முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோயம்புத்தூர் திருட்டு வழக்கில் சிக்கிய கும்பல் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் கைவரிசை

தமிழ்நாட்டிலுள்ள பல பகுதிகளில் வீடுகளில் திருடிக் கொள்ளை அடித்த பணத்தில் பங்களாவும்,  நூற்பாலையும் விலைக்கு வாங்கிய கும்பல் சிறையிலடைப்பு.


முதலில் தேனி காவல்துறை இவர்களில் இரண்டு பேரைக்  காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது, சுமார் ரூபாய்.49 லட்சம் மதிப்புள்ள நகைகளை தங்கக் கட்டிகளாக்கி பூமியில் புதைத்து வைத்த தையும் பறிமுதல் செய்தனர்.    கொள்ளையர் திருடிக் கொள்ளையடித்த பணத்தில் 4 கோடிக்கு நூற்பாலை  தேனி கும்பல் சிக்கியது எப்படி?

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வந்த கும்பல், திருடிய பணத்தில் நான்கு கோடிக்கு நூற்பாலையை விலைக்கு வாங்கிக்  கைதான அம்சராஜன் மற்றும் மூர்த்தி தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி சுற்று வட்டாரப் பகுதியில் 2020 ஆம் ஆண்டு ஆட்கள் இல்லாத ஐந்து வீடுகளில் பணம், நகை உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன. அதே போல் 2024 ஆம் ஆண்டும் நான்கு வீடுகளில் சுமார் 88 சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள், பணம் எனத் திருடப்பட்டது.


இச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வந்தனர். திருட்டு சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிசிடிவி கேமரா, கைரேகை என எதுவும் சிக்காததால் குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் காலதாமதமானது. இதனால் பழனிசெட்டிபட்டி காவல்துறை ஆய்வாளர் சிவராமக்கிருஷ்ணன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த மூர்த்தி (வயது 20) மற்றும் பெரியகுளத்தைச் சேர்ந்த அம்சராஜன் (வயது 31) ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது  இருவரையும் கோயம்புத்தூர் காவல்நிலையத்தில் வேறு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்திருந்த நிலையில், அவர்களுக்கு தேனியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தொடர்பு எனத் தெரிய வரவே  மூர்த்தி மற்றும் அம்சராஜனை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருவரையும் காவலில் எடுத்த பழனிசெட்டிபட்டி காவல் துறை ஆய்வாளர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக மூர்த்தி, அம்சராஜன் மற்றும் இவர்களது நண்பர்கள் சுரேஷ் மற்றும் அருண்குமார் ஆகியோருடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆட்கள் இல்லாத வீடுகளில் புகுந்தும், ஆட்கள் உள்ள வீடுகளில் அவர்களைக் கட்டி வைத்தும் நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துள்ளனர். அந்தப் பணத்தை மூர்த்தி மனைவி அனிதா பிரியா, தாய் சீனித்தாய், சகோதரி லட்சுமி மற்றும் அவர் கணவர் மோகன் ஆகியோரிடம் கொடுத்து வைத்துள்ளார். மேலும், திருடிய பணத்தில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் நான்கு கோடி ரூபாய்க்கு விலைக்கு வந்த பழைய நூற்பாலையை விலைக்கு வாங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், மூர்த்தி மற்றும் அவரது மனைவி திருடிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததுடன், திருட்டு பணத்தில்  மனைவி அனிதா பிரியாவை சட்டம் பயின்ற வக்கீலாக்கியுள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி, தேனி மாவட்டத்தில்  உள்ள மாரியம்மன் கோயில்பட்டி பகுதியில் உள்ள முட்புதர்களில் பள்ளம் தோண்டி பாலித்தீன் கவர்களால் சுற்றி பூமியில் புதைத்து வைத்துள்ளனர். அதற்கு மறுநாள் கோயம்புத்தூர் காவல்துறை வேறு ஒரு திருட்டு வழக்கில் மூர்த்தி, அம்சராஜன், சுரேஷ் மற்றும் அருண்குமாரைக் கைது செய்ததால், புதைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகளை எடுக்க முடியாமலே போனதாக காவல்துறை ஆய்வாளர் விசாரணையில் தெரிய வந்தது. அதையடுத்து தேனி வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் பூமியில் திருடர்கள் புதைத்து வைத்திருந்த 88 சவரன் 49 லட்சம் மதிப்புள்ள 6 தங்கக் கட்டிகளை மீட்டனர்.  தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம் என தமிழ்நாடு முழுவதும் 30 காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருடிய இவர்கள் மீது சுமார் 90 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருட்டு குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக மூர்த்தியின் மனைவி அனிதா பிரியா, தாய் சீனித்தாய், சகோதரி லட்சுமி மற்றும் அவரின் கணவர் மோகன் ஆகியோரை இராஜபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...