நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு முன் அணைத்து பட கால்சீட் முடிகத் திட்டம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய மைய்யம் கமல்ஹாசன் “சிறிய இடைவெளி எடுத்துக் கொள்கிறேன். முந்தைய திரைப்படங்களின் கமிட்மென்ட் காரணமாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியில் அடுத்து வரும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை” என பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பயணத்திலிருந்து நான் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொள்கிறேன் என்ற தகவலை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறேன். முந்தைய திரைப்படங்களின் கமிட்மென்ட் காரணமாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியில் அடுத்து வரும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு என்னுடைய மனபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக, இந்நிகழ்ச்சியின் வெற்றிக்காக பாடுபட்ட விஜய் டிவி குழுவினருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீசன் மற்றொரு வெற்றி சீசனாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இருக்கும் பணிகளை முடித்து திமுக கூட்டணியில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறுவதற்கு தயாராகவே தற்போது விலகல் என்பதை நாம் அறிவோம்.
கருத்துகள்