முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லெபனானில் தரைவழியில் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் ராணுவம். சர்வதேச விமானங்கள் ரத்து

எல்லையோரம் உள்ள மக்கள் உடனே வெளியேற வேண்டும் என உத்தரவு லெபனானில் தரைவழியில் தாக்குதலைத் தொடங்கியது


இஸ்ரேல் ராணுவம். சர்வதேச விமானங்கள் ரத்து நேற்று இரவு முழுவதும் இஸ்ரேலியர்களை தூங்கவிடாமல் ஈரான் ஏவுகணைத் தாக்குதல். முதன்முறையாக 80 அடி ஆழ பங்கர் குழிக்குள் ஓடி ஒளிந்த இஸ்ரேல் பிரதமரரைக் கேளிக்கை செய்து ஈரான் ராணுவம் ட்வீட்..!வளைகுடா போர் துவங்கிய பொழுது,  இஸ்ரேல் இதே போலத்தான் அரேபிய நாடுகளின்  விமானப் படைகளை திடீரெனத் தாக்கி, முடக்கி,  வான்வெளியை தனதாக்கிக் கொண்டது. 

இப்போது , ஈரான் ,  இஸ்ரேலின் விமானப்படையை ஓரளவாவது நாசப் படுத்தியிருக்கிறது

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா நேரடி மோதல் லெபனானில் தரைவழித் தாக்குதலால் போர் பதற்றம் தீவிரம் லெபனான் மீது தரைவழி தாக்குதலைத் தொடங்குவதாக இஸ்ரேல் அறிவித்த நிலையில், லெபனானின் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவமும், ஹிஸ்புல்லா படைகளும் நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. எல்லையோரத்தில் இரண்டு இடங்களில் மோதல் நடைபெறுவதாகவும். அதில் ஒரு தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.  தெற்கு லெபனானில் நடைபெற்றுவரும் இன்றைய மோதல்கள் ‘முதல் சுற்றுப் போரின்’ ஒரு பகுதி என்று ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.



அதன்  செய்தித் தொடர்பாளர் கூறும் போது, “எங்களது படைகளும், போராளிகளும் எதிரிகளை (இஸ்ரேல்) எதிர்கொண்டு தாக்குவதற்கு முழு அளவில் தயாராக உள்ளனர். இஸ்ரேல் ராணுவத்துடன் மோதுவதற்கு எங்களின் போராளிக் குழுக்களிடம் போதுமான ஆயுதங்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டு தரப்புகளும் நேரடி மோதல்களை அறிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் தங்கள் மண்ணில் ஊடுருவியுள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது. லெபனானில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ் - இஸ்ரேல் எல்லையோரத்தில் ஐக்கிய நாடுகள் கண்காணிப்பில் உள்ள நீலக் கோடு எல்லையை இஸ்ரேல் மீறி உள்ளே வந்திருப்பதாக லெபனான் ராணுவம் உறுதி செய்துள்ளது

தெற்கு லெபனானை விட்டு உடனடியாக வெளியேறவும்’ - இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை

இரண்டு பள்ளிக் குழந்தைகள் சண்டையிடுவது போல இஸ்ரேலும் ஈரானும். நடந்து கொள்வதாக அமெரிக்காவில் ட்ரம்ப் கருத்து



லெபனானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் வீரர் ஒருவர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளது. ஐடிஎஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேப்டன் எய்டன் யிட்சாக் லெபனான் எல்லைக்குள் புதன்கிழமை நடந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். 22 வயதான எய்டன், கொரில்லா யுத்தத்தில் சிறப்பு பெற்ற கமாண்டோ பிரிவின் அங்கமான எகோஸ் தளபதியாக இருந்தார்” எனத் தெரிவித்துள்ளது.




மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமடைந்துள்ள மோதலை இன்று கண்டித்த ஐ.நா. பொதுச் செயலர் குத்ரேஸ் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் இந்தப் பிரச்சினையில் ‘வரவேற்கப்படாத நபர்’ என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இஸ்ரேல் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலை கண்டிக்கத் தவறிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் இஸ்ரேலுக்கு எதிரானவர். தீவிரவாதிகள், கொலைகாரர்களுக்கு அவர் ஆதரவு தருகிறார். குத்ரேஸ் ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் ஒரு கறையாக நினைவு கூரப்படுவார்" எனச் சாடியுள்ளார். ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.


இது குறித்து அந்நாட்டுத் தலைவர், “ஈரான் ஒட்டு மொத்த பிராந்தியத்தையும் நெருப்புக்குள் தள்ளியுள்ளது. என்ன விலை கொடுத்தாவது இது நிறுத்தப்பட வேண்டுமென தெரிவித்தார். ஜெர்மனியும் அதன் கூட்டாளிகளும் போர் நிறுத்தத்துக்காக தொடர்ந்து முயன்று வருகின்றன.


பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை நோக்கி ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

ஈரானின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் மிகப் பெரிய தவறை செய்துவிட்டது. இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும். யாஃபா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் தெஹ்ரானின் (ஈரான் தலைநகர்) தலையீடு இருந்தது. நம்மை தற்காத்துக் கொள்ளும் நம்முடைய உறுதியை ஈரான் புரிந்து கொள்ளவில்லை.” எனத் தெரிவித்திருந்த தற்கிடையில், இஸ்ரேல் கொடுக்கும் பதிலடி கடுமையானதாக இருக்க வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் யார் லாபிட் தெரிவித்துள்ளார்.ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டுத் தலைவர், “ஈரான் ஒட்டு மொத்த பிராந்தியத்தையும் நெருப்புக்குள் தள்ளியுள்ளது. என்ன விலை கொடுத்தாவது இது நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். ஜெர்மனியும் அதன் கூட்டாளிகளும் போர் நிறுத்தத்துக்காக தொடர்ந்து முயன்று வருகின்றன.


 “ஈரானில் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் பாதுகாப்பு சூழலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதைக் கருத்தில் கொண்டு அங்கு இந்திய குடிமக்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதோடு தெஹ்ரானில் அமைந்துள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அங்கு வசிக்கும் இந்திய மக்களைகா கேட்டுக் கொள்கிறோம்” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனிடேயே, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள மருத்துவ அறிக்கைகளின் படி, தெற்கு கான் யூனிஸில் 30 பேர், வடக்கு காசாவில் 25 பேர், மத்திய காசாவில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கான் யூனிஸில் கொல்ப்பட்டவர்களில் 12 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேற்கு காசாவில் ஆதரவற்றோருக்கான அல் அமால் நிறுவனத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்கி 5 பேரைக் கொன்றுள்ளது. இரண்டு தரப்புகளும் நேரடி மோதல்களை அறிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் தங்கள் மண்ணில் ஊடுருவியுள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது.

‘நீலக் கோட்டை மீறிய இஸ்ரேல்’ - இரண்டு தரப்புகளும் நேரடி மோதல்களை அறிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் தங்கள் மண்ணில் ஊடுருவியுள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது. லெபனானில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ் - இஸ்ரேல் எல்லையோரத்தில் ஐக்கிய நாடுகள் கண்காணிப்பில் உள்ள நீலக் கோடு எல்லையை இஸ்ரேல் மீறி உள்ளே வந்திருப்பதாக லெபனான் ராணுவம் உறுதி செய்துள்ளது.

‘தெற்கு லெபனானை விட்டு உடனடியாக வெளியேறவும்’ - இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை

 “இரண்டு பள்ளிக் குழந்தைகள் சண்டையிடுவது போல இஸ்ரேலும் ஈரானும்...” என ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை


லெபனானுக்குள் இஸ்ரேல் வீரர் உயிரிழப்பு: லெபனானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் வீரர் ஒருவர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளது.   ஐடிஎஃப் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “கேப்டன் எய்டன் யிட்சாக் லெபனான் எல்லைக்குள் புதன்கிழமை நடந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். 22 வயதான எய்டன், கொரில்லா யுத்தத்தில் சிறப்பு பெற்ற கமாண்டோ பிரிவின் அங்கமான எகோஸ் தளபதியாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளது.             



                ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போரில் தற்போது மற்ற நாடுகளும் தலையிடும் வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது. தற்போது ரஷ்யா நேரடியாகவே கருத்துத் தெரிவித்துள்ளது. நேரடியாக இந்த விவகாரத்தில் ரஷ்யா களமிறங்கி உள்ளது. நேற்று ஈரான் தாக்குதலுக்கு முன்பாக ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்புகொள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீவிரமாக முயன்றுள்ளார். ஏற்கனவே, ஈரான் கேட்ட ராணுவப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நவீனரேடார்களை மாஸ்கோ வழங்கத் தொடங்கியுள்ளது. ஈரானுக்கு ராணுவ உதவிகளை ரஷ்யா தீவிரமாகவே வழங்கி வருகிறது.  இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேலைக் குறிவைத்து ஏவப்படும் ஏவுகணைகளைத் தகர்க்குமாறு அமெரிக்கப் படைகளுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார். ஈரானின் 80 சதவீதம் ஏவுகணைகளை இஸ்ரேலில் இலக்கைத் தாக்கி உள்ளதாகவே உலகப் போர் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கெல்லாம் கண்டிப்பாக இஸ்ரேல் பதிலடி கொடுக்கும்.. அந்த பதிலடி போரைக் கூட உருவாக்கும். ஏற்கனவே பல நாடுகள் போரில் ஈடுபட்டு வரும் நிலையில். இஸ்ரேலின் பதிலடி வெறும் போரை மட்டும் உருவாக்காது..அது உலகப்போரையே உருவாக்கும் நிலை தான் தெரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...