முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிலமோசடி துணை போன காவல் ஆய்வாளர் வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் சிபிஐ சோதனை

சென்னையில் நிலமோசடி செய்யும் திருட்டு அடாவடிக் குழுவினருடன் தொடர்பு வைத்துக் கொண்டு நில மோசடி அபகரிப்பு அக்கிரமப் பிரவேஷம் செய்ய முயன்றவர்களுக்குச், சாதகமாக


கூலிக்கு லஞ்சமாகப் பணம் பெற்றுக் கொண்டு செயல்பட்ட அரசு பணியை நேர்மையாகச் செய்யாத குற்றச்சாட்டில் சிக்கியுள்ள காவல்துறை ஆய்வாளர் ஆனந்த்பாபு வீடு உள்ளிட்ட அவருக்குச் சொந்தமான நான்கு இடங்களில், சி.பி.ஐ., உயர் அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள் சென்னை சோழிங்கநல்லுார்   பகுதியில் வசிக்கும் கார்த்திக். என்பவருக்கு, அதே பகுதியில், 18.25 சென்ட் நிலம் இருந்துள்ளது. அதை, அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், சரவணன், தேவன், சீனிவாசன் உள்ளிட்டோர், போலியான ஆவணங்கள் உற்பத்தி செய்து அபகரிக்க முயற்சி செய்துள்ளனர்.


அது குறித்து, ஆலந்துார் நீதிமன்றத்திலும், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு  காவல்துறையிலும் தற்போது வழக்கு விசாரணை நிலுவையில்  உள்ளது. பிரச்னைக்குரிய இடத்திற்கு பட்டா வழங்கக் கூடாது என அரசு சுற்றறிக்கை உள்ளதால், கார்த்திக், நீலாங்கரை சார்  பதிவாளர் அலுவலகம், சோழிங்கநல்லுார்  வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் கொடுத்துள்ளார்.


இந்த நிலையில்,  மே மாதம் 14 ஆம் தேதியில், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரச்னைக்குரிய அந்த இடத்திற்குச் சென்றுள்ளனர். அவர்களுடன், 20 உள்ளூர் கூலிப்படை ரௌடிகள் உடன் சென்றிருந்ததாகவும் தெரிகிறது. அவர்கள் சுற்றுச்சுவரை இடித்துள்ளனர். அவர்களுடன் கூட்டு சேர்ந்து, நீலாங்கரை காவல் ஆய்வாளாராக இருந்த ஆனந்த்பாபு, சினிமா வில்லன் போல செயல்பட்டு பத்து அரசு பணி செய்து வரும் காவலர்களுடன் சென்று பாதுகாப்பு அளித்தாகவும் தெரிகிறது.  நில அபகரிப்பை தடுக்க முயன்ற கார்த்திக் மற்றும் அவரது பெற்றோரை அவர் ஆபாசமாக வார்த்தைகளில் திட்டியதுடன், 'இந்த இடத்தை விட்டு ஓடிவிடுங்கள். பிரச்சனைகள் செய்தால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்வேன்' என, மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அது குறித்து, சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில், கார்த்திக் புகார் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். அதை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை ஆய்வாளர் ஆனந்த் பாபு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.



அதையடுத்து, காவல்துறை உதவி ஆணையர் தலைமையிலான சி.பி.ஐ., அதிகாரிகள், ஆனந்த்பாபு, கோபாலகிருஷ்ணன் உட்பட, ஆறு பேர் மீது வழக்கு பதிவும் செய்துள்ளனர். அதன் அடிப்படையில், சென்னை அண்ணா நகர் காவலர் குடியிருப்பில் உள்ள, ஆனந்த் பாபுவின் வீடு மற்றும் இந்த நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்த, பெசன்ட் நகரில் உள்ள ஒரு பெண் வங்கி அலுவலரின் வீடு உள்ளிட்ட, நான்கு இடங்களில் நேற்று தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபு தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில், சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். வழக்கை விசாரித்த நீதிபதி, நிலம் கார்த்திக்குச் சொந்தமானது என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் முகந்திரமும் இருப்பது தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டு லஞ்சப் பணத்திற்காக நிலத்தை அபகரிக்க காவல்துறையினர் உதவியுள்ளனர், அதற்கு அரசு பணியை பயன்படுத்தி நில உரிமையாளர்களை மிரட்டியுள்ளனர் என கண்டித்ததோடு, சிபிஐ இந்த வழக்கை விசாரித்து நான்கு மாத காலத்திற்குள் அணைத்து குற்றவாளிகள் மீது செய்த குற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட பின்னர் வழக்கு பதிவு செய்து சிபிஐ அண்ணாநகர் காவலர் குடியிருப்பில் உள்ள காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபு வீட்டில் காலை 7:30 மணி முதல் ஆறு பேர் கொண்ட சிபிஐ உயர் அலுவலர்கள் குழு அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அதே போல், இந்த வழக்கு தொடர்பாக  சென்னை அடையார் சாஸ்திரி நகர், பெசன்ட்நகர் அடுக்குமாடிக் குடியிருப்பில் பாரத ஸ்டேட் வங்கிப் பெண்  அலுவலர் ஹரிணி என்பவர் வீட்டில் சோதனை நடத்தி, அவரிடமும் முழு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் உள்ள வீடு மற்றும் வேளச்சேரி நேரு நகர் பகுதியில் உள்ள வீடு ஆகிய ஐந்து இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. ஐந்து மணி நேர சோதனை முடிவில் காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபு வீட்டில் இருந்து தங்கம்,வெள்ளி ஆபரணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நுங்கம்பாக்கத்திலுள்ள சிபிஐ அலுவலகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மதிப்பீடு செய்யும் பணி நடைபெறுகிறது என சிபிஐ உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.அவரது வீட்டில் நடைபெற்ற சோதனை முடிவில் அதிகமாக பணம் நகைகள் ஆவணங்கள் மற்றும் அவர் செய்த இதர மோசடிகள் குறித்து விபரங்கள் சிக்கியதாகத் தெரிகிறது விசாரணை முடிவில் மற்ற விபரங்கள் தெரியவரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...