சென்னை உயர் நீதிமன்றத்தின் மூலம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் நான்கு வார காலத்துக்கு சென்னை
நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஓய்வுபெற்ற ஐஜி-யான பொன்.மாணிக்கவேல் கையெழுத்திட்டார். திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோவிலில் 2005-ஆம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் களவு போனதில் 6 சிலைகள் விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டி கிராமத்தில் 2008-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட நிலையில் அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக பணியிலிருந்த காதர் பாஷா அதைக் கைப்பறிய நிலையில், இந்தச் சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், சர்வதேச சிலை கடத்தல் கும்பலுக்கு காதர் பாஷா விற்பனை செய்துவிட்டதாக 2017-ஆம் ஆண்டு, அப்போது சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி-யாக பணியிலிருந்த பொன்.மாணிக்கவேல் வழக்குப்பதிவு செய்து காதர் பாஷாவை கைது செய்து சிறையிலடைத்தார். அப்போது காதர் பாஷா திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார்.
இந்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்த காதர் பாஷா, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொன்.மாணிக்கவேல், சிலைக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னைப் பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கில் கைது செய்திருப்பதாகவும், இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்த காரணத்தால் இதை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டதையடுத்து, ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி பாலவாக்கத்திலுள்ள பொன்.மாணிக்கவேல் வீட்டில் டெல்லியிலிருந்து வழக்குப் பதிவு செய்து பின்னர் வந்த சிபிஐ உயர் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்ட நிலையில், சிபிஐ அலுவலர்கள் தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென
சென்னை உயர் நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்ததையடுத்து, ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி பொன்.மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது, நான்கு வார காலத்துக்கு சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டுமென உத்தரவிட்டதையடுத்து பொன்.மாணிக்கவேல் திங்கள்கிழமை காலை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தில் நிபந்தனை காரணமாக ஆஜராகிக் கைழுத்திட்டுச் சென்றார்.
கருத்துகள்