முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரசாத லட்டை வைத்து தொடர் பிரச்சார அரசியல் செய்யும் துணை முதல்வரும் நடிகர்களும்

திருப்பதி பிரஷாத லட்டில் பயன்படுத்தப்பட்ட  நெய்யில் கலப்படம் என்றால் அதை விநியோகம் செய்தவர்கள் மற்றும் பயன்படுத்தி தயாரித்தவர்கள்,  சம்பந்தப்பட்ட குற்றவாளியையும், அதற்கு சென்டர் மூலம் கமிஷன் பெற்று துணை போனவர்களையும் கண்டறிந்து தண்டிக்க வேண்டிய ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் அதிகாரத்திலிருப்பவர் நடிகர் பவன் கல்யாண்.

ஆனால், அவரோ அது குறித்து உருகி, உருகி பேசிக் கொண்டு உண்ணாநோன்பு இருந்து மற்றவர்களும் அவ்வாறு பேச வேண்டும், கதற வேண்டும் என எதிர்பார்க்கிறார். ’’இதை உணர்ச்சிபூர்வமாக அணுகுவதை விட்டு அறிவுபூர்வமாக அணுகுங்கள்’’ என்று சொன்ன நடிகர் பிரகாஷ்ராஜ் மீது கருத்து மோதல் செய்து பாய்கிறார். ’’இதில் கருத்துச் சொல்ல விரும்பவில்லை’’ எனற நடிகர் சிவகுமார் மகனான நடிகர் கார்த்தி மீது பாய்கிறார். அவரது படம் ஆந்திரப் பிரதேசத்தில் வெளியாக வேண்டிய வியாபார நிமித்தம் மன்னிப்புக் கேட்கும் நிலை 


திருமலை திருப்பதி சம்பவம் போன்ற சம்பவம் வேறு மத ஸ்தலங்களில்  நடந்தால் இப்படிப் பேசுவார்களா? நாட்டில் என்ன நடந்தாலும் பேச ஹிந்துக்களுக்கு உரிமை இல்லையா? ஹிந்து தெய்வங்களை நையாண்டி செய்வதையும், விதவிதமாக கேலி பேசுவதையும் நாம் வேடிக்கை பார்க்க வேண்டுமா?. மனம் புண்பட்டாலும் வாயை மூடிக்கொண்டு இருப்பது சரியா…? என சென்ஷேனல் ஆக்கி, மத வெறுப்பை பவன் கல்யாண் உமிழ்கிறார். 


ஒரு துணை முதல்வர் மக்களுக்கான பல பிரச்சினைகள் தன் முன் இருப்பதை பொருட்படுத்தாமல் திருப்பதி திருமலை கோவில் வந்து 11 நாட்கள் பரிகார பூஜையில் கலந்து கொண்டு உண்ணாவிரதமும் இருக்கிறார் என்றால், இவர் ஏழுமையானின் உண்மையான தீவிர பக்தர் என மக்களை நம்ப வைத்து அரசியல் அறுவடை செய்ய நினைக்கிறார் என்பதைத் தவிர்த்து வேறென்ன இருக்கிறது, என்பதே மக்கள் மத்தியில் நடக்கும் விவாதம்.



ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவே இந்த நேரம் அரண்டு போயிருப்பார். என்னடா, நாம் எட்டடி பாய்ந்தால் இவர் 16 அடி பாய்கிறாரே என! இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்த காரணமாக அவஸ்தைப் படுங்கள் நாயுடு காரு என்பது தவிர அரசியல் அறிந்தோர் கூறும் மொழி வேறில்லை.  நடிகர் கார்த்தி மன்னிப்பு. பவன் கல்யாண் பதிலடினு பலரும் பார்த்திருப்பீர்கள் 

ஆனா உண்மையான விஷயம் என்னவென்றால்...

ஆந்திரப் பிரதேசத்தில் நேற்று ஒரு படம் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.

அப்போ சில போட்டோக்கள் பதிவிட்டு அதைப் பற்றி நடிகர் கார்த்திக்கிடம் கேள்வி கேட்டதற்கு அவர் பதில் சொல்லிவிட்டு இருந்த நிலையில் 

அவர் நடிச்ச "சிறுத்தை" திரைப்படத்தில்  வரும் "கண்ணா லட்டு தின்ன ஆசையா.? ரெண்டு லட்டு தின்ன ஆசையா..??"னு ஒரு நகைச்சுவை அதை Template போட்டோவில் போட்ட

அந்தத் தொகுப்பாளர் லட்டு வேணுமா. சாப்பிடுறீங்களானு சிரிச்சிகிடே கேட்டது தான் ஸ்பெஷல் 

அதுக்கு நடிகர் கார்த்தி "எதுவும் பேச மாட்டேன்.. இது ஒரு Sensitive விஷயம் இதைப் பத்தி இப்ப இங்க பேச கூடாது"னு தெலுங்கு மொழியிலேயே சொல்லிடாரு.

இதில் கார்த்தி சிரிச்சிக்கிட்டே சொன்னதுக்கு தான் பிரச்சனைனு கார்த்தியே நினச்சிகிடாப்ல.

பவன் கல்யாண் சொன்னதும் நேரடியா கார்த்திய இல்ல.



லட்டுகள வச்சி சமூக ஊடகங்கள்ல கேலி கிண்டல் பன்றாங்க.

சமீபத்திய ஒரு பட பாடல் வெளியீட்டு விழாவில கூட அதை கேலி பண்ற மாதிரி பேசுறாங்க.. லட்டுங்கிறது மக்களோட உணர்வு.. அது கேலி கிண்டல் பண்ற விஷயம் இல்லைனு சொன்னார்.

அதுக்கு கார்த்தி தன்னைத் தானே கூறுகின்றனர் என மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் குண்டூர் சரக ஐ.ஜி. சர்வ ஷரஸ்தா திரிபாதி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஆந்திரப் பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனம் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு மத்திய அரசும், ஆந்திரப் பிரதேச அரசிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளது. இது தவிர நேற்று  திருப்பதி கோவிலில் சிறப்பு பரிஹார பூஜை, மற்றும் ஹோமம் நடத்தப்பட்டது. லட்டு சர்ச்சை தொடங்கியதில் இருந்தே நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.


மன்னிப்பு கேட்டார் நடிகர் கார்த்தி! திருப்பதி லட்டு விவகாரங்களுக்கு துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் அவரது எக்ஸ் பக்கத்தில், ‛‛திருப்பதி பாலாஜி பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு (மீன் எண்ணெய், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி)கண்டறியப்பட்டு இருப்பதை நினைத்து மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆகியுள்ளேன். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஜனாதன தர்மத்தை எந்த வடிவதத்திலும் இழிவுப்படுத்தக்கூடாது. இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசால் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் இதுதொடர்பாக பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.


தற்போது நடந்த இந்த விவகாரம் என்பது கோவில்கள் மற்றும் பிற தர்மத்தின் நடைமுறையையும், நம்பிக்கையையும் இழிவுப்படுத்துவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் ஆந்திரப் பிரதேச மாநில அரசு உறுதியாக உள்ளது. கோவில்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய தேசிய அளவில் ‛ஜனாதன தர்ம ரக்சனா வாரியம்' அமைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது'' என கூறியுள்ளார்.

இதற்கு பதிலாக நடிகர் பிரகாஷ் ராஜ், "அன்புள்ள பவன் கல்யாண், இந்த சம்பவம் நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில் நடந்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு நீங்கள் ஏன் தேவையற்ற அச்சத்தைப் பரப்புகிறீர்கள்? இந்தப் பிரச்னையை தேசிய அளவில் ஊதிப் பெரிதாக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே நாட்டில் போதுமான வகுப்புவாதப் பதற்றங்கள் உள்ளன. (மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நன்றி)'' என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலாக விஜயவாடாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நடிகர் பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக பவன் கல்யாண் கூறியதாவது: லட்டு விவகாரம் பற்றி நான் ஏன் பேசக்கூடாது? என் வீடு மீது தாக்குதல் நடத்தப்படும் போது நான் பேச வேண்டும். பிரகாஷ் ராஜ் நீங்கள் பாடம் கற்க வேண்டும். நான் உங்களை மதிக்கிறேன்.இது பிரகாஷ் ராஜ்க்கு மட்டுமில்லை மதசார்பின்மை என்ற பெயரில் குறிப்பிட்ட வழியில் செல்லும் ஒவ்வொருக்கும் தான். நான் மீண்டும் சொல்கிறேன். நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களின் உணர்வுகளை கேலி செய்ய வேண்டாம். இந்த சம்பவம் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாத. இது ஆழமான வலியை தந்துள்ளது. சனாதன தர்மத்தை பற்றி பேசுவதற்கு முன்பு 100 முறை யோசித்து பேசுங்கள்'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருப்பதி லட்டு விவகாரத்தில் எங்கே தவறு நடந்துள்ளது என கூர்ந்து கவனிக்க வேண்டும் முதலில் லட்டு உற்பத்தி தரம் நல்ல நெய் தேவை நல்ல நெய் என்பது பசுவின் நெய் அது ஒரு கிலோ 1250 ரூபாய் அதை யார் குறைந்த விலை புள்ளி டென்டர் கொட்டேஷன் கொடுத்தது என் பார்த்து ஆய்வு செய்ததில் துவங்கியது இந்த மோசடி 1250 ரூபாய் நெய் 340 ரூபாய் தரத்தில் கிடைக்கும் போது அதன் அடிப்படையில் நடந்த தவறு என்பது தெரிகிறது   


"ஒரு கிலோ 319 ரூபாய்.. மொத்தம் 10 லட்சம் கிலோ விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாகக் கூறப்படும் நெய்".. 4 டேங்கர்களில் அனுப்பிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருமலா திருப்பதி தேவஸ்தானம் காவல்துறையில் புகார்..!  மேலும் ஆந்திரப் பிரதேசத்தின் தற்போது முதல்வர் பால் நெய் உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார் இதில் போட்டி நடந்ததா என்பதை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் நிரூபிக்க வேண்டும்.அதில் நிச்சயம் கடந்த காலத்தில் நடந்த டென்டர் வழங்கிய நிலையில் துவக்குகிறது ஊழல் இதில் அரசியல் காரணங்களுக்காக துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் செய்யும் கோமாளி அரசியல் விசாரணை முடிவில் சாயம் வெளுத்துப் போகும் என்பது தான் தற்போது உள்ள நிலை.   இதற்கிடையில் அமுல் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பியதாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 336(4), 196(1) A மற்றும் தகவல் தொழில்நுட்ப(IT) சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு