முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குவைத் நாட்டில் ஏற்பட்ட கோரமான தீ விபத்தில் 21 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது

குவைத் நாட்டில் ஏற்பட்ட கோரமான தீ விபத்தில் 40 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியானதாகத் தகவல், உயிரிழந்தவர்களின் முதற்கட்ட பட்டியலை குவைத் அரசு வெளியிட்டது.


குவைத் நாட்டில் மங்காப்  பகுதியில் பணியாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கரத் தீ விபத்தின் காரணமாக 53 நபர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியானது.        தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து பணிக்குச் சென்று சேர்ந்தவர்கள் எனும் தகவலும் வந்தது.               

     தீ விபத்திலிருந்து காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலில், மத்திய அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் குவைத் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறார். இறந்த நபர்கள் உடல்கள் அடையாளம் கண்டு மீட்புப் பணிக்கு தனி விமானம் செல்ல உள்ள நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

குவைத்தில் வசித்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்களின் உயிரைப் பறித்த குவைத் தீ விபத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கை குவைத்துக்குச் சென்று அவர்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஒருங்கிணைக்க அறிவுறுத்தி குவைத் நாட்டில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் முதற்கட்ட பட்டியலை குவைத் அரசு வெளியிட்டுள்ளது.குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக 53 நபர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வந்துள்ளது. தீ விபத்திலிருந்து காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் குவைத் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் குவைத் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறார்.

குவைத்தில் வசித்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்களின் உயிரைப் பறித்த குவைத் தீ விபத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கை குவைத்துக்குச் சென்று அவர்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஒருங்கிணைக்க அறிவுறுத்தினார்.     கோர தீ விபத்தில் உயிரிழந்த 21 இந்தியர்களின் பெயர்களை குவைத் அரசு வெளியிட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறந்து போன நிலையில் தீ விபத்தில் இறந்த 21 பேரின் பெயர் விபரங்களை குவைத் அரசு வெளியிட்டது. குவைத் அரசால் வெளியிடப்பட்ட பட்டியலில் அடையாளம் காணப்பட்ட இறந்தவர்களின் பெயர்கள் வருமாறு:

1. ஷிபு வர்கீஸ்

2. தாமஸ் ஜோசப்

3. பிரவீன் மாதவ் சிங்

4. ஷமீர்

5. லூகோஸ் வடக்கோட் உன்னுண்ணி

6. புனாஃப் ரிச்சர்ட் ராய் ஆனந்தா

7. கேலு பொன்மலேரி

8. ஸ்டீபன் ஆபிரகாம் சாபு

9. அனில் கிரி

10. முஹம்மது ஷெரீப்

11. சஜு வர்கீஸ்

12. துவரிகேஷ் பட்நாயக்

13. முரளீதரன் பி வி

14.. விஸ்வாஸ் கிருஷ்ணன்

15. அருண் பாபு

16. சாஜன் ஜார்ஜ்

17. ரஜ்னித் குண்டடுக்கம்

18. ரெய்மண்ட் மக்பாண்டே கஹோல்

19. இயேசு ஒலிவரோஸ் லோப்ஸ்

20 ஆகாஷ் சசிதரன் நாயர்

21. டெனி பேபி கருணாகரன்  , கோரத் தீ விபத்தில் உயிரிழந்த 21 இந்தியர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். .

குவைத்திலுள்ள இந்தியத் தூதரகம் செய்துள்ள பதிவை எக்ஸ் தளத்தில்  பகிர்ந்து  பிரதமர் கூறியிருப்பதாவது:

“குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அன்பானவர்களை இழந்துள்ள அனைவருக்கும் எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.” மேலும் தமிழ்நாட்டின் சார்பில்உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

 தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்

காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.” எனவும் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் எண்களை இந்தியாவிற்குள்: +91 1800 309 3793, வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 தொடர்பு கொள்ளவும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை +965-65505246 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...