அரசியல்வாதிகள் அமைச்சர்களாக இருக்கிறார்கள் அவர்கள் செய்யும் ஊழலுக்கு தலையாட்டிய படி
கையெழுத்துப் போட்டு துணை போகும் அரசு உயர் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது போடப்பட்ட FIR ஒரு எச்சரிக்கை மணி. நீங்கள் ஓய்வு பெற்ற பிறகும் கூட ஊழல் வழக்குகள் உங்களைத் தொடரும். தண்டனை பெற்றுச் சிறைக்குச் செல்லவும் வாய்ப்புண்டு. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களுக்கு முறைகேடாக டெண்டர் வழங்கப்பட்ட சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஊழல் புகாரில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை 2021 ஆம் ஆண்டில் FIR பதிவு செய்தது. அதன் மீது 6 வார காலத்திற்குள்
குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் 2023 ஆம் ஆண்டில் தெரிவித்தது. ஆனால் 19 வார காலம் கடந்தும் அதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
நீதிபதியிடம் குற்றப்பத்திரிக்கை தயார் என்று சொல்லிவிட்டு இதுவரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் அதை உடனே தாக்கல் செய்ய கோரி அறப்போர் இயக்கம் கடந்த வாரம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் அனுப்பிய நிலையில்
மழைநீர் வடிகால், சாலைப் பணிகளுக்கான டெண்டர்களை முறைகேடாக முடிவு செய்ததன் மூலம், கடந்த அதிமுகவில் எடப்பாடி கே பழனிச்சாமி முதல்வராக இருந்த அன்றைய ஆட்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக உள்ள குற்றம்சாட்டில். மழைநீர் வடிகால்கள் அமைக்க 290 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சாலைகள் அமைப்பதற்காக 246 கோடி ரூபாயிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் ஒப்பந்தாரர்களை முடிவு செய்வதில் விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும், எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும், அதன் மூலம் 26.61 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஊழல் வழக்கு பதிவு தற்போது செய்துள்ளது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை. புகாரில் எஸ்.பி வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சியின் 10 பொறியாளர்கள் மீது ரூபாய். 26.61 கோடி முறைகேடு செய்ததாக ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் செயற்பொறியாளர் முருகன், கண்காணிப்புப் பொறியாளர் சின்னச்சாமி, செயற்பொறியாளர்கள் சரவணமூர்த்தி, பெரியசாமி, சின்னதுரை, நாச்சன், முன்னாள் செயற்பொறியாளர் சுகுமார், கண்காணிப்புப் பொறியாளர் விஜயகுமார், தலைமைப் பொறியாளர் நந்தகுமார், முதன்மைப் பொறியாளர் புகழேந்தி உள்ளிட்டோர் மீது ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 வருட காலமாக திமுக அரசு இழுத்தடித்த நிலையில் (குறிப்பு - கவர்னர் அனுமதி தேவை இல்லை) என்ற நிலையில் புகார் மீது தற்பொழுது FIR பதியப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் இந்நாள் மாநகராட்சி உயரதிகாரிகள் உட்பட இந்த வழக்கில் குற்றவாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். அடுத்த 2 மாதங்களில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் நிலை வந்தது.
கருத்துகள்