுத்தால் 2026 ஆம் ஆண்டில் புத்துயிர் பெறலாம். இல்லை என்றல் சிரமம் தான்.

2024 ஆம் ஆண்டில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று  மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமையுமேயானால் 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பல இடங்களில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முயன்ற போதும் தடுக்க முடியாது. 

சில பெண்கள் 1000 உதவித்தொகை, குறைந்த இலவசப் பேருந்து பயணம் எல்லாவற்றையும் தாண்டி திமுக மற்றும் அதிமுக இரு தரப்பிலிருந்தும் பெருமளவிலான  தொண்டர்களை ஈர்த்துள்ளது பாரதிய ஜனதா கட்சி என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.. இதுவே பப்ளிக் ஜஸ்டிஸ் கணிப்பு இதில் பொதுவான நீதி ஜனநாயகக் கடமை வாக்குரிமை ஆகவஆள்காட்டிவிரலை சரியாகப் பயன்படுத்துவோம் இல்லையென்றால்...கட்டைவிரலையும் நாம் இழந்துவிடக் கூடும் என்பதை மக்கள் அறியவில்லை என்பதே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த